Wednesday, 30 December 2015

சுத்திக் காட்டுறார்


 50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 4

நம்மவர்கள் போட்டிக்கு வீடு கட்டுவது ஒன்றும் புதுமை அல்ல.

சுந்தரலிங்கம் தம்பதியினர், தமது நண்பர் முரளிக்கு தமது புது வீட்டைச் சுற்றிக் காண்பித்தார்கள்.

முரளியின் மகன், சுந்தரலிங்கத்தின் மகளைக் காதலிக்கின்றான். அது எல்லோருக்கும் தெரியும்.


”ம்…. என்னுடைய மகன்ரை வீட்டை எனக்கே சுத்திக் காட்டினம்” தனக்குள் கறுவிக் கொண்டார் முரளி.

Monday, 28 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 27 - உலக நீதிமன்றம்

  
            ஜீவிதாவின் வழக்கின் தீர்ப்பு வழங்கும் தினம். அது எவ்வாறு அமையுமோ என்ற ஏக்கம் அமிர் பூமா இருவரிடமும் நிரம்பவே பிரதிபலித்தது.

            பிரிடிஷ் லேடி அன்ரியின் படுக்கை அறை யன்னலின் திரைச் சீலையை நீக்கிப் பூமா வெளியே பார்த்தாள். காலைச் சூரியனின் ஆரவாரமே இல்லை. இருண்ட வானம் மூஞ்சியைஉம்என்று வைத்திருந்தது. கீழே வீதியில் நிறுத்தி இருந்த கார்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தி இருந்தன. கறுப்பு வீதி வெள்ளைக் கம்பளத்துள் சயனித்தது.

            பூமா தனது பச்சைச் சுடிதார் உடையில் ஓல்ட் பெயிலி மத்திய கிறிமினல் நீதிமன்றம் செல்வதற்காகப் படிவழிய கீழே இறங்கியபடி தனது பச்சைச் சிலைட்டைச் சரிபார்த்தாள்.

Thursday, 24 December 2015

காணி நிலம் வேண்டும் - சிறுகதை

 

கிணற்றடியில் குளிக்கும் சத்தம் கேட்டது. சுந்தரலிங்கம் எழும்பி விட்டார். அந்த வீட்டிற்கு அலாரம் என்றும் அவர்தான். அதிகாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கும் இந்தச் சத்தம் பதினொரு மணியளவில்தான் அடங்கும்.

எந்தவித அவலங்களுமற்று பொழுது புலர்ந்திருந்தது. அங்கு நின்றபடியே கிழக்கே விரிந்து கிடக்கும் வயல் வெளியையும், வடக்கேயுள்ள தென்னந் தோப்பையும் பார்த்தார் அதிபர் சுந்தரலிங்கம்.

அதிபர் நாலாம்வாய்க்காலிலே பெரிய  புள்ளி. ஏராளமான நிலபுலங்களுக்குச் சொந்தக்காரர். அவரது வயலிலே வேலை செய்வதற்கென்றே ஏராளமான மக்கள் அவரது வீட்டைச் சுற்றி குடிகொண்டுள்ளார்கள். பாடசாலை முடிவடைந்ததும் வயல் வேலைகளில் இறங்கி விடுவார் அவர்.

Sunday, 20 December 2015

CONTAGIOUS DISEASES - short story


Arun Vijayarani / Translated by Thamizhachi Thangapandian


(Published in ‘KANAIYAZHI’ – August 2000 – A special Issue on Australia)


“I have not called you to Australia to bore me with load of advice everyday”.

“I would have stayed there back at home, had I known that you had called me only to witness this horrible show”.

“Horrible show… if I am bold that’s horrible… if I am timid, I am perfect. Is it not that?”

Arulamma gazed at her daughter, who is now talking with raised eyebrows, gesturing with her index finger boldly. Was this the same Subhashini who would whisper behind her pallav begging her,

“Amma, request Appa to consider my preference before fixing up the marriage with the groom – Amma, please”? Arulamma wondered at the changed Subhashini – much changed after coming to Australia (²ö§¡¢Ä¢Â¡) – from a timid girl who was afraid of her father once, to a more confident woman now… changed in her dressing and in talks. How insolently does she dismiss her sense of fear with apparent nonchalance!

