Tuesday, 1 September 2015

அவதானிப்பும் அறிமுகம் செய்தலும்


செங்கை ஆழியான் (க.குணராசா) ஒரு காலத்தில் இளம்படைப்பாளிகளின் படைப்புகளை அவதானித்து, அவர்களை சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வைத்தார்.

வல்லமைஇணையத்தளம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, ஒருவருட காலத்திற்கு தனது இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டிருந்தது. வல்லமையில் வெளியான அனைத்துக் கதைகளையும் வாசித்து தனது கருத்துக்களைச் சொல்லியிருந்தார் மூத்த எழுத்தாளரான வெங்கட் சாமிநாதன். 

மோதிரக்கையால் குட்டுப்பட்டுக் கொண்ட படைப்பாளிகளில் எட்டுபேர் மட்டும் (சுதாகர், பழமைபேசி, மணி ராமலிங்கம், அரவிந் ச்ச்சிதான்ந்தன், மாதவன் இளங்கோ, ஜெயஸ்ரீ சங்கர், பார்வதி இராமச்சந்திரன், தேமொழி) தேறினார்கள்.

செங்கை ஆழியான், ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் சிறுகதை எழுதும் படைப்பாளிகளையே இனம்கண்டு அடையாளப்படுத்தினார்கள். ஈழத்தில் இருந்து வெளியாகும் ‘ஞானம்சஞ்சிகைகூட புதியவர்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றது. ஆனால் சிறுகதை என்பதைவிட இன்னொரு படி மேல் சென்று கட்டுரை, கவிதை படைப்போரையும் அறிமுகம் செய்கின்றது.

ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் – செங்கை ஆழியான் (ஞானம் – ஜனவரி 2003)

1.உடுவில் அரவிந்தன் (அப்புத்துரை அரவிந்தன்) ஆறாம் தலைமுறை எழுத்தாளர் - சிறுகதை

2.வதிரி இ.ராஜேஸ்கண்ணன் –சிறுகதை, கவிதை, நாடகம் – சமூகவியல் பட்டதாரி (யாழ் பல்கலைக்கழகம்)

4.ச.இராகவன் – (சபாரத்தினம் இராகவன்) – யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பட்டதாரி – கவிதை, கதை, திரைப்பட்த்துறை – பரிசோதனைச் சிறுகதைகள் எழுதியவர்.

9. ச.சாரங்கா –குணாளினி சதாசிவமூர்த்தி – சாவகசேரி சங்கத்தானை- சிறுகதை, கவிதை, திரைக்கதை

10. குறிஞ்சி இளம்தென்றல் ச.புஸ்பராஜ் – கவிதை – கண்டி

11.தாட்சாயினி –பிரேமினி சபாரத்தினம் – ஆறாம் தலைமுறை -விஞ்ஞானப்பட்டதாரி

ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் – இரா.நாகலிங்கம் (ஞானம் – ஏப்ரல் 2003)

3.செல்வி கு.வாசுகி (செ.குணரத்தினத்தின் புதல்வி) கதை கவிதை கட்டுரை சித்திரம்

5. அ.ச.பாய்வா – கவிதை, சிறுகதை – மூதூர் பிறப்பிடம் – கிராமசேவகர்

6. தமிழ்ச்செல்வி – கதை, கட்டுரை, கவிதை – ஆரையம்பதி – ஆரையூர் இளவல் இன் புதல்வி

8. மண்டூர் மீனா – சிறுகதை - ஆசிரியர்

ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் – கவிஞர் ஏ.இக்பால் (ஞானம் – ஓகஸ்ட் 2003)

7.எஸ்.நஷீறுதீன் – சிறுகதை, நாவல் – சாய்ந்தமருது – விஞ்ஞானப்பட்டதாரி – ஆசிரியர் – தற்போது இங்கிலாந்தில்

(இந்தப் பட்டியல் தொடர்ந்து செல்கின்றது)

அ.முத்துலிங்கம் 1970 களில் எழுத்த் தொடங்கியவர். 30 வருடங்களிற்கும் மேலாக இலக்கிய அஞ்ஞாதவாசம் இருந்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கி அசுரகதியில் எழுதி வருகின்றார். இவரது கேள்வி பதில் பகுதி ஒன்றில்,

நீங்கள் ஏன் நீண்ட காலம் எழுதவில்லை?என்ற கேள்விக்கு

புலி பதுங்கியிருப்பது பாய்வதற்குஎன்று பதிலளித்திருந்தார். இங்கு என்னவென்றால் கேள்வியும் அபத்தம் அதற்கான பதிலும் அபத்தம். எழுதுவது அவரவர் விருப்பம். புலி பதுங்குவதற்கும் பாய்வதற்கும் இடையேயான கால இடைவெளி அதிகமானால் என்ன ஆகும்? இந்த நவீன யுகத்திலே எவரும் தமது ஆயுளைப்பற்றி வீரம் பேசலாகாது. ‘நன்றே செய்; அதையும் இன்றே செய்என்பதே பொருத்தமானதாகும்.

ஆனால் இவர்கள் அறிமுகம் செய்த எழுத்தாளர்களில் எத்தனைபேர் தேறினார்கள் என்று பார்த்தால் அது மகிழ்ச்சிக்குரியது அல்ல. அறிமுகம் செய்யப்பட்டுவிட்டோம் என்ற புளகாங்கிதத்தில் ஒரு சிலகாலம் உத்வேகமாக எழுதிவிட்டு பின்னர் சோர்ந்துவிடுகின்றார்கள். குடும்பம், வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட  இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும். அந்த நம்பிக்கையினால்தான் இவர்களை அவதானித்து அடையாளம் காட்டுகின்றார்கள்.
No comments:

Post a Comment