Saturday, 24 December 2016

அப்பாக்கள் இருவர் – சிறுகதை

வவனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர் கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவனியா சென்று அங்கிருந்து புகையிரதம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ போக வேண்டும். பஸ் பிரயாணம் ஆபத்தானது. சிங்களக் காடையர்கள் பஸ்சை இடையிலை மறிச்சு தமிழ் மக்களைத் தொந்தரவு செய்வார்கள். இளைஞர்களைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.

நாங்கள் வவனியா புகையிரத நிலையத்திற்கு ஒரு மணியளவில் போய் விட்டோம். ஒரே சனக்கூட்டம். ஒன்றரை மணிக்குத்தான் கொழும்புக்குப் போகும் புகையிரதம் வரும்..

“நான் ‘பாக்’ ஒண்டை கோணர்சீற்றுக்கு எறியிறன். நீ அப்பாவைக் கூட்டிக்கொண்டு கெதியிலை ஏறு. என்னைப் பாக்க வேண்டாம். நான் எப்பிடியோ ஏறிவிடுவன்” தம்பியைப் பார்த்துச் சொன்னேன்.

Thursday, 22 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்


யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

19.   மாலையில்கண்விழிக்கும் மைதானம் 

     விளையாட்டுத் துறைக்குத் திரு.வி.பாலசிங்கம் அவர்கள் பொறுப்பாக இருந்தார். பழைய மாணவராகிய, வீமன்காமத்தைச் சேர்ந்த அவர், கல்லூரிப் பற்றோடு காலநேரம் பாராமல் உழைத்தவர். பயிற்றப்பட்ட உடற் கல்வி ஆசிரியர். கடுமையான உழைப்பாளி. தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த அவர் எடுத்த முயற்சியைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவர். நன்றி மறவாத நேர்மையாளர். எனது நலன்களில் மிகவும் கரிசனை காட்டிய பல உயரிய மாண்புகள் நிறைவுறப் பெற்றவர். மாணவர்கள் மிக்க மரியாதை கொடுத்த ஆசிரியர். பாடசாலை ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு மிக்க உதவியாக இருந்தவர். அவரின் தலை தெரிந்தாலே மாணவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள். தலையைக் குனிந்து கொண்டு நழுவுவார்கள்.

Tuesday, 20 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
18. தோள்கொடுத்த தோழர்கள்
        
    முதல் நாளே திணறினார்.

     அதிபராகி நான்கு வருடங்கள் கழித்து ஒரு வெள்ளி இரவு எனக்கு ‘ஹாட் அற்றாக்’ வந்தது. அப்பொழுதுதான் முதன் முதலாக, அடுத்து வந்த திங்கட்கிழமை விடுதலை எடுத்தேன். அதிபராகிய பின்னர் எடுத்த ‘லீவின்’ முதல் நாள். பிரதி அதிபர் பொறுப்பாக இருந்தார். அவருக்கு அது முதல் நாள். ஒரு தினம்கூட முகாமைத்துவ சுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினார். கல்லூரிச் செயற்திட்டத்தில்  ஒழுக்காற்றுக் குழு ஒன்று நிரந்தரமாக இருந்தது. அதில் அதிபர், பிரதி அதிபர், பகுதிப் பொறுப்பாளர்கள், மாணவிகள் ஒழுக்கப் பொறுப்பாளர்கள் அங்கத்தவராக இருந்தனர். அவர்களில் மூவர் இப்பொழுது கனடாவில் வாழ்கிறார்கள். எனது பதவிக் காலத்தில் நான் ஒரு தடவைகூட அதனைக் கூட்டியது கிடையாது. ஓர் அற்ப விடயத்தைக் கையாளத் தெரியாமல், முதல் நாள் திங்கட்கிழமை ஒரு தவறு விட்டார். இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமை ஒழுக்காற்றுக் குழுவைக் கூட்டி அந்தத் தவறைப் பூதாகாரமாக்கினார். மூன்றாம் நாள் புதன்கிழமை யாழ்-காங்கேசன்துறை வீதியில் ஊர்வலம் வைத்து மாதவறு செய்தார். அது இன்னொரு தவறுக்கு வழிசெய்தது. அந்தத் தவறுகள் என்னைப் பாதிக்காமல் விடவில்லை.

Sunday, 11 December 2016

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை

ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால் என்ன என்று ரமணனுக்கு தோன்றியது.

நடராஜா மாமாவின் மகன் ரகுவின் திருமணத்தின் போது மாப்பிள்ளைத் தோழனாக தான் நின்றதை ரமணன் நினைத்துப் பார்த்தான். பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தடல்புடலான கலியாணம் அது. மாப்பிள்ளை, மாப்பிள்ளைத் தோழனுக்கு வேலை எடுத்துக் தராமல் வேறு யாருக்கு வேலை எடுத்துக் கொடுப்பார்?

