படைப்பிலக்கிய
ஆர்வலர்களுக்கு இலத்திரனியல்
வரப்பிரசாதம்
(யாழ்ப்பாணம்
ஆவரங்கால் என்னுமிடத்தில்
பிறந்த கதிர்.பாலசுந்தரம்,
பேராதனைப்
பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார்.
இலங்கையின்
பல்வேறு பாகங்களில் தொழில்
புரிந்த இவர்,
1951 முதல்
அரசினர் பாடசாலை ஆசிரியராகக்
கடமையாற்றினார்.
தெல்லிப்பழை
யூனியன் கல்லூரியில் 1972
ஆம்
ஆண்டு ஆசிரியராகப் பணியைத்
தொடங்கி,
1979 முதல்
யூனியன் கல்லூரியில் ஒரு
தசாப்தகாலம் கல்வி நிர்வாக
சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்
‘Saturday Review’
என்னும்
ஆங்கிலவாரச் சஞ்சிகையின்
ஆசிரியர் தலையங்கத்தினால்
யாழ் குடாநாட்டின் அதிசிறந்த
அரசாங்க பாடசாலை அதிபர் எனப்
போற்றப்பட்டவர்.
எழுபதுகளின்
ஆரம்பத்தில் இவரது படைப்புகள்
சிரித்திரன்,
றோசாப்பூ
போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின.
கலாநிதி
க.குணராசா
(செங்கை
ஆழியான்)
தனது
‘ஈழத்துச்
சிறுகதை வரலாறு’
என்னும்
நூலில் இவரது ‘அந்நிய
விருந்தாளி’
என்னும்
சிறுகதைத்தொகுப்பில் உள்ள
‘உயர
உயரும் அன்ரனாக்கள்’
என்னும்
சிறுகதை,
1961 – 1983 காலகட்டத்தில்
வெளிவந்த ஆயிரக்கணக்கான
சிறுகதைகளுள் –
தெரிவு
செய்யப்பட்ட சிறந்த
பதினெட்டுக்கதைகளுள் –
ஒன்றெனக்
குறிப்பிட்டுள்ளார்.
அயராமல்
இயங்கிக் கொண்டிருக்கும்
மூத்த தலைமுறை எழுத்தாளரான
இவர் தற்போது கனடாவில்
இருக்கின்றார்.
)