1. உதயம்.
வெண்பனி
போர்த்திருந்தது. மரங்கள் நிலவில் குளிர்ந்திருந்தன. கண்கள் அரைத்தூக்கத்தில்
செருகிக் கொள்ள போர்வைக்குள்ளிருந்து விழித் தெழும் மனிதர்கள்.
வெளியே ஆரவாரம்.
ஏதோ ஒரு கலவரத்துடன் தெருவில் விரைந்து கொண்டிருந்தார் பொன்னம்பலம். வெறும்
மார்பு. மயிர்க்கால்களில் நுழைந்து கிச்சுக் கிச்சு மூட்டுகின்ற குளிர் - நரம்பை
சில்லிட வைக்கும் குளிர்.
“சங்கதி
தெரியுமா?”
“என்ன?”
“நேற்றிரவு
அம்மன் கோயில் சிலை களவு போயிட்டுது.”