Monday, 30 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 23 - காற்றில் மிதந்த கறுப்பு நரி

             அமிர் வேலை செய்யத் தொடங்கி ஐந்தாவது வாரம் ஒரு புதன்கிழமை. நேரம் காலை 8.15. வானம் வெளித்திருந்தது. இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது.

            இதமான காற்றுள்ளும் கறுப்பு நரி பதுங்கி இருந்து பாயும் என்பது அமிருக்குத் தெரியாது.

            யு508 நெடுஞ்சாலையின் ஆறு ஒழுங்கைகளையும்  நிறைத்து வாகனங்கள் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டு இருந்தன. அவற்றுள் ஒன்று ஜீவிதாவின் இருண்ட பச்சை ஃபோட் கார். அது லண்டன் மாநகர எல்லைகளைக் கடந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக வடக்குத் திசை நோக்கிப் படு வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. முன் ஆசனத்தில் ஜீவிதாவின் இடப் பக்கம் இருந்த அமிர் யன்னலுக்கு வெளியே பார்த்தான்.

Monday, 23 November 2015

வெள்ளைப்புகை - குறும்கதைசேகரும் வசந்தியும் வாடகை வீட்டிலிருந்து - சொந்தமாக வீடு ஒன்று வாங்கிப் போனார்கள்.

இவர்களுக்கு அயலவர்களிடம் வரவேற்பு நன்றாக இருக்கவில்லை. வீட்டின் இடது புறக்காரரான 'அசல்' வெள்ளை மாத்திரம் தோழமையுடன் பழகினார். வலது புற வீட்டுக்காரரை யாரென்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. மதிலை உயர்த்தி தங்களையும் வீட்டையும் மறைத்திருந்தார்கள். எதிர்வீட்டுக்கார கிரேக்க நாட்டவன் (Greek) முகம் சுழித்தான். அவன் மனைவியின் முகம் இவர்களைக் காணும் போதெல்லாம் குதிரை போல நீண்டுவிடும். இவர்களுக்குப் பக்கத்து வீடான சீனாக்காரரின் உதட்டிற்குள் புன்னகை. அவுஸ்திரேலியா பல்லினங்களையும் கொண்டது

Sunday, 22 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 22 - கடவுளின்  கட்டளை
  
            சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்துக்கு எதிர்ப்பக்கம் உள்ள தங்கு நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பூமாவுக்கு முன் ஆசனத்தில் மூத்தான் மனைவி இருந்தாள். மூத்தான் மனைவி எப்பொழுது வம்பிற்கு இழுப்பாளோ என்ற பயத்தில், படமெடுத்த பாம்பைக் கண்ட முயல் குட்டி போல பூமா நடுங்கிக்கொண்டு இருந்தாள்.

            நேரம் பிற்பகல் இரண்டு மணியைக் கடந்துவிட்டது.

Wednesday, 18 November 2015

ஒரு வகை உறவு - சிறுகதைதுரை

இன்று வியாழக்கிழமை. 'ரீம் லீடர்' வந்து ஆளியை அழுத்தி  வேலையத் தொடக்கி வைத்தான். 'ப்றீ வே'யிலை வாகனங்கள் வாற மாதிரி 'சுக்கா சுக்கா' எண்டு புத்தகக் கட்டுகள் பெல்றில் வந்து கொண்டிருந்தன. புழுத்த மணமொன்று மந்தமாருதமாகிறது. மனித இயந்திரங்களாக நாங்கள் இருவரும்! வரிசையாக வந்து கொண்டிருக்கும் புத்தகக் கட்டுகளுக்கு இடமும் வலமுமாக நின்று வேலை செய்து கொண்டிருந்தோம். வலது புறத்தில் இருப்பவன் றோமன். போலண்ட் நாட்டைச் சேர்ந்த 'போலிஸ்' (Polish) இனத்தவன். எங்களூர் நாதஸ்வர தவில் வித்துவான்களுடைய 'கிருதா'வைப் போலிருக்கும் தலை மயிரை நீவி விட்டுக் கொண்டவாறே கடின உழைப்பில் அவன். 

