Tuesday, 28 April 2015

தப்பிப் பிழைத்தல் - சிறுகதை
கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தை, தட்டிப் பறிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு அலைந்து திரிகின்றது.

இந்திரன் மிகவும் கடின உழைப்பாளி. இரண்டு வேலைகளுக்குப் போகின்றார். பகலில் முழு நேர வேலை. இரவில் பகுதி நேர வேலை. உழைக்கும் பணத்தை நாட்டுக்கு அனுப்புகின்றார். வீட்டுக்கு அனுப்புகின்றார். அத்தோடு தனது குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொள்கின்றார். வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அவருக்கு தூக்கக் கலக்கத்திலேயே கழிகின்றது.

"என்ன! இன்னும் ஒரு பத்து வருஷம் உழைச்சேனில்லை. அதுக்குப் பிறகு உடம்பு ஆட்டம் கண்டுவிடும்."

தொலைபேசி அழைப்புகள்
இந்திரனது உறக்கத்தைக் கலைக்கும்போது அவர் கடுப்பாகிப் போகின்றார். இன்று அவருக்குப் பகல் வேலை இல்லை. 'றோஸ்ரர் டே ஓப்'. உடம்பு அசதி தீர நன்றாகப் படுத்து உறங்கலாம் என நினைத்திருந்தார்.

Sunday, 26 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்


அதிகாரம் 27 - சின்னக் கணக்கு

குட்டிப் போட்டிக்கோவில் நின்றுவீதியைப் பார்த்தேன்.

வீதியை அகலமாக்கி, கல்லடுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. காலையில் தொடக்கம் இரண்டு பெரிய கல்நெரிக்கும் எந்திரங்கள் பகல் முழுவதும் இரைந்து கொண்டிருந்தன. வேலை ஆட்கள் எல்லாம் புது முகங்கள். சீன தேச நன்கொடையில் அமைக்கும்வீதி.
வேலையாட்கள் வேலை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.

பிள்ளைகளே, சென்ற வகுப்பில் நாவல் மரத்தின் கீழ் கண்ணயர்ந்து போனேன் என்று கூறி முடித்தேன். இன்று அதன் தொடர்ச்சி.

கண்விழித்த பொழுது இருவர் ஸ்ரெச்சரில் என்னை வளர்த்துவது தெரிந்தது. செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் செல்லவில்லை.

கப்பலில் பிரயாணம் செய்தேன்.

Monday, 20 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 26 - அதிகார போட்டி

நான் மாட்டுத் தொழுவத்திலிருந்து திரும்பி வந்து விருந்தாளிகள் அறைக்குள் கால் வைத்தேன். பிள்ளைகள் அங்கு ஏலவே வந்திருந்தனர். அவர்கள் போர் முடிவை அறிய ஆவலாக இருந்தனர். குறிப்பாக அண்ணையைப் பற்றி அறிய ஆர்வம் காட்டினர். வதனங்களில் அவர்களது உள்ளத்து ஏக்கம் சோகம் பளிச்சென தெரிந்தது.

பிள்ளைகள். இன்றைக்கு ஆனந்தபுரம் போருக்கு முந்திய நாலாம் ஈழப் போர் தொடங்கி இறுதி ஆட்டம் வரை."

Wednesday, 15 April 2015

வர்ணபேதம் - சிறுகதை


ஒவ்வொரு நாட்களையும் எண்ணிக் கொண்டிருந்த சிவி இன்று அதிகாலை ஆறுமணிக்கே எழும்பி விட்டாள். ஞாயிற்றுக்கிழமைகளில் வழமையாக பத்துமணி மட்டில்தான் சிவி நித்திரை விட்டு எழும்புவாள். இன்று சிவிக்குப் பரிசளிப்பு விழா. 'ஹரிப்பொட்டர் கலறிங் கொம்பிற்றிசனில்' எட்டுவயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் சிவிக்கு முதலிடம் கிடைத்திருந்தது. பரிசு பெறும் உற்சாகம் அவளை நித்திரையிலிருந்து எழுப்பியிருக்க வேண்டும். பதினொரு மணி மட்டில் 'ஆக்லாந்து' பிரதான நகரத்தினுள்ள நூல் நிலையத்திற்கு வந்து சேரும்படி விழா நடத்துபவர்கள் கேட்டிருந்தார்கள்.

                இந்த வர்ணம் தீட்டும் போட்டியில் சிவி கலந்து கொண்டதே ஒரு தற்செயலான நிகழ்ச்சிதான். ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு அருகாமையிலுள்ள கடைக்கு போய்விட்டு வரும்போதுதான் அந்த பஸ்சைக் கண்டேன். அது ஒரு நடமாடும் நூல் நிலையம். வயது முதிர்ந்தவர்களுக்கும் இயதாவர்களுக்குமாகத்தான் அந்தச் சேவையை அவர்கள் அரம்பித்திருக்க வேண்டும். ஒருதடவை அதை எட்டிப் பார்க்கலாம் என்று போனேன். சொற்ப அளவு புத்தகங்களே அதற்குள் இருந்தன. வயதில் முதிர்ந்த இரண்டு பெண்கள் தாங்கள் வாசித்து முடித்த புத்தகங்களைத் திருப்பிக் குடுத்துக் கொண்டு நின்றார்கள். அதற்குள்ளிருந்த பெண் கனிவுடன் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

Monday, 13 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 25 -
ஆனந்தபுரம் ஆடுகளம்

வழமையில் மாலையில் வரும் பிள்ளைகள் இன்று காலையில் வருகிறார்கள் என்று மனதுள் எண்ணியபடி கிணற்றடியில் நின்று கேற்றைப் பார்த்தேன்.