Saturday, 19 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 26 - தொகுப்புரை
  
             குறொம்வெல் காட்டில் ஜீவிதா கைது செய்யப்பட்டு ஏழாவது மாதம்;. கொலை செய்ய எத்தனித்தது, துப்பாக்கி வைத்திருந்தது, பயங்கரவாதி என்ற மூன்று குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, ஓல்ட் பெயிலியில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சூடுபறக்க நடந்து கொண்டிருந்தது.

            அமிரும் பூமாவும் சேர்ந்து கிறேற் பிரிட்டனின் மிகச் சிறந்த வழக்கறிஞரை ஒழுங்கு செய்திருந்தனர். ‘கொம்மன்வெல்த்முழுவதிலுமே மிகச் சிறந்த வழக்கறிஞர் என்றும், கூடுதலான கூலி அறவிடுபவர் என்றும் பிரசித்தி பெற்றவர் அந்த வெள்ளை வழக்கறிஞர்.

Wednesday, 16 December 2015

அவரைப் போல

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 3

பொங்கல் அன்று தவம் கோயிலுக்குப் போனபோது, மனைவியின் கைப்பையை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அது அவரது தோள்ப்பட்டையில் இருந்து ஊஞ்சலாட்டம் ஆடியது.

அந்தக் காட்சியை பல இளம் பெண்கள் பார்த்து விட்டார்கள்.

“எங்களுக்கும் அவரைப் போல மாப்பிள்ளை வேணும்” என்று தமது பெற்றோரிடம் அன்புக் கட்டளை இட்டார்கள் அவர்கள்.


Sunday, 13 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 25 - பிரிடிஷ்  லேடி

              ஜீவிதா காட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து முடிந்த ஒரு காலை வேளை. வெள்ளை உடைகளுக்கு மேலே குளிருக்காகக் கறுப்பு ஜகட் அணிந்ததும், அமிர் தனது அறையைவிட்டுப் படிவழியே இறங்கி வேகமாகச் சென்று கதவைத்திறந்து வீட்டைவிட்டு வெளியேறினான். அவனின் தலைக்குள் ஜீவிதாவின் எதிர் காலமும் அவனது லண்டன் வருகையின் நோக்கமும் குமைந்துபோயிருந்தன.

            ஆவரங்கால் அன்ரியின் வரவேற்பறையில் தேநீர் பருகிக் கொண்டிருந்த பூமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அமிருக்குத் திங்கட்கிழமை வேலை இல்லை. ‘எதற்காக ஆத்துப் பறந்து அமிர் வெளியே செல்கிறார்? என்னிடம் ஏதோ மறைக்கிறாரோ? அதுதான் வெளியேறும் போது வழமையில் சொல்லும் வாழ்த்துக்களையும் அவர் சொல்லாமல் நழுவுகிறார். என்னிடமிருந்து மறைக்க அப்படி என்ன இருக்கிறது?’

Tuesday, 8 December 2015

விகுதி மாற்றம் - சிறுகதை

மெல்பர்ண் தெருவோரத்து மரங்கள் பச்சையிழந்து கிழடு தட்டிப் போயிருந்தன. குளிர்ந்து போயிருந்தது மாலை.

வேலையிலிருந்து வீடு வந்த சேரனுக்குப் பசி பொறுக்க முடியவில்லை. நேராக சாப்பாட்டு அறையை நோக்கி ஓடினான். பாரதி சாப்பாட்டை சுடச் சுடப் பரிமாறினாள். சைனீஸ் றெஸ்றோறன்ட் - ஃப்ரைட் றைஸ்தான். இரண்டு கவழம் உள்ளே செல்ல தெம்பு வந்தது. தெம்பு வர, வீறாப்பும் வந்து வீண் பேச்சாகியது.

"ஒண்டு சொல்லுவன். பிறகு சண்டைக்கு வரப்படாது" என்று பீடிகை போட்டான் சேரன்.
"சாப்பிடேக்கை இப்ப ஏன் பிரச்சினையைத் துவங்கிறியள்?" பாரதி சொன் னாளேயொழிய, உள்ளூர அவன் என்ன சொல்லப் போகின்றான் என்பதில் அவள் மனம் ஆவல் கொண்டது.

