Wednesday 28 July 2021

கிருஷ்ணன் தூது – எனக்குப் பிடித்த சிறுகதை



 


 


சாந்தன்


காலையில் வந்து கையெழுத்து வைக்கிறதற்கு அடுத்த வேலை

துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்டரை எடுத்து,

வரைபலகையையும் `ட்ராஃப்ரிங் மெஷினை'யும் அழுத்தித் துடைக்க வேண்டியிருக்கும். பியோன்மார் சாட்டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக் கூடிய இரண்டு தட்டுதல் போதாது. ஒரு சொட்டு ஊத்தை போதும் - படத்தைப் பாழாக்க.

வெள்ளிக்கிழமை உந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சேனாதிபதி கூப்பிட்டான். துடைத்து முடித்து `வாஷ்பேஸி'னில் கையையுங் கழுவிவிட்டு சேனாதியடிக்குப் போனபோது, அவன் அதைக் காட்டினான்.

“என்ன, உது?”

ஒரு அச்சு புறூஃப், சின்னத்துண்டு. `நலன் செய் சங்கம்' என்று போட்டு, எதிரே கந்தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண் கீழே. தலைவர். செயலாளர், பொருளாளர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப, சேனாதியின் பெயர். உப-செயலாளர் என்பதற்கு எதிரிலிருந்தது. எல்லாம் இரண்டு மொழிகளில் - தமிழிலில்லை.

சினமாய் வந்தது.

“லெற்றர் ஹெட்தானே?"

சேனாதி தலையாட்டினான்.

“இங்கிலீஷிலை போட்டிருக்கிறதைத் தமிழிலை போட்டால்

என்ன?"

Thursday 22 July 2021

ஞானம் ஆடி, 2021 (254வது இதழ்) சிறுகதைகள் குறித்து

17 -07 - 2021 அன்று இடம்பெற்ற ஞானம் -254 இதழ் தொடர்பான கருத்தாடலில் சிறுகதைகள் பற்றி  வழங்கிய கருத்துரை

இதழில் மொத்தம் 5 சிறுகதைகள் இடம்பெறுகின்றன.

வசந்தி தயாபரன் அவர்கள் எழுதிய `ஆழிசூழ் உலகு’,

வி.ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய `மரணப் படுக்கை’

முருகபூபதி அவர்கள் எழுதிய `எங்க ஊர் கோவூர்’

சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் எழுதிய `பொலிஸ் வருது’

மூதூர் முகைதீன் அவர்கள் எழுதிய `எதிர்பார்ப்பு’

இவற்றுள் ஆழிசூழ் உலகு, மரணப்படுக்கை, எதிர்பார்ப்பு என்ற 3 கதைகளும் நனவோடை உத்தியில் எழுதப்பட்டிருக்கின்றன. எங்க ஊர் கோவூர், பொலிஸ் வருது இரண்டும் நேரடியாக எழுதப்பட்டுள்ளன.