Sunday, 1 November 2015

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி


 அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. 

 போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1.            உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்    இப்போட்டியில் பங்கு பற்றலாம்.

2.            ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.

3.            சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் எஸ்.பொ நினைவுச் சிறுகதைப் போட்டி- 2015 எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும்.

4.            அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.

5.            இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.

6.            போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.

7.            அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

8.            சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.

இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:
 முதலாம் பரிசு - 300 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
 இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
 மூன்றாம் பரிசு - 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

முடிவுத்திகதி: 30.11.2015
இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

போட்டி முடிவுகள் 2016 தை மாதம் முதல் வாரம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:-  real24news@hotmail.com    

மேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com இணையத்தினைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment