Friday, 30 October 2015

புதியதோர் உலகம் - குறுங்கதை


நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள்.

முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது 'போர்வேட்' பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் 'மெசஞ்சரில்' (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள்.

Thursday, 29 October 2015

உள்ளும் புறமும் - குறும் கதை



'மெடி கிளினிக்'கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில் ஏராளமானவருக்கு அவர்தான் 'ஃபமிலி டொக்ரர், ஜி.பி (G.P)'.

மோகனும் நளினியும் ஒரு மூலையிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகன் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தான். சிறுவர்கள் விளையாடுவதற்கென வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைக் கொட்டிச் சிந்தி விளையாடினான். கதிரைகளில் ஏறிக் குதித்து இறங்கினான். அவற்றின் ஒரு முனையால் புகுந்து மறுமுனையால் வெளியேறினான். துள்ளித் துள்ளி நடந்து அழகு காட்டினான். 'கொபி ரேபிளில்' வைத்திருந்த பேப்பர் சஞ்சிகைகளை விரித்துப் படித்து அங்குமிங்குமாக வைத்தான்.

Wednesday, 28 October 2015

கதிர்.பாலசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

படைப்பிலக்கிய ஆர்வலர்களுக்கு இலத்திரனியல் வரப்பிரசாதம்
(யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்
Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின.
கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) தனது ஈழத்துச் சிறுகதை வரலாறுஎன்னும் நூலில் இவரது அந்நிய விருந்தாளிஎன்னும் சிறுகதைத்தொகுப்பில் உள்ள உயர உயரும் அன்ரனாக்கள் என்னும் சிறுகதை, 1961 – 1983 காலகட்டத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான சிறுகதைகளுள் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பதினெட்டுக்கதைகளுள் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ளார்.
அயராமல் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறை எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில் இருக்கின்றார். )

Tuesday, 27 October 2015

மதங்களின் பெயரால் - குறும் கதை



நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் 'அக்ஷிடென்ற்' ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான். விபத்து நடந்தது மாலை நான்கு மணிக்கு. இப்போது நேரம் இரவு 10 மணி. அவரின் மகன் கார் ஓடிக்கொண்டு போகும்போது 'புற்ஸ்கிறே' (Footscray) என்ற இடத்தில் விபத்து நடந்தது. அவனுக்கு தலை வெடித்து 12 இழைகள் போடப்பட்டிருப்பதாகவும், தனக்கு நெஞ்சில் கார் பெல்ற் இழுத்ததில் சாதுவான நோ எனவும் சந்திரன் சொன்னான். மகன் நாளைக் காலையில் ஹொஸ்பிட்டலில் இருந்து வீடு வந்துவிடுவான் எனவும், எங்களை பத்துமணி மட்டில் வீட்டுக்கு வந்தால் போதுமானது என்றும் சொன்னான்.