'அன்ரி உங்கள் கூடாரத்தைச் சுற்றி புல்பூண்டு முளைத்திருக்குது. நுளம்பு நிரம்ப குடிகொண்டு விட்டது. பார்க்கவும் நல்லாயில்லை. பாம்பு பூச்சி வரும். துப்பரவாக்கப் போகிறோம்." கோமதி.
'உங்களுக்கு ஏன் பிள்ளைகள் சிரமம். நான் இரவில் புகைப்போடுகிறனான்."
'எங்களுக்கு இது பெரிய வேலை இல்லை, அன்ரி. விளையாட்டு மாதிரி." தங்கன்.

கங்காருப் பாய்ச்சல்கள் (4)

கனவுகள் ஆயிரம்

நல்ல நூல்களைப் பரிசாகக் கொடுங்கள் என்பார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதோ – அல்லது பாடசாலைகளில் நடைபெறும் பரிசளிப்புவிழாக்களின் போதோ அப்படித்தான் கொடுக்கின்றார்கள். இப்படியாக எங்கள் வீட்டிற்கு வந்த நல்ல புத்தகங்களில் சில – காலத்துக்குக்காலம் கால் முளைத்து ஊருக்குள் உலாவப் போகும். ஆனால் பத்திரமாக அவை திரும்பி வந்து சேர்ந்து விடும்.

1990 யூலை இடப்பெயர்வு. முதலில் உயிர், பிறகு உடமைகள். உடமைகளை விட்டு ஓடினோம். இரண்டுகிழமைகளின் பின்பு விட்டுபோன பொருட்களை எடுக்க வந்தபோது – ‘ஷெல்விழுந்து ஓடுகள் உடைந்து மழைநீர் உட்புகுந்து – உள்ளே ஏற்கனவே கள்வர்கள் சீர்குலைத்துவிட்டுப்போன புத்தகங்களை நாசமாக்கி இருந்தது.

Saturday, 11 April 2015

ஃபொலோ மி ! - சிறுகதை

ரி.வி.யில் 'டிஸ்கவரி சனல்' பார்த்துக் கொண்டு, இறைச்சி வெட்டும் கத்தியை தீட்டிக் கூர் பார்த்துக் கொண்டிருந்தார் 'இஞ்சாருங்கோ'. 120cm  LCD ரி.வி. அவரின் கால்மாட்டின் கீழ் இருந்த சின்ன 'ஷெல்' சிணுங்கியது.

"ஹலோ! ஹலோ!! இஞ்சாருங்கோப்பா. பாதையை தவற விட்டிட்டன்."
"மஞ்சுவை ரியூசன் சென்ரலிலை விட்டிட்டீரா? அதை முதலிலை சொல்லும்."

"ஓமப்பா. விட்டிட்டு வெளிக்கிடேக்கைதான் இந்த உபத்திரவம்."
"மஞ்சுவை விட்டது நல்லதாப்போச்சு. சரி. உதிலை காரை விட்டிட்டு பக்கத்திலை இருக்கிற றோட்டு ஒண்டின்ர பேரைச் சொல்லும். நான் எப்பிடி வாறதெண்டு 'மெல்வே'யைப் பாத்துச் சொல்லுறன்."

Monday, 6 April 2015

தெ.நித்தியகீர்த்தி

"மெளனமாகக் கண்ணீர் வடிக்கும் சிலரின் மன ஓலங்கள் வலியைத் தரும் வரிகள் ஆகின்றன. அந்த வரிகளுக்குள் உங்கள் வாழ்வின் சில கீறல்களும்....!  கீறல்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டுமா? தூண்டல்கள் உலகின் மனச்சாட்சியைத் தீண்டுமா?" - இந்த வரிகளைத் தாங்கிக் கொண்டு வெளிவர இருந்த நாவல் 'தொப்புள் கொடி'.

'தொப்புள் கொடி' என்ற தனது நாவலை வெளியிடுவதற்கு மூன்று நாட்கள் முன்பதாக தெ.நித்தியகீர்த்தி அவர்கள் 15-10-2009 அன்று மாரடைப்பால் காலமானார்.

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 24 - வீரத்தின் மகிமை

டானியலின் நீல ஜீப் நயினாமடு முகாம் பக்கமிருந்து மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

நான் பிள்ளைகளை அவதானித்தேன். சோபாக்களில் கதை கேட்கும் பதினொரு பேர். வழமையைப் போல அழகாக உடுத்து அலங்கரித்து வந்திருக்கிறார்கள். இன்றைக்கு விசேடமாக நெற்றி யில் வீபூதி சந்தனப் பொட்டு. என் உள்மனம் பேசியது.

