கதிர் பாலசுந்தரம்
அதிகாரம் 1 - நச்சுப் பாம்பு
ஊர்க் கோழிக் கறியும் அரிசிமா இடியப்பமும்
கேட்டு வந்தவனுக்கு மேயர் முகங்கோணாமல் சாப்பாட்டு மேசையில் அமரவைத்து விருந்து
வழங்கினார். அவன் கறுப்புநரிகள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன். எலிக் காதன்.
பெயர் வாசு. வயிறு புடைக்க வெட்டியபின் கோணல் வாயால் அரசியல் பொரித்தபொழுது,
“கோழிக் கறி எப்படி,
வாசு?” என்று மேயர் வினாவினார்.
“மேயர் ஐயா, அன்ரி சமைத்த கோழிக் கறி ‘சூப்பர்.’ ஆனால் உங்கள் மிதவாத அரசியல்தான் சுத்த மோசம். நீங்கள்
ஒரு தமிழ்த் துரோகி. இந்திய சமாதானப் படையின் வருகைக்கு ஆலவட்டம் வீசிய துரோகி”
என்று உறுமியவன், கறுப்புச் சேட் பொத்தானைக் கழற்றி, கையைத் நுழைத்து, நெஞ்சோடு ஒட்டி மறைந்திருந்த பிஸ்டலை உருவி எடுத்து,
மேயரின் வலக்காதுத் துவாரத்தில்
அழுத்திப் பிடித்துப் படபடவெனச் சுட்டான்.
மேயரின் மகன் அமிர் - அவனொரு யாழ் பல்கலைக் கழக
மாணவன் - தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கு சுடுகாட்டில்
வைத்து நன்றி கூறும்போது “வீரமறவர்கள்
தாம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற கறுப்புநரி விடுதலைப் போராளிகள்,
துப்பாக்கிகளை துணைக்கு வைத்துக்கொண்டு
வெறும் கையோடு நிற்கும் தம் உறவுகளிடமே வீரம் பேசுகிறார்கள், கோழைகள் போல பிஸ்டலை மறைத்துக் காவி வந்து
நிராயுதபாணி அப்பாவிகளைச் சுட்டுக் கொல்கின்றார்கள்;;, தங்கள் செயலைப் புகழ்ந்து தாமே பரணிவேறு பாடி
புறநானூற்றையே கொச்சைப் படுத்துகின்றார்கள்." அமிர் மேலும் கூறவிரும்பினான்.
கவலை மோதித் தொண்டை அடைக்கப் பேச்சை முடித்துக்கொண்டான். அவ்வளவுதான் அவன்
கூறியது.
கிழட்டுப் பூவரசுகள் சூழ்ந்த மயானத்தில்
தந்தையின் சிதையின் முன்நின்று அமிர்
உதிர்த்த வார்த்தைகள் ‘வாக்கி
ரோக்கியில்’ பறந்தன. மேயரைச்
சுட்டுக்கொன்ற கறுப்பு நரிகளால் அதை உள்வாங்கிக்
கொள்ள முடியவில்லை.
ஓரு கூட்டம் கறுப்புநரிகள் வட்டமாக நின்று
நீலவானைப் பார்த்து ஊளையிட்டன. பின்னர் அவை வாலைக் கம்பு போல நீட்டியபடி ஓடிச்
சென்று மயானப் பாதையில் அமைந்த பரவைக் கடல் ஓர மொண்டியின் ஈச்சங் கூடலில்
மறைந்திருந்தன. கிராம கிழக்கு எல்லைப்புறத்து உப்புத்தரை மயானத்தில் தந்தையின்
சிதைக்குத் தீ மூட்டிவிட்டு வீடு திரும்பும் வழியில் கறுப்பு நரிகள் அமிரைப்
பாய்ந்து பிடித்து பல்லை நெருமிப் பதம்பார்த்தன.
கூடச் சென்றவர்கள் மௌனமாகினர். தலை போய்விடும்
என்ற பயந்தான். மயானத்திலிருந்து திரும்பியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக
இருப்பதற்காக அவர்கள் கண்முன்னையே அமிரை உப்புத் தரவையில் உருட்டி உருட்டி
அடித்தனர். அருகேயிருந்து முழுசிப் பார்த்த ஊசி ஓலை ஈச்சம் புதரின் மேல் தூக்கி
வீசினர். வீசிய அமிரை மீண்டும் இழுத்தெடுத்தபோது ஒரு கறுப்பு நரியின் கால் நண்டுப்
பொந்துள் சிக்கியது. அந்த நரிக்கு ஆத்திரம் புட்டுக்கொண்டு வந்தது. உப்புக் களிமண்
படிந்த காலால் அமிரின் வயிற்றில் ஓங்கி உதைத்தது.