ரகுவிற்கு திருமணம் நடந்தபோது ரமணன் பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான். தினமும் ரகு வேலைக்குப் போகும்போது ரமணனும் அவரது சைக்கிளில் ஏறிக் கொள்வான். அது ஒரு காலம்.

Saturday, 10 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
17.   “வரச்சொல்லுங்கள்! விசாரியுங்கள்!”

     கல்விசார் ஆளணியினர் சரிவரக் கடமை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிபருக்கு, அவர்கள் சார்ந்த பொறுப்பும் கடமையும் உண்டு. பாடசாலை நேரத்தில் அவர்களுக்கு வரும் இடைஞ்சல் சமயங்களில், அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவியளிக்கவும் பின்நிற்கக் கூடாது. பொதுவாகப் பெற்றார்கள் சிலர் மிக்க உணர்ச்சியுடன் வருவார்கள். குறிப்பாக மாணவர்களை அரவணைத்துச் செல்ல முடியாத ஆசிரியர்கள் பற்றியதாகவேயிருக்கும். அவ்வேளைகளில் ஆசிரியரைப் பாதுகாக்க வேண்டியது அதிபரது கடமை. நடுநிலையென்று ஏனோதானே என்று விடயத்தைக் கையாள்வது விபரீதமாக முடியவும் வாய்ப்பாகிவிடும். ஒரு பதம்.

Friday, 9 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன்கல்லூரி பதிவுகள் நினைவுகள்

16.   பிரதமர் கொண்டுவந்த அரங்கம்


பனையடைப்பில் திறந்தவெளியரங்கு அமைந்தமைக்குச் சுவாரஸ்யமான  ஒரு கதையுண்டு. பிரதமர் கௌரவ ஆர்.பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகைதர விருந்தார். அச்சமயம் அவர் தெல்லிப்பழையிலும் சொற்பொழிவாற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டன. அது யூ.என்.பி. அரசியல் பிரசாரச் சுற்று வருகையாகவே இருந்தது. தெல்லிப்பழையில் யூனியன் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது. சுதந்திரப் போராளிகளின் ஆரம்ப கட்டம். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுக் காங்கேசன்துறைக் காவல்நிலைய அத்தியட்சகர் எனது அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

Monday, 5 December 2016

முதலும் வட்டியும்

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

இராயப்பு நகை அடைவு பிடிப்பவர், வட்டிக்கு காசு கொடுப்பவர்.

எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு திடீரென மாயமானார்.

திரும்பி வந்தவர் எல்லோருக்கும் கையை விரித்தார்.

பதம் பார்க்க பலரும் காத்திருந்தனர். ஒருநாள் பொலிஸ் ஸ்ரேசனுக்கு அருகில், சாக்கு மூட்டையைக் கவிழ்த்து மொத்தினார்கள்.

மயங்கிய நிலையில் கண்ட பொலிசார்,
“சத்தம் போட்டிருந்தா கலைச்சிருப்போமல்லே” என்றதற்கு இராயப்பு வாயைத் திறந்து பே பே என உழறினார்.


வங்காளவிரிகுடாவிற்குள் ஆறு தங்கப்பற்கள் ஜொலித்தன.

Sunday, 4 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
15. சேவகனும் நானே. எஜமானும் நானே.
  
     யூனியன் கல்லூரியது எழுச்சியின் சூத்திரம் - வருடாவருடம் தயாரித்து நடைமுறைப் படுத்திய வருட முகாமைத்துவ-நிருவாகச் செயற்திட்டத்திலேயே (யுnரெயட ஆயயெபநஅநவெ Pசழதநஉவ) –தங்கியிருந்தது. அதனை ஒரு முறை வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு.சிவநாதன் அவர்கள் எனது கதிரையில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். அவர் திடீரென,

     “என்ன தலையலங்காரம் பற்றிக்கூட (ர்யசைனழ)  எழுதியிருக்கிறது?” என்றார்.

          பின்னர் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி புவனேஸ்வரி சச்சிதானந்தன் அவர்கள் அந்த செயற்திட்டத்தைப் பார்க்க வந்திருந்தார். திரு.சிவநாதன் அவர்கள் அது பற்றி வியந்து கூறிப் பார்வையிடச் சொன்னதாகத் தெரிவித்தார்.

Friday, 2 December 2016

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' சிறுகதை விமர்சனத்தை முன் வைத்து

முனைவர் துரை. மணிகண்டன் & முனைவர் கணபதிராமன்
விமர்சனம் என்பது இப்பொழுது குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் விமர்சனம் செய்யப்படாத நூல்கள் தகுதியில்லாத நூல்களாக ஆய்வாளர்களால் கருதப்பட்டது. இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. காரணம் இன்று யாரும் விமர்சனத்தை விரும்புவது இல்லை. அப்படியே விமர்சனம் செய்யப்பட்டாலும் புகழ்ந்து கூறினால் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால், அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் இருக்கின்றனர்.

Thursday, 1 December 2016

வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சிறுகதை, கவிதைப் போட்டி முடிவுகள் - 2016


அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி உலகளாவியரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2016