ஞானசேகரன் அவர்கள்
வைத்திய அதிகாரியாக இலங்கையில் பணியாற்றுபவர். சிறுகதை உலகில் கடந்த நாற்பது
வருடங்களாக சளைக்காமல் எழுதி வருபவர். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவர்.
காலதரிசனம், அல்சேஷனும் ஒரு
பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுப்புகள், புதியசுவடுகள்(1977), குருதிமலை(1980),
லயத்துச்சிறைகள் நாவல்கள், கவ்வாத்து குறுநாவல், அவுஸ்திரேலியப்பயணக்கதை பயண இலக்கியம் என்பவை இவர்
இலக்கிய உலகிற்கு தந்த படைப்புகள். இவற்றுள் புதியசுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டும் இலங்கை அரசின் சாகித்திய
விருதுகளைப் பெற்றவை. மேலும் குருதிமலை நாவலிற்கு 'தகவம்', இலக்கியப்
பேரவை என்பவற்றின் சான்றிதழும் கிடைத்துள்ளன. கவ்வாத்து சுபமங்களா சஞ்சிகை நடத்திய
ஈழத்து நாவல் போட்டியில் பரிசு பெற்றது.
ஞானம் என்ற இலக்கிய
சஞ்சிகையை கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்.
மல்லிகைக்கு அடுத்தபடியாக இலங்கையிலிருந்து தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை இது.