கீரைப்பிடி பிடிக்கிறமாதிரி பத்துப் பத்துப் புத்தகங்களாகப் பிடிச்சு ஒரு மெஷினிலை நீட்ட அது கயிறு போட்டுக் கட்டி விடும். பின்பு குறுக்குப் புறமாக நீட்ட இன்னொரு கட்டு. அப்படியே அங்கை இஞ்சை பாக்காமல் குனிந்து 'பலற்'றில் (Pallet) உள்ள பெட்டிக்குள் அடுக்க வேண்டும். முதுகு சொறிந்தா மூக்கு வந்தா ஒண்டும் செய்ய முடியாது. அது தன்பாட்டிலை வந்த மாதிரி போக வேண்டியதுதான். காலையில் எட்டு மணிக்கு தொடங்கும் வேலை எடுத்தல் - நீட்டல் - கட்டுதல் - குனிந்து வைத்தல் என்றபடியே நான்கு மணி வரை தொடரும். இடையே இரண்டு 'ரீ பிறேக்', ஒரு 'லஞ்'. செக்கில் பூட்டிய மாட்டிற்கும் ஓய்வுண்டு. "இந்தப் 'புறோசஸ்' வேலையைப் போல ஒரு தரித்திரம் பிடித்த வேலை உலகத்திலை வேறை எதுவும் கிடையாது" றோமன் புறுபுறுத்துக் கொண்டான்.

Monday, 16 November 2015

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

அழைப்பிதழ்

 


யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்;

போர்க்கால நாவல் வன்னி and A MILITANT'S SILENCE

முதல் அமர்வு

காலம்: 2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30

இடம;: கனடா ஐயப்பன் ஆலயம். 635 Middlefield Rd. Scarborough M1V 5B8

தலைமையுரை பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர்

ஆய்வுரை திருமதி ராஜ்மீரா இராசையா எம்.ஏ.--- தமிழில்

Review திரு. புனிதவேல் (பொறியியலாளர்) --- ஆங்கிலத்தில்

வெளியீட்டுரை கவிஞர் வி.கந்தவனம்

Sunday, 15 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 21 - பாவச்  சுமை

             கில்லாடியும் கூட்டாளிகளும் கைதாகி இரண்டு மாதங்களாகி விட்டன. சொலிசிற்றர் நாகப்பனுக்கே அவர்களை எங்கே பொலிஸ் சிறை வைத்திருக்கிறது என்பது தெரியாது.

            வானம் மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. மழை பொழியப் போகும் அறிகுறிகளே
முனைப்பாகத் தெரிந்தன. குளிர் காற்றின் கொடுமை லேசாகத் தலையை விரித்தது.

      சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்துக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்தில் பூமா நின்றாள். வீதியில் வாகனங்கள் நெருக்கமாக இரு பக்கமும் விரைந்துகொண்டு இருந்தன. அவள் சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலக வாயிலை நோட்டம் பார்த்தபடி நின்றாள். நண்பகலாகப் போகிறது. ஜீவிதா கடையில் உணவு வாங்க வெளியே வருவாள். ஏதாவது அவளிடம் பிடுங்கக்கூடிய இரகசியங்களை வழமைபோல அவள் கறக்கத் துடித்துக் கொண்டு நின்றாள். ஜீவிதா வேலைக்கு வரவில்லை. அது பூமாவுக்குத் தெரியாது. ஜீவிதாவுக்குத் தெரியாது பூமா தன்னிடமிருந்து நாகப்பனைப் பற்றியகிறிமினல்செய்திகளைச் சேரிக்கவே அங்கு அடிக்கடி வந்து போகிறாள் என்பது. இன்னும் பூமாவை அலுவலகத்துக்கு உள்ளே வரும்படி அழைத்தாலும் அங்கு செல்லாமல் ஏதாவது சாட்டுச் சொல்லி அவள் ஏன் தட்டிக் கழிக்கவேண்டும் என்பதை ஜீவிதா யோசித்துப் பார்த்ததில்லை.

Wednesday, 11 November 2015

15வது தமிழ் எழுத்தாளர் விழாஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் (ATLAS)

அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி

எதிர்வரும் 14- 11 - 2015 நடைபெற இருக்கும் எழுத்தாளர்விழாவில், ‘அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளரளின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் / நண்பர்களின் புத்தகங்களும் இடம்பெற வேண்டுமாயின் – நீங்கள் / நண்பர்கள் புலம்பெயர்ந்ததன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம் அல்லது விழாவில் நேரடியாகக் கையளிக்கலம். ஏற்கனவே கடந்த வருடங்களில் அனுப்பி வைத்தவர்கள் மீண்டும் அனுப்பத் தேவையில்லை. இந்தப் புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது இடம்பெறும் புத்தகக் கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும்.

