Saturday, 28 May 2016

56 வருடங்கள் வைத்திய சேவையுடன் ஓய்வுபெறும் டாக்டர் செல்வேந்திரா

எனது குடும்ப வைத்தியர்  செல்வநாயகம் செல்வேந்திரா அவர்கள் – யூன் 2016 இலிருந்து - தனது தொழிலில் ஓய்வு பெறுகின்றார். இவர் ஏறக்குறைய 56 வருடங்கள் வைத்தியராகப் பணிபுரிந்துள்ளார். இது எனது வயதைவிட சற்றே அதிகம்.

சிறுவயதில் ஒருமுறை நான் எனது அம்மாவுடன் அவரின் கிளினிக் சென்றிருக்கின்றேன். அப்பொழுது எனக்குப் பத்து வயதிற்குள் இருக்கும்.

நான் நியூசிலாந்து சென்று, மீண்டும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் அடியெடுத்து வைத்தபோது மீண்டும் அவர் எனது குடும்ப டாக்டர் ஆனார். கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு வைத்தியம் பார்த்திருக்கின்றார்.

Wednesday, 25 May 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION

 
By
Kathir Balasundaram

Chapter 8 - Heinous Taxes

Principal Vasantha’s Honda rested under the shade of a large ironwood tree whose trunk was nearly six feet in circumference. The Principal herself sat not so far away on a narrow bench staring at the people going in and out of the large building not two hundred yards away. A sign on the side of the building proclaimed it to be the headquarters for the Ministry of Political Affairs.

Sunday, 22 May 2016

பின்னையிட்ட தீ - சிறுகதை

சிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள். இதுவரை காலமும் தண்ணீர் அள்ளுவதற்கு துலாக்கொடியை நம்பி இருந்த அவளுக்கு, அன்றுதான் ‘உவாட்டர் பம்ப்’ பூட்டியிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து இரவு வேளைகளில் முற்றத்து தென்னை மரங்களுக்கு மேலால் மாவிட்டபுரம் விரையும் ‘ஷெல்’லைப் போல சீறிக்கொண்டு தொட்டிக்குள் பாய்ந்தது நீர்.

“அம்மா அப்பாவைக் குளிக்க வார்க்க, தோட்டத்திற்கு நீரிறைக்க எல்லாத்திற்கும் சுகம். சுகந்தன் அண்ணாவிற்கு எவ்வளவு நல்ல மனசு.”

வேலை கிடைத்த முதல் மூன்று மாதங்களிலேயே கடனை அடைத்துவிட்டான். பிறகு வந்த சம்பளக்காசில் அம்மாவிற்கும் வெண்ணிலாவிற்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான். இப்ப ‘பம்ப்’ ஒன்றும் வாங்கிவிட்டான்.

“தம்பி பரதன்! வெண்ணிலா கிணற்றடியிலை உடுப்புத் தோச்சுக் கொண்டிருப்பாள். அப்பா கூப்பிடுகிறார். ஒருக்கால் வந்திட்டுப் போகச் சொல்லு” – அம்மா.

வேலிக்கு அப்பால் நின்ற ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த பரதன், தாயாரின் குரல் கேட்டவுடன் பாய்ந்து ஓடி மாமரமொன்றிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டதை வெண்ணிலா கண்டுகொண்டாள்.

Friday, 20 May 2016

அதுவே மகிழ்ச்சி, அதுவே இன்பம்.


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

சந்திரனும் மனைவியும் ஓய்வின்றி சதா வேலைக்குப் போவார்கள்.
ஒருமுறை சந்திரனின் பெற்றோர்கள் வெளிநாட்டுக்கு வந்தார்கள். 

அவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருந்து போரடித்தது.

”சந்திரன்… எங்கையாவது வெளியிலை கூட்டிப் போப்பா.”

சந்திரன் அவர்களை ஷொப்பிங் கூட்டிச் சென்றான்.

”நீங்கள் கடைக்குப் போய்விட்டு வாருங்கள். நாங்கள் இந்த வாங்கிலை இருக்கிறம்” என்றார்கள் பெற்றோர்.

