Sunday 9 September 2018

தகவல் பகிர்வு : இலங்கைத் தமிழ்க் குறும்படத் திரைக் கதைப் போட்டி 2019




காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்
நான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)

குறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் உலகப் பெருவெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றவாறு வாழும் ஓர் இனக்குழுமம். இந்த ‘இலங்கைத் தமிழர் வாழ்வு’ தொடர்பாக பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியுமான கதைக் களத்தை முன்வைத்து உலகமெங்குமிருந்தும் இந்தக் குறும்படத் திரைக்கதைப் போட்டியில் பங்குபெற அழைக்கிறது காக்கை குழுமம். இதற்கேற்ப 15 நிமிடங்களுக்குட்பட்ட குறும்படத் திரைக் கதைகளை உலகத் தமிழ் எழுத்தாளர்களிடம் கோரப்படுகிறது.

உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது.

1. இலங்கைத் தமிழர் வாழ்க்கை : பூர்வீகம் –இடப்பெயர்வு – புலம்பெயர்வு - வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் கொண்ட கதைக் களம்.

2. போட்டியாளர் உலகமெங்கிருந்தும் பங்கு பற்றலாம்.

3. போட்டியாளர்கள் தமது நிழற்படம் கொண்ட சுயவிபரக் கோவையை தமது பிரதியுடன் தனியாக இணைத்திருத்தல்.

4. பிரதிகள் குறுந்திரைக் கதை வடிவில் (சர்வதேச நியமம்) அமைந்திருத்தல்.

5. ஏற்கனவே வெளிவராத திரைக் கதை என்பதை தமது மடல் மூலம் உறுதி செய்தல்.

6. குறும்படத்தின் திரைக் கதையாடல் அதிகபட்ச நேரம் 15 நிமிடங்கள்.

7. பிரதிகள் படைப்பாளியின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படாது.

8. மின்னஞ்சல் வழியில் ஒருங்குறி (யுனிக்கோட்) எழுத்துருவில் ஆக்கங்கள் எதிர்வரும் 15.01.2019 இற்கு முன் கிடைகப்பெறல்

9. முடிவுகள் 2019 மார்ச்சு மாத இறுதியில் முறைப்படி வெளியிடப்படும்.

10. காக்கைக் குழுமத்தினரால் முன்னெடுக்கப்படும் நடுவர்களது முடிவே இறுதியானது

போட்டித் தொடர்புகளுக்கு

காக்கைச் சிறகினிலே : kipian2019kaakkaicirakinile@gmail.com

இந்தத் தகவலை சமூக ஊடகப் பரப்பில் பகிர்ந்து பரவலாக்கி உதவ நட்புடன் அழைக்கிறோம்!


No comments:

Post a Comment