கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 20 - கோப்பி கொடுத்த ஊத்தைவாளிகள்
நேரம் நள்ளிரவு. 'அந்த
நெட்டை வடுவாதான் நதியாவைக் கடத்தியிருப்பான். நீ உடனே இங்கே
வா” என்று கில்லாடி கூறிய
சொற்களைக் கேட்ட சால்வை மூத்தானின்
குறும் மயிர்கள் ஆத்திரத்தில் நிமிர்ந்து
எழுந்து நின்று சதுராடின. அவனுக்கு
அந்த உயர்ந்த கூட்டத்தின் மீது
இப்போதும் காய்ச்சல். காரணம் அவர்கள் லண்டனிலும்
யாழ்ப்பாண மேலாண்மையைக் காட்டுவதாக அவன் சொல்கிறான்.
மூத்தானுக்கு அருமையான சந்தர்ப்பம். அதை
அவன் தவறவிட விரும்பவில்லை. பிஸ்ரலையும்
சன்னங்களையும் எடுத்துக் கொண்டு ஆற்றுப் பறக்கப்
புறப்பட்டான்.
கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி
குகன் இருவரையும் அழைத்துக் கொண்டு மூத்தான் அரை
மணி நேரத்துள் கில்லாடி வீடு போய்ச்
சேர்ந்தான்.