அமிரின் முழங்கால்கள் இரண்டையும் கயிற்றால்
நெருடிக் கட்டினது ஒரு கறுப்பு நரி. கால் இடுக்கினுள் ஒரு நீண்ட மொத்தப் பூவரசங்
கம்பைச் செலுத்தினது இன்னொரு கறுப்பு நரி. கம்பு முனைகளை இரண்டு கறுப்பு நரிகள்
தோள்;களிலே, தொண்டமானாறு கடனீரேரி சேறு மண்டிய கரையோரமாக
தெற்கு நோக்கிச் சுமந்தன. அந்தக் கம்பில் அமிர் தூக்கணாங் குருவிக்கூடு போலத்
தொங்கினான். இரு பக்கங்களிலும் கறுப்பு நரிகள் பொல்லுகளுடனும் துப்பாக்கிகளுடனும்
நடந்தன. ஒன்று பூவரசம் பொல்லால் அடித்தது. இன்னொன்று ‘பாட்டாச்’ செருப்புக் காலால் உதைத்தது. கறுப்பு நரிகளின் துப்பாக்கி ஆட்சி கோலோச்சிய
காலம். சனநாயக சுதந்திரத்தை எப்பவோ இழந்துவிட்ட சனங்கள் பத்தோடு பதினொன்று என்று
கணக்கு வைத்துக் கொண்டனர். புத்தூர் கிழக்கில் அமைந்த வாதரவத்தையில, குடிமனைகளுக்கு சற்று அப்பால் பாரிய பனை
அடைப்பில் உள்ள ஒரு இருட்டு ‘பங்கரில்’
அமிரைச் சிறை வைத்தது ‘கப்டன்’ கறுப்பு நரி. வழமையாகச் செய்வது போலக் காலில் சங்கிலி
மாட்டி வைத்தது.
மாதங்கள் நகர நகர
புதிய கறுப்பு நரிகள் மாற்றலாகி வாதரவத்தை வரும்போதெல்லாம் அவை அமிரைக் குதறின.
ழூ
1998 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் யாழ்ப்பாண மேயர்
கறுப்பு நரிப் பயங்கரவாதிகளால் கொலை செய்யப் பட்டதையடுத்து, கறுப்பு நரிகளின் வாதரவத்தைப் ‘பங்கரிலிருந்து’ தனது உயிரைக் காப்பாற்றத் தப்பியோடிய மேயரின் மகன்
அமிர் அன்று காலைதான் லண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில் அரசியல் தஞ்சம்
கோரியிருந்தான். யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவனாகிய அமிர் லண்டனில் -
குளிரின் ஊசிமுனைகள் ஓய்வுற்றிருந்த கோடையில் - தனது நெடிய கால்களைப் பதித்து
ஐந்து மணி நேரங்கூட நிறைவு பெறவில்லை.
லண்டனில் வெகு ஆடம்பரமாக வாழும் கில்லாடி அமிரை
சொலிசிட்டர் நாகப்பனின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று,
“இவர் இன்றைக்குக்
காலையில்தான் லண்டனுக்கு வந்தவர். அகதித் தஞ்சம்கேட்க" என்று கூறினான்.
“இருங்கள், தம்பி. எல்லாம் வென்றுதருகிறேன்" என்று கூறியபடி
சொலிசிட்டர் நாகப்பன் அமிரை எடைபோடத் தொடங்கினான். நாகப்பனும், கில்லாடியைப் போல லண்டனில் வாழும் முன்னை நாள்
யாழ்ப்பாண விடுதலைப் போராளி என்பதும் - அவர்கள் இருவரதும் யாழ்ப்பாணப் பின்னணி,
அட்டூழிய அக்கிரமங்களின் புழுக் கிடங்கு
என்பதும் - அமிருக்குத் தெரியுமா?
