Friday 24 June 2016

அவுஸ்திரேலியாவில் சிறுகதை, கவிதைப் போட்டிகள்.

அவுஸ்திரேலியாவில் மெல்பேணிலிருந்து ஒலிபரப்பாகும் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அனைத்துலக ரீதியான சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்

1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டிகளில் பங்கு பற்றலாம்.

2. சிறுகதை, கவிதைப் போட்டிகளில் ஏதாவது ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஒருவர் பங்கு பற்றலாம். ஆனால் ஒருவர் ஒரேயொரு சிறுகதையை அல்லது ஒரேயொரு கவிதையை மட்டுமே அனுப்பமுடியும்.
3. ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.

4. ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாவோ, பிரசுரிக்கப்பட்டனவாகவோ அல்லது வெளியிடப்பட்டனவாகவோ இருத்தல் கூடாது.

5. தாளின் ஒரு பக்கத்தில் மாத்திரம் எழுதப்படல் வேண்டும். தட்டச்சு, கல்லச்சு, அல்லது வேறுவகையான அச்சுப்பதிவு செய்து அனுப்புதல் தெளிவு கருதி வரவேற்கப்படலாம். ஆனால் இது ஆக்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் ஏதுக்களில் ஒன்றாக அமையாது.

6. போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கம் அமைந்துள்ள தாளில் அல்லது பக்கத்தில் அன்றிப் பிறிதொரு தாளில் அல்லது பக்கத்தில் போட்டியாளர் தனது பெயர், புனைபெயர், வயது, முகவரி ஆகிய விபரங்களை எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும்.

7. விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வானமுதம் ஒலிபரப்புச் சேவையின் அறிவிப்பாளர்கள் எவரும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாது.

8. இப்போட்டிகளில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.

9. போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கமெதையும் சஞ்சிகையெதிலும் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில்

ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் வானமுதம் ஒலிபரப்புச் சேவையினருக்கு உரித்துண்டு.

10. வானமுதம் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

11. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.

12. 12 கவிதைப்போட்டிக்கு அனுப்பப்படுபவை மரபுக்கவிதையாயின் 40 வரிகளுக்கு குறையாமலும், புதுக்கவிதையாயின் 240 சொற்களுக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.

13. கவிதைகள் பிவரும் தலைப்புக்களில் ஒன்றைப் பற்றியதாக இருக்கவேண்டும்.

a. உலகமொழியாக உயர்ந்த தமிழ் !

b. ஊடங்கள் தமிழை உருக்குலைக்குமா ?

c. தாயகங்களில் தமிழ் நிலைக்குமா?

d. செந்தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றுவோம் !

e. வீரம் நிறைந்த தமிழினமே, சோரம்போகலாமா?

14. முடிவுத்திகதி 05.செப்டம்பர் 2016. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக ஆக்கங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.


அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :-

Vaanamutham

Whittlesea Tamil Association

P.O.BOX - 93. Thomastown. Victoria - 3074. Australia.

மின்னஞ்சலில் :- vaanamutham@hotmail.com


இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பிவருமாறு :-

சிறுகதை - முதலாம் பரிசு 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

இரண்டாம் பரிசு 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

மூன்றாம் பரிசு 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்


கவிதை - முதலாம் பரிசு 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

இரண்டாம் பரிசு 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

மூன்றாம் பரிசு 50 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

3 comments:

  1. அன்பரே, கதைக்கான தலைப்பு ஏதும் உண்டா? மின்னஞ்சலில் ஆஸ்கி கோடு மூலம் தட்டச்சு செய்து அனுப்பலாம் தானே.. ஏனெனில், பேப்பரில் எழுதி போஸ்ட் செய்தல் கொஞ்சம் மெனக்கெடவேண்டும்.. தவிர்க்க.வே கேட்டுக்கொள்கிறோம். வரவேற்கிறோம்.

    அன்புடன்
    துரை.தியாகராசு

    ReplyDelete
  2. வானமுதம் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
    vaanamutham@hotmail.com

    ReplyDelete
  3. அன்புடன் துரை.தியாகராசு அவர்களுக்கு,

    வானமுதம் அமைப்பினருடன் தொடர்பு கொண்டேன். கதைக்கான தலைப்பு எதுவும் இல்லை. மின்னஞ்சல் மூலமும் படைப்புகளை நீங்கள் அனுப்பலாம்.

    ReplyDelete