Friday, 1 August 2025

காலம் என்ற நீட்சியுடன் - சிறுகதை

 

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந்தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத்தலை. வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக்கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொன்னது.

வர்ணஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாக சுற்றிச் சூழ இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக் காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?

"அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?" என்றபடி குணசேகரன் என்னை நோக்கி வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே கனடா வந்திருக்கின்றேன்.

"எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!"