அமிர் தனக்கு எதிரே மேசையின் மறுபக்கத்தில்
இருந்த, இருண்டு திரண்டு குறுகிய
நாகப்பனைப் பார்த்தான். நாடியை மட்டும் நிறைத்த, நரைக்க ஆரம்பித்து விட்ட தனது ஆட்டுத் தாடியை வருடியபடி,
பனங்கொட்டைப் பற்கள் முழுவதும் வெளியே
தெரியக் கெக்கட்டம் போட்டுச் சிரித்து அட்டகாசமாக வார்த்தைகளைக் கொட்டிய அந்த
சொலிசிறறர் நாகப்பனின் ஆந்தை விழிகளும் பார்வையும் அமிரை அச்சுறுத்தின.
சொலிசிற்றர் நாகப்பன் தனது கருஞ்சிவப்புக்
கழுத்துப் பட்டியை வலக் கையால் இழுத்து 'பெடியன் மன்மதனாட்டம் இருக்கிறான். பெரிய இடத்து வடுவா போலத் தெரிகிறது. நீ
தப்பேலாது வடுவா” என்று மனதுள்
கறுவியபடி, அமிரைத் தன்னிடம்
அழைத்து வந்த, அமிரின் அருகே அமர்ந்திருந்த, தனது ஆள்பிடி முகவர் காகக்கூட்டுத் தலையன் குள்ளமான
அசல் சட்டிக் கறுவல் கில்லாடியைப் பார்த்து இடக் கண்ணைச் சிமிட்டினான். அர்த்தம்
புரிந்த கில்லாடி கண் பாசையாhல்
பதில் சொன்னான். வீதியில் போகும் இரட்டைத்தட்டு சிவப்பு பேருந்து வண்டிகளைக்
கண்ணாடிச் சுவரூடாகப் பார்த்துக் கொண்டிருந்த அமிர், அவர்களின் நச்சுச் சமிக்கைகளைக் கவனிக்கவில்லை.
அமிர் திரும்பிக் கில்லாடியைப் பார்த்தான்.
குட்டையான கில்லாடி தனது காகக்கூட்டுத் தலையின் காதையண்டிய கீழ்ப் பாகத்திலும்
பிடரியிலும் ஆங்காங்கு நரைத்து நீண்டும் வளைந்தும் சிலம்பியும் குத்தியும்
கத்தையாகக் கிடந்த மயிருக்குள் வலது கைவிரல்களைச் சொருகிக் கோதிய காட்சி அமிருக்கு
அருவருப்பூட்டியது. அமிருக்குக்
கில்லாடியின் சொந்தப் பெயர் கனகன் என்பது தெரியாது. கில்லாடி என்பது பட்டப் பெயர்
என்பது மட்டும் புரிந்திருந்தது.
தனது காலை வார அத்திவாரம் போட்டபடி நாகப்பனும்
கில்லாடியும் உரையாடலில் திளைத்திருக்க, அதனை அறியாத லண்டனில் அன்று காலைதான் வந்திறங்கிய அமிர் சொலிசிற்றர் நாகப்பனின் கந்தோரின் வண்ணத்
தோற்றத்தில் மூழ்கினான்.
மின்னொளி ஊடறுத்துப் பாயும் கண்ணாடி அறைகள்
கதவுகள் சாளரங்கள் தளபாடங்கள், மேசைக்கு
மேசை இளங் குமரிகளைப் போலப் புதிர் போடுகிற கொம்பியூட்டர்கள், கிறீங் கிறீங் என்று அழைக்கும் தொலைபேசிகள்,
படுத்துப் புரள ஆசையைத் தூண்டும் காலின்
கீழே மல்லாக்காகப் படுத்திருந்து மயக்கும் செவ்வண்ணக் கம்பளங்கள் ஒருபுறம்.
மறுபுறத்திலே நாகப்பனின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஆரணங்குகளின் ஒய்யாரத்
தோற்றங்கள். சரமாரியாக வந்து போய்க் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் - ஆண்களும்
பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் - அவர்களது வித விதமான உடைகள் - அந்த
உடைகளைவிட்டு வெளியேறித் தவழ்ந்து வந்து மூக்கை முட்டவைக்கும் நந்தவன வாசனைகள்.
இவற்றின் சித்திரங்களுக்குள் திக்குமுக்காடிய அமிருக்கு சொர்க்கத்துள்
நுழைந்துவிட்டது போன்ற இனிமையான மயக்கம், மன நிறைவு.
அமிருக்குத் தெரியாது தான் இரண்டு லண்டன்
நயவஞ்சக விரியன் பாம்புகளின் கிடிக்கிப் பிடிக்குள் சிக்கியிருப்பது.
