Wednesday, 20 March 2019

முரண் – கோமகனின் புதிய சிறுகதைத்தொகுதி குறித்து.


இந்த வருடம் (2019) `எதிர்’ வெளியீடாக வந்திருக்கும், கோமகனின் ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை ஆர்வமாக வாசித்தேன். சில கதைகள் புதிய அனுபவத்தைத் தந்தன. சில கதைகள் பழகிய தடத்திலே ஓடிச் சென்றன. சுற்றுப்புறச் சூழல் மாசடைதல், சமுதாயச் சீர்கேடு, ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவுகள், அகதி வாழ்வு எனப் பல வகைப்பாடுகளில் கதைகள் அமைந்திருந்தன. மனிதர்களுடன் அஃறிணைகளும் கதைகள் பேசின.

முதலாவது கதை ‘அகதி’ ஒரு புறாக்கதை எனப்பிடிபட சற்று நேரமாகிவிட்டது. ‘நான் எனது மனைவி மற்றும் எமக்குப் பிறந்த 10 மக்களும்…’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், ‘ஒருநாள் பல்கனியில் எனது சகதர்மினி முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து கொண்டிருந்தாள்’ என்ற பத்தி வந்தபோதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. புறா ஒரு நேரத்தில் ஆகக்கூடியது எத்தனை முட்டைகள் இடும்?

Tuesday, 12 March 2019

`அக்கினிக்குஞ்சு' இணையத்தளத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா
இசையருவி பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விபரங்கள்! 

1. அவுஸ்திரேலியாவில் வாழும் எவரும் இப்போட்டியில் பங்குகொள்ளலாம்.

2. வயதெல்லையோ பால் வேறுபாடோ இல்லை.

3. போட்டியில் தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடுதல் வேண்டும் என்பதுடன் சுருதி தாளத்துடனும் பாடுதல் வேண்டும்.

4. தெரிவுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கட்டணம் 25 அவுஸ்திரேலிய வெள்ளிகள் (A$ 25) ஆகும். 28.02.2019 இற்கு முன்னர், அனுமதிக்கட்டணத்னைச் செலுத்தி விண்ணப்பித்தல் வேண்டும்.

5. தெரிவுப்போட்டியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்து போட்டியாளர்களுக்கான இறுதிப்போட்டி 27.04.2019 அன்று இசைவிழாவில் இடம்பெறும்.

Saturday, 9 March 2019

நீ பாதி நான் பாதி கண்ணே!


நான் ஒரு சங்கத்தில் பொருளாளராக இருந்தேன். எமது கலைவிழா நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தமுறை நுழைவுச்சீட்டு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். நாடகம், குறும்திரைப்படம், கவிதை அரங்கு, நாட்டுக்கூத்து, தென்னிந்தியாவிலிருந்து திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் என ஒரு அமர்க்களமாக இருப்பதால் நுழைவுச்சீட்டுகளை தனிநபருக்கு 40 டொலர்கள் எனவும், குடும்பத்திற்கு 80 டொலர்கள் எனவும் போட்டிருந்தோம்.

ரிக்கெற் விற்பனை வேட்டையில் ஒரு மார்க்கமாகச் சுற்றித் திரிந்தேன். என்னைக் கண்டு ஆக்கள் கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினார்கள். என்னுடன் படித்த சக நண்பர்கள் சிலர் இங்கிருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து முதலில் ஆரம்பிப்போம் என்ற நினைப்பில் நண்பன் சிவபாலனைத் தேடி ‘வொடங்கா’ என்னுமிடம் நோக்கிச் சென்றேன். மெல்பேர்ணில் இருந்து மூன்றரை மணி நேரப் பயணம். ரிக்கெற் விற்க வருகின்றேன் என்று சொல்லாமல், ”ஒரு சந்திப்பு மச்சான்! கனநாள் காணேல்லைத்தானே… நீயும் தனிய இருக்கிறாய்…”