Monday, 28 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

14.   “கோவில் கட்ட முன்னர் ஏன் தெரிவிக்கவில்லை?”


        கல்லூரி வளாகத்துள் அம்பாள் கோவில் கட்டியபொழுது பழைய மாணவர் சங்கத்தில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதனைப் பற்றிய கேள்வி எழவும் இல்லை. ஆனால் கோவில் கட்டி முடிந்த பின்னர் நடந்த பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் திரு. எஸ்.ஆர்.ஜேசுபாலன் அவர்கள் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார்.  -1986-

“கோவில் கட்டுவதைப் பற்றி நீங்கள் ஏன் பழைய மாணவர் சங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை?” 

Wednesday, 23 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
 13.   அம்பாள் ஆலயத்தின் வருகை-1986

அம்பாள் ஆலயத் திருப்பணி, யூனியன் கல்லூரி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். யூனியன் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் 95 சதவீதம் சைவசமய மாணவர்களாகும். இருந்தும் அவர்களது தேவைகள் அபிலாசைகள் கவனிக்கப்படாமல் இருந்தன. 1962இல் அரசு கல்லூரியைப் பொறுப்பேற்றதும் நவராத்திரி விழா ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஒரு பத்தியில் சுவாமி படத்தை வைத்து காலையில் வணங்கினர். மாணவர்களது சைவசமயம் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் இரண்டு வகையாக இருந்தன. ஒன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் திருவிழாச் செய்வது. அடுத்தது வசதியான ஆகம விதிப்படியான கோவில் அமைப்பது.

Tuesday, 15 November 2016

மரத்துடன் மனங்கள் - சிறுகதை

இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.

”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”

“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”

இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.

கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.

Saturday, 12 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
                   


12.   சீருடையில் புதிய பொலிவு                  

யூனியன் கல்லூரியின் செழுமைக்கும் முழுமைக்கும் பூரண சீருடை தேவைப்பட்டது. பெண்பிள்ளைகள் முன்னரே வெள்ளைச் சீருடை அணிந்து ரை கட்டி வந்தார்கள். ஆனால் கால்களில் பாட்டா செருப்புக்கள். தோல் செருப்புக்கள். செருப்பில்லாதவர்கள். ஆண்கள் விரும்பிய வண்ண உடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு குருவிகூடக் கால்மேஸ் சப்பாத்து அணியவில்லை. விரும்பிய தலையலங்காரம். பறக்கலாம். சுருட்டிவிடலாம். ஆணும் பெண்ணுந்தான். திருவிழாக் காலக் கோலத்தில் வந்து போனார்கள்.

Friday, 11 November 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (-18)

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்

(ஜூன் 2012 வல்லினம் சஞ்சிகையில் வந்தது. பொருத்தப்பாடு கருதி மீண்டும்)

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தனது 12வது எழுத்தாளர்விழாவை, மே மாதம் மெல்பேர்ணில் கொண்டாடியுள்ளது. இயந்திரமயமான வாழ்விலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மெல்பேணில் தமிழுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் என்றவுடன் இருவரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒருவர் லெ.முருகபூபதி, இலங்கையில் சர்வதேச எழுத்தாளர்விழாவை முன்னின்று நடத்தியவர். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழாவின் மூலகர்த்தா. மற்றவர் இப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராக இருக்கும் சு.ஸ்ரீகந்தராசா. இவரும் ஈழம் தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம் போன்றவற்றில் தலைவராக இருந்தவர். ஆரம்பகாலம் முதல் தமிழ் எழுத்தாளர்விழாவுடன் தொடர்புடையவர். இவர்களுடன் கலைவளன் சிசு.நாகேந்திரன், மாத்தளை சோமு, கவிஞர் இளமுருகனார் பாரதி, ஓவியர் ஞானம், திருநந்தகுமார், திருமதி கனகமணி அம்பலவாணர், மதுபாஷினி (ஆழியாள்), அருண் விஜயராணி, சண்முகம் சபேசன், செந்தூரன், மு.நந்தகுமார், செல்வபாண்டியன், சட்டத்தரணி செ.ரவீந்திரன், எஸ்.கொர்னேலியஸ், என்.எஸ்.நடேசன், விமல் அரவிந்தன், 'வானொலி மாமா' நா.மகேசன், க.சிவசம்பு, மாலதி, கெளசல்யா, கிருஸ்ணமூர்த்தி எனப் பலர் இம்முறை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Monday, 7 November 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (19)

மெளனம் கலைகிறது (4)


நித்தியகீர்த்தியின் வாக்குமூலமும் ’அந்த’ நபரும்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றது. அப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இருக்கவில்லை.

சங்கம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சங்கத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் பெரும்பாலும் நல்லைக்குமரன் குமாரசாமி அவர்களின் வீட்டில் நடந்தன. இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டபோது அங்கு முருகபூபதி, கே.எஸ்.சுதாகர், அருண் விஜயராணி, சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அல்லமதேவன், மாலதி, கனகமணி, சிசு நாகேந்திரன் என்பவர்கள் அங்கு இருந்ததாக ஞாபகம்.

சங்கத்தை ஆரம்பிக்கும் பொழுது, அதன் யாப்பு விதிகளை அமைத்தவர் கூட்டத்தில் பின்வருமாறு சொன்னார்.

“ஒரு குறிப்பிட்ட நபரை, சங்கத்திற்குள் எக்காலத்திலும் நாம் அனுமதிக்க முடியாது. மீறி வந்தால் நான் போய் விடுவேன்.”

Sunday, 6 November 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
 11.   மர்மத்தில் ஆரம்பித்த கதை
                                   
யூனியன் கல்லூரியின் 163 வருட அடிப்படைக் கட்டுமானத்தினைப் புதுக்கி அமைத்த முதற் கட்டம் 1979 ஜனவரி முதலாந் திகதி நிகழ்ந்தது. யூனியனிலிருந்து ஆரம்ப பிரிவைப் பிரித்தெடுத்து, தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியைத் தனித்தியங்க வைத்த கதை மர்மத்தில் ஆரம்பித்தது. அதனை அடுத்து ஆரம்ப பிரிவைத் தனித்துவமாக இயங்க வைக்க எடுத்த முயற்சிகள் துரிதமாகப் பலனளித்தன. இனிய தேநீர் விருந்துடனும், மலர்ந்த முகங்களுடனும் அது ஓஹோ என்று நிறைவேறியது. அதன் விளைவாகப் புதுப் பிரச்சினைகள் வரும் என்று எவரும் ஆருடம் கூறவில்லை.