அப்பொழுது சொலிசிற்றர் நாகப்பன், இருமிக் காறித் தொண்டையைச் சரிசெய்து
“தம்பிக்கு ஊர் யாழப்;பாணமோ?"
“ஓம்."
“சரி. நாங்கள்
விசயத்துக்கு வருவோம். உம்முடைய பெயர்?"
“அமிர்தன்” என்றான்.
“முழுப் பெயர்?”
“சிவகுரு அமிர்தன்.
நான் அமிர் என்றுதான் தஞ்சம் கேட்ட பொழுது ஹீத்றோ விமான நிலையத்தில்
கொடுத்துள்ளேன்.”
“அது உம்முடைய விருப்பம். லண்டன்
வெள்ளைக்காரனுக்கும் உச்சரிக்க இலகுவாக இருக்கும். நீர் ஒன்றுக்கும் பயப்படாதீர்.
நான் எல்லாவற்றையும் வென்று தருவன். தம்பி அமிர், என்ன தேவையென்றாலும் கூசாமல் என்னிடம் வாரும். என்ன
உதவி தேவை என்றாலும் உதவிசெய்யக் காத்திருக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாக
வருபவர்களுக்கு உதவி செய்வதே என்னுடைய பணி. அதை ஒரு இறைவன் பணியாகச்
செய்கிறேன்" என்று கூறிய சொலிசிற்றர் நாகப்பன், தன் மனதுள், 'உவன் பெயரைச் சுருக்கி மாற்றி வைத்திருக்கிறான். ஆயுதம் ஏந்திய
பயங்கரவாதியாக இருக்குமோ? யாழ்ப்பாணத்தில் என்ன கூத்துப் பண்ணிப்போட்டு
வந்திருக்கிறானோ? கொலை கிலை?
ஆளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
வட இந்தியப் பிராமணனைப் போல வேறு இருக்கிறான்|| என்று தன்னைத் தானே கேள்வியும் கேட்டுப் பதிலும்
கண்டான்.
பின்னர் சொலிசிற்றர் நாகப்பன் அமிருக்கு ஒரு
பச்சைப் படிவத்தைக் கொடுத்து அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கையெழுத்தைப் போடச்
சொன்னான். அமிர் கையெழுத்துப் போடுவதை அவதானித்த சொலிசிற்றர் நாகப்பன், தான் விரித்த வலையில் ஒரு கலைமான் சிக்குவதைப்
பார்த்துப் பூரித்தான்.
பிரிட்டிஷ் அரசு அகதிகளுக்கு இலவச சட்ட உதவி
வழங்குகிறது. சொலிசிற்றருக்கு அவர்கள் காசு கொடுக்கத் தேவையில்லை. பதிலாக ஒரு
பச்சைப் படிவத்தில் கையொப்பம் போட்டுச் சொலிசிற்றருக்குக் கொடுத்தால் அதனை அவர்;
பாவித்து, மாதம் சராசரி நூற்று ஐம்பது பவுணுக்குமேல்
அரசாங்கத்தில் பெறலாம். ஒரு அகதியை வைத்துக்கொண்டு வருடம் 1800 பவுன்வரை சம்பாதிக்கும் சூட்சுமம்
நாகப்பனுக்கு கைவந்தகலை. இதுவொன்றும் அமிருக்குத் தெரியாது.
தஞ்சம் கோரும் அகதிக்கு வந்ததுமே பிரிட்டனில்
தொடர்ந்து தங்க அனுமதி கிடைத்தால், பிறகு
அந்த அகதி சொலிசிற்றர் நாகப்பனின் கந்தோர்ப் பக்கமே காலடிவைக்க மாட்டான்.
சொலிசிற்றருக்கு அவன் மூலம் கிடைக்கும் மாத வருமானமும் நின்றுவிடும். அதற்காக
சொலிசிற்றர் நாகப்பன் கையாளும் தந்திரம், தஞ்சம் கோருபவனின் தஞ்ச விண்ணப்பத்தைக் குடிவரவுத் திணைக்களம் நிராகரிக்கக்
கூடியதாக வார்த்தைகளைக் கையாண்டு விண்ணப்பஞ் செய்விப்பதே.
பச்சைப் படிவத்தில் அமிர் ஒப்பம் போட்டு
முடிந்ததும், சொலிசிற்றர்
நாகப்பன் “தம்பி அமிர், உம்முடைய வழக்கை நான் எடுத்திட்N;டன். இனி நீர் ஒன்றுக்கும் யோசியாதையும். நான் எல்லாம் வென்று தருவன்" என்று
கூறிவிட்டுக் கில்லாடியைப் பார்த்துக் கண் சிமிட்டினான். அதை அமிர் கவனிக்வில்லை.