அனுப்பி வைக்கவேண்டிய முகவரி

Australian Tamil Literary & Arts Society (Inc)
P.O. Box 620, Preston, Victoria 3072, Australia

மின்னஞ்சல் - atlas2001@live.com

Monday, 9 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 20 - கோப்பி  கொடுத்த  ஊத்தைவாளிகள்
             நேரம் நள்ளிரவு. 'அந்த நெட்டை வடுவாதான் நதியாவைக் கடத்தியிருப்பான். நீ உடனே இங்கே வாஎன்று கில்லாடி கூறிய சொற்களைக் கேட்ட சால்வை மூத்தானின் குறும் மயிர்கள் ஆத்திரத்தில் நிமிர்ந்து எழுந்து நின்று சதுராடின. அவனுக்கு அந்த உயர்ந்த கூட்டத்தின் மீது இப்போதும் காய்ச்சல். காரணம் அவர்கள் லண்டனிலும் யாழ்ப்பாண மேலாண்மையைக் காட்டுவதாக அவன் சொல்கிறான்.

            மூத்தானுக்கு அருமையான சந்தர்ப்பம். அதை அவன் தவறவிட விரும்பவில்லை. பிஸ்ரலையும் சன்னங்களையும் எடுத்துக் கொண்டு ஆற்றுப் பறக்கப் புறப்பட்டான்.

            கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன் இருவரையும் அழைத்துக் கொண்டு மூத்தான் அரை மணி நேரத்துள் கில்லாடி வீடு போய்ச் சேர்ந்தான்.

Saturday, 7 November 2015

வெங்கட் சாமிநாதனனுடன்…


நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்…

பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம்.

ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது.

நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது..

Monday, 2 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்


 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 19 - போதும் ஆசாமி சகவாசம்

           
            இந்தியாவுக்கு நதியா சென்ற விமானம் முப்பத்தையாயிரம் அடி உயரத்தில் இன்னமும் பறந்து கொண்டிருந்தது. லண்டனில் நள்ளிரவுக்கு இன்னும் ஒரு மணிநேரமே இருந்தது.

            அயர்லாந்து வியாபாரப் பயணத்தை முடித்தபின், சூட்டியின் கார், லண்டன் மாநகர எல்லைக்குள் வந்துகொண்டு இருந்தது. அந்தக் காரின் பின் ஆசனத்தில் கில்லாடி தூக்கத்தில், 'அன்பே என் சின்ன வடிவு
ஆருயிரே என் தங்கமே
ஓடிவா என் மனக் குயிலே' என்று வாய்புசத்தி நதியாவோடு சரசமாடிக் கொண்டிருந்தான்.

            வீட்டை அண்மித்ததும் கூட்டாளிகள் கில்லாடியைத் தட்டி எழுப்பிவிட்டனர். அவன் காரிலிருந்து இறங்க முன்னரே தனது சகபாடிகளின் பங்கைக் கணக்கிட்டான்.
            கில்லாடி இலாபத்தில் 8,000 ஸ்ரேலிங் பவுணைத் தனக்கு ஒதுக்கினான். அவனோடு சேர்ந்து சென்ற கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன், சால்வை மூத்தான் ஆகியோருக்குத் தலைக்கு 400 ஸ்ரேலிங் பவுண் கொடுத்தான். அதனைக் கண்டதும் குகனின் சின்னோட்டி மூக்குச் சினந்து விரிந்து சுருங்கியது. மூத்தானின் உச்சந்தலைக் குள்ள மயிர் ஆத்திரத்தில் எழுந்து நின்று காரிலிருந்து இறங்கிய கில்லாடியை வெறித்துப் பார்த்தது. அவர்கள் மத்தியில் அதுவரை இருந்து வந்த பாதாள உலக தர்ம நியதிப்படி, கில்லாடி தங்களுக்குக் குறைந்தது ஆளுக்கு 1300 ஸ்ரேலிங் பவுணாவது தந்திருக்க வேண்டும் என்று மூவரும் கில்லாடிக்குக் கேட்கவேண்டும் என்ற மனக் குமுறலோடு பேசியது காரில் இருந்து இறங்கி போய்க்கொண்டிருந்த கில்லாடியின் காதில் விழுந்தது

Sunday, 1 November 2015

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி


 அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.