Friday, 15 May 2015

பகடை - சிறுகதை

கடைசியில் அன்னம்மாக்கிழவியின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற பதில்தான் வந்தது.

ஒரு கிழமைக்கு முன்பு, கிளாலிக்கடலேரியில் - படகு கவிழ்ந்ததில் அன்னம்மா ஆச்சி உட்பட ஐந்துபேர் மரணமானார்கள்.

இருளிற்குள் தலையைச் சுவர்மீது முட்டி மோதி, கால்களை  பரப்பிச் சுய நினைவற்றுக் கிடந்தாள் பவானி.

உலகம் அழிந்தொழிந்து போனபின் ஏற்பட்டிருக்கும் மயான அமைதியக் குலைத்துக் கொண்டு - புதிதாகப் பிறந்துவிட்ட ஏவாளெனக் குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகுரல் காட்டிற்குள் வழிதவறிப் போய்விட்ட ஒரு குழந்தையின் அழுகுரலென பவானியின் காதில் விழுந்தது. கால்கள் தானாகவே எழுந்து, இருளிற்குள் நடந்து, அச்சொட்டாகக் குழந்தை இருக்குமிடம் நோக்கியது. இங்கு இருளிற்குள் நடப்பதற்கு மனிதர்கள் எல்லாம் எப்போதோ பழகிக் கொண்டுவிட்டார்கள். குழந்தை தெப்பமாக நனைந்ததில் உடம்பு விறைத்துப் போயிருந்தது. முதன் முதலாக அன்னம்மா ஆச்சி இல்லாத வெறுமையை உணர்ந்தாள் பவானி.

Wednesday, 13 May 2015

Transition - short story



            
                                                                                     In Tamil: K.S.Suthahar
                                                                                     In English: Kandiah Kumarasamy
                                                                                                           (Nallaikumaran)

                                           It is Melbourne.
                                           Trees on the roadsides have lost their live-green hue and looked withered in that cold evening. Shankar came back from work. He hurriedly went to the dining table, as he was very hungry. Bharathy served takeaway hot food, fried rice, brought from the Chinese restaurant. After eating two mouthfuls, he regained his lost vigour and started his useless dialogue with the usual arrogance.
“I will tell you one thing. Do not come to fight with me.”
“Why do you want to start a topic while eating?”- Bharathy asked him even though she is anxious to know what he intended to say.

உள்ளங்கையில் உலகம்



நிமிர்ந்து நில் - வானம்
உனக்குத்தான்.
சுழலுகின்ற உலகம் - உன் கைகளில்

Monday, 11 May 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 29 - கரடி குதறிய போராளி

சூரியன் உச்சிக்கு வந்து விட்டது. இப்பொழுதுதான் கண் விழித்தேன்.

குட்டிப் போட்டிக்கோவில் நின்றுவீதியைப் பார்த்தேன். புதிதாக நட்ட கொன்கிறீட் மின்சார கம்பம். அதில் ஏறியிருந்த ஒருவன் என்னைத் திரும்பிப் பார்த்துத் தலை ஆட்டினான். எனது வீட்டுக்கு மின்சாரஇணைப்பு வழங்க வயர்கள் பொருத்திக் கொண்டிருந்தான்.

மாலைஐந்து மணி.
சுசீலா அக்கா, மணி அண்ணை வந்தார்கள். ஏதோ முக்கிய அலுவல் பேச வந்திருப்பதாய்ப் பட்டது.

களுபண்டா, தாய், சகோதரியுடன் சுற்றுலாச் சென்றமை மனதில் கசப்பை ஏற்படுத்தியிருந்தது. காட்டிக் கொள்ளாமல், மௌனமாய்ச் சோபாவில் அமர்ந்தார்கள். உள்மனதின் குறுகுறுப்புப் புரிந்தது. புரியாதது போல அன்பாய்ப் பேசினேன்.