சொலிசிற்றர் நாகப்பன் சொல்வதெல்லாம் பொய்,
இன்னும் மிக மிகப் பெரிய கழுத்தறுப்பு இனித்தான் இருக்கிறது என்பது
தெரியாத அமிர் 'ஆம், ஆம்” என்று தலையை ஆட்டினான்.
யாழ்ப்பாணத் தமிழனின் காதிலே பூச்சுற்றிக்
காலைவாரிப் பணங் கறந்து வீடுகள் கார்கள் என்று பெரிய மனிதர் வேசம்போட்டு ஆடம்பரமாக
வாழும் இரண்டு லண்டன் தமிழர்களை வந்ததும் வராததுமாக அமிர் சந்தித்த போதும்,
அவர்களைப்பற்றி அவனுக்கு ஒன்றுமே
தெரியாது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் போராளிகள் என்ற போர்வையில் அவர்கள் புரிந்த
அசுரத்தனங்களை திருவிளையாடல்களை அறிந்திருந்தால் அவர்கள் விரித்த வலையில் அமிர்
விழுந்திருக்கமாட்டான்.
சொலிசிற்றர் நாகப்பனைப் பொறுத்தமட்டில் தமிழ்
அகதிகளுக்குத் தஞ்சம் கிடைக்காமல் செய்கிற வித்தையாலேயே அவனது தொழில் ஓகோ என்று
நடக்கிறது என்பது கில்லாடிக்கும் தெரியும். அதனால்தான் ஒரு அகதியை சொலிசிற்றர்
நாகப்பனுக்குச் சேர்த்துக் கொடுத்தால் அதற்குக்
கைநிறைந்த சன்மானத்தைக்; கில்லாடி
கையுறையாகப் பெறுகிறான்.
பச்சைப் படிவத்தில் அமிரின் கை ஒப்பத்தை
வாங்கிய பின்னர், சொலிசிற்றர்
நாகப்பன் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒர் அலுவலரை - மிஸ் ஜீவிதாவை -
அழைத்தான்.
அப்பொழுது சொலிசிற்றர் நாகப்பனின் அறைக்குள்
குமரிப் பெண்ணின் மென்மையோடு ஒய்யாரமாக நடந்து வந்த - யாழ்ப்பாணம் கட்டுவனில் ஒரு
மண்கிண்டிக்குப் பிறந்த, தெல்லிப்பழை
யூனியன் கல்லூரியில் க.பொ.த. கலை உயர்தர வகுப்பில் பயின்று, பாரிய இரகசியமான கடமை ஒன்றைச் சுமந்து கொண்டு ஒரு வருடத்தின்
முன்னர் லண்டன் வந்த - ஜீவிதாவை அமிர்
அவதானித்தான்;. நீல
ஜீன்சும் வெள்ளை 'ரி பிளவுசும்’
அணிந்து நிலாவிலிருந்து இறங்கி வந்த வண்ண
மங்கைபோல் ஒய்யாரமாக, அவன்
உள்ளத்தைக் கிள்ளிக்கொண்டே தாவி நெழிந்து சற்Nறு குனிந்து நெடிய கால்களை எட்டி வைத்து வந்து அமிரின்
எதிரே நாகப்பன் ஓரமாக ஜீவிதா நின்றாள்.
அமிரைப் பார்த்ததும் ஜீவிதாவுக்குப் புரிந்தது
ஒரு மான் நாகப்பனின் பொறிக்குள் சிக்கப்போவது.
புதிய வாடிக்கையாளனின் கம்பீர வசீகரம்
ஜீவிதாவைச் சுண்டி இழுத்தது. அவள் தனது நீண்ட பெரிய கண்களை ஏவி அமிரைப் பார்த்ததும் மெய் சிலிர்த்து நரம்புகள்
நாதம் பேச, தனது தலையின் வலது
பக்கத்தால் தோளைத் தாண்டிக் கன்னத்தை வருடித் தவழ்ந்து மார்பகம் வரை நீண்டிருந்த
அடர்ந்த நேரிய பட்டுப்போன்ற கருங் கூந்தலைச் சுண்டி வீசி இழுத்துத் தனது முதுகில்
நேர்படுத்திப் பதியவிட்டபின்னர்,
“இவ்வளவு அழகான - உள்ளத்தை அள்ளும் தமிழர்களும்
இருக்கிறார்களா?" என்று
ஊமையாக அதிசயப்பட்ட ஜீவிதா, அந்த
வாடிக்கையாளன் அமிர் தப்பித் தவறி ஏனைய எழுது வினைஞர்களுக்குப் போகாமல்
இருக்கவேண்டும் என்ற அவா சதிர்போட
சொலிசிற்றர் நாகப்பனைப் பார்த்தாள்.
