“அன்ரி இன்றைக்கு
யார் பற்றிய கதை?" தங்கன்.
‘இன்று ராச நாச்சியர்
வம்சக் கடைக்குட்டி பாவலன்---மேஜர் அம்மான்---பற்றிய திகில்
மிகு கதை. உலக முழுவதையும்
அதிர்ச்சியில் ஆழ்த்திய
தாக்குதல். உலக வரலாற்றில் அதற்கு ஈடான பிரமிக்க வைக்கும்
தாக்குதல் எங்கும் நடந்ததில்லை."
●
முல்லையின் தற்கொலைத்
தாக்குதலுக்குப் பின்னர் மேஜர் அம்மான் பற்றிய கதைகள்
எதுவும் வெளிவரவில்லை. அந்தத் தாக்குதலில் தங்கையைக்
கண்டு, தன்னை மறந்து நின்ற அவன் மாண்டு போனான், அவன் மாழவில்லை. உயிருடன் உள்ளான், ராணுவஇரகசிய சிறையில் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.
2001 ஆம் ஆண்டு,
'மேஜர் அம்மான்" என்று கேணல் சாள்ஸ் அழைத்த போது பாவலன் 'எல்லா ஒழுங்கும் செய்து விட்டேன்," என்று
கூறிமீண்டும் களத்தில் தோன்றுகிறான்.