"என்ரை மனேஜர் போல் நோமிண்டன் சொல்லுறார் - இஞ்சை பெம்பிளப் பிள்ளையளை வளர்க்கிறதுதான் கஷ்டமாம். ஆம்பிளப் பிள்ளையள் பரவாயில்லையாம்."

" சும்மா போங்கோ. எல்லாம் அவரவர் வளர்க்கிறதைப் பொறுத்தது."

Monday, 7 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 24 - ஒத்திப்போட்ட  புத்தி

         
            நேரம் பகல் ஒரு மணியாகப் போகின்றது. கொதிக்கும் சூரியன் வெப்பக் கதிர்களால் குறொம்வெல் காட்டைத் தீய்த்துக் கொண்டிருந்தான். அந்தக் குட்டைக் காடு முழுவதும் துப்பாக்கி ஓசையின் பின் நிசப்தமாகிவிட்டது.

            ஜீவிதா உட்பட யாருமே ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் இன்னும் வாய்  திறக்கவில்லை. என்ன நடந்தது, ஏது நடந்தது என்பது புரியாது திகைத்து அஞ்சி நடுங்கினார்கள்.

            இரண்டு கார்களுக்குமிடையில் உள்ள சிறு வெளியில் இரு வெள்ளைப் பெடியன்களும் குப்புறக் கிடந்தார்கள். அவர்களின் அருகே ஜீவிதாவை நோக்கியபடி அமிர் நிலத்தில் மல்லாக்காகக் கிடந்தான்.

Saturday, 5 December 2015

இவ்வளவுதான் உலகம்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 2

ரெலிவிஷனின் காலம் முடிந்து, ஐ–பாட் கொம்பியூட்டருடன் நேரம்  கரைகின்றது. உள்ளங்கையில் உலகம் தெரிகின்றது.

கழிவு அகற்றும் கவுன்சில் வாகனம் வருகின்றது. அதனை வைப்பதற்கும் எடுப்பதற்கும் மாத்திரம் முன்புறம் போவதுண்டு. எதிர் வீட்டிலிருந்து ஒருவன் புன்னகைக்கின்றான்.

இதுவரையும் அங்கே ஒரு பெண்ணைத்தான் கண்டிருக்கின்றேன்.

கடந்த டிசெம்பரில் அந்த வீடு விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. இப்போது அடுத்த கிறிஸ்மஸ்.

அவனே என்னை நோக்கி வருகின்றான்.

அவன்!

என்னுடன் வேலை செய்யும் சக நண்பன.

Friday, 4 December 2015

ஆழியாள் மதுபாஷினி




  


திரும்பிப்பார்க்கின்றேன்

திருகோணமலையிலிருந்து  அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன்   பயணித்த  ஆழியாள் மதுபாஷினி

அவுஸ்திரேலியாவின்  ஆதிக்குடிகளின்  துயர்மிகு வாழ்வின்  பக்கங்களை   தமிழுக்கு  அறிமுகப்படுத்தியவர்

தமிழர்  வாழ்  நிலங்களில்  புதிய  பரிணாமமாக  ஆறாம் திணையை   ஆய்வுக்குட்படுத்தும்  ஆளுமை

                                 முருகபூபதி

பால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை   அப்பிள்  பழங்களின்  ஊடாகத்தான் அறிந்துகொண்டேன்.

Thursday, 3 December 2015

அகதியும் அதிதியும்



50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 1

தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.

பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.

வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனிற்கும் சண்டை.

”நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்? எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.

Wednesday, 2 December 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (8)

Anybody there?

வீடு ஒன்று வாங்குவதற்காக மெல்பேர்ணின் மேற்குப்பகுதிகளில் அலைந்து திரிந்தேன். எனக்குப் புதுவீடு கட்டுவதில் இஸ்டமில்லை. என்னால் முடியாது. நான் ஒரு சோம்பேறி. யாராவது கட்டிய வீட்டை வாங்கி அதை அழகுபடுத்துவதில்தான் பிரியம் எனக்கு.

பார்க்காத வீடுகள் இல்லை. போகாத இடங்கள் இல்லை. ஓரளவிற்குப் பிடித்துக் கொண்டுவிட்டால், மகனையும் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவோம். பாடசாலையில் இருந்து மகனைக் கூட்டிக்கொண்டு வரும்போது அந்த வேலையைச் செய்வோம். அப்போது மகனுக்கு 13 வயதிருக்கும்.