சொலிசிற்றர் நாகப்பன் அமிரைப் பார்த்து நரைக்;கத் தொடங்கிவிட்ட தன் ஆட்டுத் தாடியை இடது
கையால் தடவியபடி “தம்பி அமிர், இவதான் மிஸ் ஜீவிதா. இவதான் உமது ‘பைலை;’ வைத்திருப்பா.
இப்பொழுது அவவினுடைய அறைக்குப் போம். அவ மேற்கொண்டு குடிவரவு இலாகாவுக்கு என்ன
எழுதவேண்டும் என்று விளக்குவா. நீர் உமது தஞ்சத்துக்கான காரணத்தை வீட்டுக்குப்
போய்த் தமிழில் எழுதிவரலாம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் குடிவரவு
இலாகாவுக்கு அனுப்பவேண்டும்" என்று ஒரு சுருக்கமான நடைமுறை விளக்கம்
கொடுத்தார்.
அந்த வாடிக்கையாளர் அமிர் தனக்கு
ஒதுக்கப்பட்டமை கண்ட ஜீவிதாவுக்கு வசந்தம் வீடு தேடி வந்து தனது படுக்கை அறைக்குக்
குளுகுளுப்பு ஊட்டியது போலவிருந்தது.
அமிரைத் தனது அறைக்கு அழைத்துப்போய்க்
கொண்டிருந்த ஐந்தரையடி உயர ஜீவிதா, அவன்
தன்னிலும் ஆறு அங்குலமளவில் அதிகம் உயரமாக இருப்பதைக் கூர்மையாக அவதானித்தாள்.
ஜீவிதா அவனது கம்பீர தோற்றத்திற்கு அடிமையாகினாள்.
சொலிசிற்றர் நாகப்பனின் கழுத்தறுப்பிலிருந்து
அமிரைத் தப்ப வைத்தாலென்ன என்ற எண்ணம் அவளது உள்ளத்தில் மின்வெட்டியது.
சொலிசிட்டர் நாகப்பன் ஒரு முன்னைநாள் தீவிரவாதி
என்பதும், அவன் யாழ்ப்பாண மரநாய்
விடுதலை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவன் என்பதும், தான் அமிருக்கு உதவி செய்வதை அறிந்தால்
நாகப்பன் தனது மரநாய்க் குணத்தைக் காட்டாமல் விடமாட்டான் என்பதும் ஜீவிதாவுக்குத்
தெரியும். அவள் இயல்பே முன்பின் யோசிக்காமல் முட்டாள் தனமாக காரியங்களில்
இறங்குவதும், பின்னர் தப்ப
வழிதெரியாது விழிப்பதும் தடம்புரள்வதுந்தான். அவளுக்குத் தன் குறைபாடு புரியாது.
அவள் எதையும் எதிர்கொள்ளத் தயாராகி விட்டாள்.
ஜீவிதாவின் அறையினுள் கால்பதித்த அமிர் அறையை
நோட்டம் பார்த்தான். மின்னிநோக்கும்; மேசையின் ஒரு புறத்திலே ஒரு கொம்பிய+ட்டா,; மறு பக்கத்தில் ஒரு வெள்ளைத் தொலை பேசி. அது திடீரென
ரீங்காரம் செய்யத் தொடங்கியது. ஜீவிதா ஒலிவாங்கியை எடுத்து ஆங்கிலத்தில் உரையாட
ஆரம்பித்தாள். “என்ன
அட்சரசுத்தமாக ஆங்கிலேயனைப் போலவே பேசுகிறாள். நானும் முயற்சி பண்ணவேண்டும்"
என்ற எண்ணிய படி அமிர் இருக்கையை விட்டு எழுந்த ஜீவிதாவைப் பார்த்தான். அவளின்
பின்புறத்தில் ஒரு வான் நீல அலமாரி. அதனைத் திறந்து ஒரு ‘பைலை’ எடுத்தவள்
அதனை மேசையில் வைத்துவிட்டு அமிரைப் பார்த்தாள். அவனது பின்னணியை அறிய மனம்
உந்தியது. வாயெடுத்த ஜீவிதாவை கூச்சம் பற்றிக்கொண்டது. தலையைத் தாழ்த்தினாள்.
