எதுக்கும் ஒரு கணக்கு இருக்க வேண்டும்!
சைக்கிள்
உதிரிப்பாகங்களைப் பிரித்துவிட்டு, மீண்டும் அந்தச் சைக்கிளைப் பூட்டும்போது
ஒன்றுமே எஞ்சக்கூடாது என்பார்கள்.
ஒருமுறை
நான் கொழும்பில் தங்கியிருந்தபோது, அந்தவீட்டுக்காரர் தன்னுடைய மகனைக்
காலையிலிருந்து தேடிக்கொண்டிருந்தார். மகன் அப்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தில் படித்துக்
கொண்டிருந்தான். அடிக்கடி மகன் வந்துவிட்டானா என்று தேடிக்கொண்டிருந்தார்.
“ஏதாவது
அவசரமா?” என்று கேட்டேன்.
“அப்படியொன்றுமில்லை” என்றார்.
அவரது
கணக்குவழக்குகளை மகன் தான்
எழுதி வைத்திருப்பான். மாலை மகன் வந்தபோது அவர் குட்டித்தூக்கம் போட்டுவிட்டார்.
விழிக்கும்மட்டும் காத்திருந்தான் மகன்.
“அப்பா... என்னை அவசரமாகத் தேடினீர்களாம்!”
“ஓம் மகனே... கணக்குப் பார்க்கும்போது 2 ரூபா
சோற் அடிக்குது!”
”ஏதாவது முத்திரைக்காசாக
இருக்கும் அல்லது ரீ குடிச்சிருப்பன் அப்பா!”
“மகனே! என்னத்தையாதல் செலவழி.... அதைப்பற்றி நான்
கேட்கேல்லை... நீ சரியாகச் செய்வாய் எண்டு எனக்குத் தெரியும். ஆனா எதுக்கும் ஒரு
கணக்கு வழக்கு இருக்கவேணும்” என்றார் தந்தை.
இந்த
2 ரூபாவுக்குத்தானா
அன்றையநாள் முழுவதும் அல்லாடிக் கொண்டிருந்தார் அவர். அவரிடமிருந்து நிறையவே
பாடங்கள் படிக்கலாம். கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.
No comments:
Post a Comment