ஷொப்பிங் முடித்து திரும்புகையில் சந்திரனிற்கு அதிர்ச்சி.
பெற்றோர், இரண்டு முதியவர்களுடன் தமிழில் பேசி சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

Friday, 13 May 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (12)

 

மிளகாய்த்தூள் + 13 = அல்சர்

13ஆம் நம்பருக்கும் அல்சருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

உண்டு என்கின்றேன் நான்.

என்னடா இது மொட்டந்தலைக்கும் முழங்கைக்கும் முடிச்சு?

அப்போது அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்காலிகமாக உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். வீடு ஒன்று றென்றிற்கு பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி ரி.வி யில் ஒரு திகில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது,

”இஞ்சாருங்கோப்பா…. 13ஆம் நம்பர் வீட்டைத் தயவுசெய்து பாத்திடாதையுங்கோ” என்றார் மனைவி.

வந்ததே பெரியதொரு பிரச்சினை. வீட்டு எஜமானி பத்திரகாளியாகிவிட்டார்.

கண் திறந்தது


ஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்னு கோவிலுக்குச் சென்றோம். சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.

அன்னதானத்திற்கு கோவில்மண்டபத்தைச் சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வரிசை மெதுவாக ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது. எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் குடை ஒன்றின் கீழ்.

கன்ரீனிலை காசு குடுத்துச் சாப்பிடலாம்சொல்லியபடி ஒருசிலர் வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

வைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில் உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில் கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.

Tuesday, 10 May 2016

His Royal Highness, The Tamil Tiger - FICTION

 

By
Kathir Balasundaram

Chapter 7

Freedom Fighter
 
The Minster of Political Affairs stood in his luxurious bedroom adjusting his camouflage uniform. He had a special meeting in about two hours that he needed to prepare for. He was deep in thought, his lips moving but issuing no sound. His disgrace at the Vembady Girl’s College weighed heavily on his mind, and he frequently glanced at the ceiling, lost in thought.
His wife, Komathy, watched her distinguished husband with concern. She fidgeted herself, adjusting her blue salwar kameez*—a popular Indian dress—as she glanced worriedly at her husband. She didn’t understand his distress, because she didn’t take the disturbance at the Vembady Girls’ College seriously. She held faith that her husband’s good relationship with His Royal Highness would remain close no matter what. She assumed that His Royal Highness depended greatly on her husband.

Saturday, 7 May 2016

நிதி சேகரிப்பு


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

பாடசாலை சறிற்றிக்காக சொக்கிளேற் விற்க வேண்டும்.

பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான். ஒருவரும் வாங்கவில்லை.

நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி அவர்களிடம் நாணயக்குற்றிகளைக் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.Sunday, 1 May 2016

’உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்


இந்த ‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதியை வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் இது பல அரிய விடயங்களைப் பொக்கிஷமாகத் தந்து நிற்கின்றது. பாடாத பொருளில்லை எனும்படியாக பொருட்பரப்பு விரிந்து காணப்படுகின்றது. இதன் ஆசிரியர் ஜெயராமசர்மா - பாரதியார், கவிமணி, பட்டுக்கோட்டையர், கவியரசர், மகாகவி போன்றவர்களின் கவிதைகளில் திளைத்து, அவர்களை அடியொட்டி எழுதிச் செல்கின்றார். இவர் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப்பட்டதாரி. கல்வியியற்துறை, சமூகவியற்துறை, கற்பித்தல் நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேறியவர். அத்துடன் ஆசிரியர், அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என்ற பல பதவிகளை வகித்தவர்.

இவரின் புத்தகத்திற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், கவிப்பேரரசு வைரமுத்து என்பவர்கள்  வாழ்த்துரையும் – டாக்டர்.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்), முனைவர் இரா.மோகன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), முனைவர் அரங்க.பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முனைவர் சரசுவதி இராமநாதன் என்பவர்கள் அணிந்துரையும் வழங்கிக் கெளரவித்திருக்கின்றார்கள். இதிலிருந்தே இத்தொகுதியின் கனதியைப் புரிந்து கொள்ளலாம்.