அவள் ஓரக்கண்ணால் அமிரை நோக்கி,
“மிஸ்ரர் அமிர்,
உமது கடவைச் சீட்டை ஹீத்றோ விமான
நிலையத்தில் கொடுத்தீர்களா?" என்று
கேட்டாள்.
“இல்லை. விமானத்தால்
இறங்க முன்னர் அதனைக் கிழித்து மலகூடத்துள் வீசிவிட்டேன்."
அதனைக் கேட்டபொழுது
அவளது கன்னத்தில் குமிழ்கள் தோன்;றி
அமிருக்குத் தம் வித்தையைக் காட்டின.
“உங்களுடைய
முழுப்பெயர்?”
“சிவகுரு அமிர்தன்.
அப்படி எழுதவேண்டாம். சிவகுரு அமிர் என்றே எழுதுங்கள்."
அவனுடைய பதில் ஜீவிதாவை குழப்பியது. 'ஏன் பொய் சொல்கிறான்?” என்று மனதுள் எண்ணியபடி,
“நீங்கள் தனியாளா?"
“ஆம். நான் இன்னும் விவாகம்
செய்யவில்லை." அந்த வார்த்தைகள் அவளை உற்சாகப்படுத்தின.
“நீங்கள் எதுவரை
படித்திருக்கிறீர்கள்?"
“யாழ் பல்கலைக்
கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன்?";
“என்ன துறை?"
“அரசியல்
விஞ்ஞானத்துறை. கலாநிதிப்பட்டத்துக்கு."
ஜீவிதா அமிரை
மேலிருந்து கீழ்வரை கூர்ந்து பார்த்தாள்.
அவனது நடு உச்சி பிரித்து வாரிய கரிய கேசம்
நெற்றியின் இருபக்கங்களையும் மூடி நிற்க, எடுப்பான மூக்கு முகத்தின் அழகிற்று அழகேற்றி நின்ற கோல வண்ணம் ஜீவிதாவின்
ஐம்புலன்களையும் காந்தமாக இழுத்து மடக்கின. அது அமிரைச் சொலிசிற்றர் நாகப்பனின் வஞ்சக
வலையிலிருந்து தப்பவைக்க அவளை மீண்டும் துணிந்து ஏவியது. ஜீவிதா, வலது மார்பகத்தில் அசைந்து பெண்மையின்
இனிமையைப் பொழிந்த கூந்தலைத் தலையை வெட்டி வீசி முதுகில் படியவிட்டபின், கண்மடல்களை விரித்து அமிரை ஏக்கத்தோடு நோக்கி, தனது
கனிந்த குரலைச் சற்று உயர்த்திச் சம்பாசிக்க, அவன் அவளின் அடிக்கடி தோன்றி மறையும்
கன்னக்குழிகளுக்காக ஏங்கினான்.
“மிஸ்ரர் அமிர், உள்நாட்டு அமைச்சுக்கு எழுதும் அரசியல் தஞ்ச
விண்ணப்பத்தில் நீங்கள் கொழும்பில் தங்கியிருந்து லண்டனுக்கு வந்ததாகவோ, உங்களது சொந்தக் கடவுச்சீட்டில் பிரயாணஞ் செய்ததாகவோ
எழுதக்கூடாது. யாரோ ஒரு பிரயாண முகவர் யாழ்ப்பாணத்திலிருந்து கள்ளப் பாதையால்
கூட்டிவந்து, கொழும்பில்
ஓரிடத்தில் மறைவாக இரண்டு நாட்கள் தங்க வைத்து, கள்ளக் கடவுச்சீட்டில் அனுப்பியதாக எழுத
வேண்டும்."
“சரி வேறென்ன?"
“இலங்கைக்குத்
திருப்பி அனுப்பினால் ராணுவம் பிடித்துச் சித்திர வதை செய்யும் கொல்லும் அல்லது
கடத்திச் சென்று காணாமற் போகச் செய்யும் என்று காரணம் காட்டவேண்டும். வேறுவிதமாக
எழுதினால் உங்கள் தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்படும்."
“மிஸ் ஜீவிதா,
நான் மூட்டைக் கணக்கில் பொய் சொல்ல
வேண்டுமா?"
