கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 5 - கரி பூசிய கறுப்பு
நரி
கில்லாடி ஆனந்தத் தேன் மழையில் நீராடினான்.
பொலிசிலிருந்து மீண்ட மூத்தானைத்; தாவியணைத்து
வரவேற்பு அறைக்குக் கூட்டிச் சென்ற பொழுது, “கில்லாடி அண்ணை, நாய்ப் பொலிஸ்காரன் வழக்குத் தொடுக்கப்
போகிறானாம்" என்று பொரிந்தான் மூத்தான்.
“பயப்படாதே மூத்தான்.
வழக்கு வெல்கிறது இந்தக் கில்லாடிக்குச் சின்ன விடயம். நல்ல வெள்ளைக்கார
பரிஸ்ரராகப் பிடிப்பம். அது சரி, என்ன
நடந்தது?"
“கோட்டானோ
ஊத்தைவாளியோ சைகை தந்திருந்தால் பொட்டலங்களை தூக்கி வீசி எறிந்துபோட்டு மாயமாக
மறைந்திருப்பேன்."
“இரண்டு பேரும் என்ன
செய்தவன்கள்?"
“கோட்டான் வழமையைப்
போலத்தான். வெள்ளைப் பெட்டையளிலே சொக்கிப் போய் நின்றான். ஊத்தைவாளி கண்ணிலேயே
படவில்லை."
“வரட்டும் அவைக்கு
நல்ல பாடம் படிப்பிக்கிறன். உவன்களை இனி எங்கள் கூட்டத்தாலே கலைக்கவேணும்."
“கில்லாடி அண்ணை.
அப்படிச் செய்து போடாதையுங்கோ. அவன்கள் போய் எங்களின் தொழிலை பொலிசுக்குக்
காட்டிக் கொடுத்துப் போடுவான்கள்."
“பொலிசுக்குக்
காட்டிக் கொடுத்தால், பிறகுதான்
இந்தக் கில்லாடியைப் பற்றி அவைக்கு விளங்கும். அவைக்கு விளங்கயில்லை நான், கழுதைப்புலி, எத்தனை பேரைச் சுட்டுப் பொசுக்கி வீமன்காமம் கொலனிக்குள்ளே
வீசினனான் என்று." இவ்வாறு கத்திய கில்லாடியின் கண்களில் கொலை வெறி
தெறித்தது.
“அவன்களும்
யாழ்ப்பாணத்தில் உந்தத் தொழில் செய்துபோட்டுத்தான் லண்டனுக்கு வந்தவன்கள்.
அவன்களோடு கொளுவ வேண்டாம் அண்ணை."