ஒரு றியல் எஸ்றேற்றில் வேலை செய்யும் வியட்நாமியனுடன் கொஞ்ச நாட்கள் அலைந்து திரிந்தேன். ஒருநாள் அவனுடன் Burnside Heights என்னும் இடத்தில் உள்ள வீட்டைப் பார்ப்பதற்காகச் சென்றோம். பாதை வளைந்து வளைந்து ஓடியது. வீடுகள் பெட்டிகள் போல கட்டம் கட்டி நின்றன.

அந்த வீட்டிற்கு முன்னால் ஒரு கார் நின்றது. எங்களைக் கூட்டிச் சென்ற வியட்நாமியன் அந்த வீட்டுக் கராஜைத் சடசடவெனத் தட்டி,

Anybody there?

Tuesday, 1 December 2015

வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா

             

        வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.  பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்" வன்னி '  நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும்.
    மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப் பட்டிருக் கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருபக்கச் சார்பானதாகும்.
     வன்னி நாவலையும் தமிழரின் மஹாவம்சமாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் பழைய மஹாவம்சத்துக்கும் இதற்கும் பாரியவேறுபாடு.வன்னி நாவல் உண்மையை சொல்லி நிற்கிறது.ஊத்தைகளையும் காட்டுகிறது.உலுத்தர்களை யும் காட்டுகிறது.எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது.இது இந்த நாவ லின் சிறப்பு எனலாம்.

Monday, 30 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 23 - காற்றில் மிதந்த கறுப்பு நரி

             அமிர் வேலை செய்யத் தொடங்கி ஐந்தாவது வாரம் ஒரு புதன்கிழமை. நேரம் காலை 8.15. வானம் வெளித்திருந்தது. இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது.

            இதமான காற்றுள்ளும் கறுப்பு நரி பதுங்கி இருந்து பாயும் என்பது அமிருக்குத் தெரியாது.

            யு508 நெடுஞ்சாலையின் ஆறு ஒழுங்கைகளையும்  நிறைத்து வாகனங்கள் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டு இருந்தன. அவற்றுள் ஒன்று ஜீவிதாவின் இருண்ட பச்சை ஃபோட் கார். அது லண்டன் மாநகர எல்லைகளைக் கடந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக வடக்குத் திசை நோக்கிப் படு வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. முன் ஆசனத்தில் ஜீவிதாவின் இடப் பக்கம் இருந்த அமிர் யன்னலுக்கு வெளியே பார்த்தான்.

Monday, 23 November 2015

வெள்ளைப்புகை - குறும்கதை



சேகரும் வசந்தியும் வாடகை வீட்டிலிருந்து - சொந்தமாக வீடு ஒன்று வாங்கிப் போனார்கள்.

இவர்களுக்கு அயலவர்களிடம் வரவேற்பு நன்றாக இருக்கவில்லை. வீட்டின் இடது புறக்காரரான 'அசல்' வெள்ளை மாத்திரம் தோழமையுடன் பழகினார். வலது புற வீட்டுக்காரரை யாரென்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. மதிலை உயர்த்தி தங்களையும் வீட்டையும் மறைத்திருந்தார்கள். எதிர்வீட்டுக்கார கிரேக்க நாட்டவன் (Greek) முகம் சுழித்தான். அவன் மனைவியின் முகம் இவர்களைக் காணும் போதெல்லாம் குதிரை போல நீண்டுவிடும். இவர்களுக்குப் பக்கத்து வீடான சீனாக்காரரின் உதட்டிற்குள் புன்னகை. அவுஸ்திரேலியா பல்லினங்களையும் கொண்டது

Sunday, 22 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 22 - கடவுளின்  கட்டளை
  
            சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்துக்கு எதிர்ப்பக்கம் உள்ள தங்கு நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பூமாவுக்கு முன் ஆசனத்தில் மூத்தான் மனைவி இருந்தாள். மூத்தான் மனைவி எப்பொழுது வம்பிற்கு இழுப்பாளோ என்ற பயத்தில், படமெடுத்த பாம்பைக் கண்ட முயல் குட்டி போல பூமா நடுங்கிக்கொண்டு இருந்தாள்.

            நேரம் பிற்பகல் இரண்டு மணியைக் கடந்துவிட்டது.