“லண்டனுக்கு வருகின்ற
அகதிகள் எல்லாரும் அதையே செய்ய வேண்டியுள்ளது."
“நான் உண்மையை
எழுதினால். அதாவது நான் ஒரு ஜனநாக தமிழ் அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்றும்,
கறுப்பு நரிகளுக்;குப் பயந்து வந்துள்ளேன் என்றும் எழுதினால்?"
அவள் கண்மடல்களை அகல
விரித்து அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
“உடம்பில்
காயமுள்ளவர்கள், கறுப்பு நரிகளோடு
தொடர்பு வைத்திருந்தவர்கள், கறுப்பு
நரி இயக்கத்தை விட்டு ஓடியவர்களுக்கே தஞ்ச வாய்ப்பு அதிகம்."
“சரி நீங்கள்
சொல்லுகின்றபடியே எழுதுகிறேன்." அவள் தனக்குப் பரிவுகாட்டுவதை நன்கு
உணர்ந்தான்.
இப்படித்தான் குடிவரவு இலாகாவுக்கு
எழுதவேண்டும் என்று ஏதோ ஒரு புதிய திடீர் உந்துதலினால் அமிருக்குச் சொல்லிக்
கொடுத்த விடயத்தை, சொலிசிற்றர்
நாகப்பன் அறிந்தால் என்பதை மீட்டு எண்ணியபொழுது, ஜீவிதாவைப் பயம் கௌவியது.
“மிஸ்ரர்; அமிர், நான்தான் இப்படி எழுதவேண்டும் என்று சொல்லித் தந்ததாக சொலிசிற்றர்
நாகப்பனுக்குச் சொல்ல வேண்டாம்."
“ஏன்? உங்களிடம் ஆலோசனை பெறவே அவர்
அனுப்பினார்."
“உங்கள் தஞ்ச
விண்ணப்பத்தை நிராகரிக்கச் செய்தால்தான், உங்களை வைத்து ஐந்தாறு வருடம் நாகப்பன் உழைக்கலாம். என்னுடைய தொழில்
புதிதாக வருகிறவர்களுடைய விண்ணப்பத்தை குடிவரவு இலாகா நிராகரிக்கக்கூடியதாக
எழுதுவிப்பதே. அதற்குத்தான் எனக்குச் சம்பளம் தரப்படுகிறது."
“என்ன சொல்கிறீர்கள்
மிஸ் ஜீவிதா!"
“இதுதான் அவருடைய
சுத்துமாத்துத் தொழில். இதன்மூலந்தான் அவர் கோடீஸ்வரனாகியுள்ளார். கில்லாடிக்கும்
சொல்ல வேண்டாம். அவன் அவருடைய ஆள்பிடி முகவர்."
அவன் மௌனமாக அவளின் நெஞ்சில் படர்ந்த கூந்தலைப்
பார்த்தபடி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
ஜீவிதாவின் உள் மனம் நாகப்பனின் அந்தரங்கத்தை
அமிருக்கு வெளியிட்டதற்காக அவளை அச்சுறுத்தியது. மனதைத் தேற்றிக்கொண்டு,
“அமிர் உங்கள் வயதைக்
குறிக்க மறந்துவிட்டேன்" என்று கேட்டவள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
“இருபத்தியொன்று”
என்ற பதில் அவளை உதைத்தது. அதுவரை அவள்
பொறுக்கி யெடுத்து மடியில் கவனமாகப்
பொத்தி வைத்திருந்த வசந்த மலர்கள் வாடி வதங்கின.
'அம்மாவுக்கு
அப்பாவிலும் மூன்று வயது அதிகம். என்னிலும் ஒரு வயதுதானே குறைவு” என்று தனக்குள் கூறித் தன்னைச் சமாதானப்
படுத்தியவள், அவனை மீண்டும்
ஏறவிறங்கப் பார்த்தாள்.
அப்பொழுது அமிர் தனது நடு உச்சி பிரித்துச்
சீவிய காதை மூடி நீண்டிருந்த தலை முடியைக் கோதி உயர்த்தியபொழுது, அவனது வலது மேல் நெற்றிக்குப் பின்னோக்கி
தலைமுடிக்குள் மறைந்துள்ள நீண்ட காய அடையாளத்தை அவதானித்து, ‘இவனும் கில்லாடியைப் போல ஒரு முன்னை நாள்
பயங்கரவாதியோ’ என்று
திடுக்கிட்டாள்.
தொடரும்
No comments:
Post a Comment