'இன்று மூத்தண்ணர் வீரக்கோன் பற்றிய கதை. அவர் புளியங்குள விடுதலைப் புலிகள் முகாம் சென்ற தோடு கதையை முன்னர் நிறுத்தியிருந்தேன். பாவலன் இயக்கத்தில் சேர முன்னரே மூத்தண்ணர் இந்தியாவில் தஞ்சாவ்வூரில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.

மாஜாயாலத் தண்ணீர் - கதை


'சென்ற் கீலேஸ் பே'(St Heliers Bay) கடற்கரை நியூசிலாந்தில் ஓக்லாண்ட் நகரில் உள்ளது. மிகவும் அழகான கடற்கரை.

ஒரு பாறையின் அருகில் நானும் எனது கணவரும் அமர்ந்திருந்தோம். நல்ல வெய்யில். காலை பதினொரு மணி. கடற்கரையில் திருவிழாக்கூட்டம் போல மக்கள். 'வெய்யில் மினுங்கத் தொடங்கினால் வெள்ளையள் வெளிக்கிட்டிடுவினம்'

தூரத்தில், தோளில் ஒரு சீலைப் பையுடன் நெடிய ஒல்லியான ஒரு ஆணும்அவனுக்கு சற்றும் பொருந்தாத வகையில் புசுபுசுவென்று கொழுத்த ஒரு பெண்ணுமாக எம்மை நோக்கி வருகின்றார்கள். வந்ததும் தாமதமின்றி எங்கள் முன்னால் மணலிற்குள் இருந்தார்கள். நெடியவன் அடிக்கடி தலையை கிலுகிலுப்பை ஆட்டுவது போல ஆட்டினான். அவள் புஸ் புஸ் என்று மூச்சை இழுத்து விட்டாள்.

Wednesday, 1 April 2015

ஊர் மணம் - தெல்லிப்பழை

ஊர் தெல்லிப்பழை என்றாலும், இதில் வரும் பல அம்சங்கள் தெல்லிப்பழையையும் அதனைச் சூழ்ந்துள்ள கிராமங்களையும் சார்ந்ததாகவே இருக்கும்.

மல்லாகம், அளவெட்டி, அம்பனை, கொல்லங்கலட்டி, மாத்தனை, வீமன்காமம், கட்டுவன், வறுத்தலைவிளான், மாவிட்டரம் என்பன தெல்லிப்பழையைச் சூழ்ந்துள்ள கிராமங்களாகும்.கிராமங்களின் இயற்கை எழில் மிகவும் ரம்மியமானது. ஒவ்வொரு கிராமங்களிலும் வீட்டிற்கு ஒரு கிணறு இருக்கும். கோடை காலங்களில் இவை வற்றிப் போனாலும் நீரிற்குப் பஞ்சம் இருப்பதில்லை. துலாக்கொடியில் வாளியைக் கட்டி தண்ணீரை அள்ளி விடுவோம். குடிப்பது, குளிப்பது, சமையல் செய்வது, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது எல்லாமே இந்தக் கிணற்று நீரில்தான்.

'நினைவுக் கோலங்கள்' புத்தக விமர்சனம்.
நாடறிந்த எழுத்தாளர்  திரு.லெ.முருகபூபதி. தற்போது அவுஸ்திரேலியாவில் மெல்பர்ண் நகரில் வசிக்கின்றார். இருபது புத்தகங்களிற்குச் சொந்தக்காரர். அவர் 'சுமையின் பங்காளிகள்' சிறுகதைத்தொகுப்பிற்கு 1976 இலும் 'பறவைகள்' நாவலிற்கு 2002 இலும் 'இலங்கை சாஹித்திய விருது' பெற்றவர்.

நினைவுக் கோலங்கள் திரு. லெ. முருகபூபதியின் ஆறாவது சிறுகதைத்தொகுப்பு. தமது வாழ்வின் அனுபவங்களை சுவைபடக்கூறும், சுயசரிதைப் பாங்கிலான சிறுகதைத்தொகுப்பு. கதைகள் நீர்கொழும்பு எனும் நெய்தல் நிலத்தைச் சுற்றி வருகின்றன. இந்தக்கதைகளை வாசிக்கும்போது நாங்களும் எமது இளமைக்காலங்களிற்கு பயணிக்கின்றோம்.

முன்னுரையில் நீர்கொழும்பிற்கு ஏன் 'மீகமுவ' என்ற சிங்களப்பெயரும், 'Negombo' என்ற ஆங்கிலப் பெயரும் வந்ததென குறிப்பிடும் ஆசிரியர் - அதற்கு ஏன் 'நீர்கொழும்பு' என்ற பெயர் வந்ததற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. மொத்தம் பதின்னான்கு கதைகள். சம்பவங்கள் யாவும் சுவையாக ஒரு ஒழுங்கு முறையில் கால வரிசைப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன.