பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்த காலத்தில் (1977) கலாசாரமும்
பண்பாடும் என்றொரு பாடம் இருந்தது. அதனை கதிர்.பாலசுந்தரம், த.சண்முகசுந்தரம்
என்போர் நெறிப்படுத்தினார்கள். பாடத்திட்டத்தின்படி நாங்கள் குழுக்களாகப்
பிரிக்கப்பட்டோம். ஒவ்வோரு குழுக்களும் எழுத்தாளர்/கலைஞரைச் சந்திக்க வேண்டும்.
குரும்பசிட்டி ஊர், எழுத்தாளர்கள் கலைஞர்களுக்குப் பேர்
போனது. எனது தந்தையாரின் ஊரும் அதுதான். நான்
எனது குழுவினருடன் அங்கு சென்று இரசிகமணி கனக.செந்திநாதனைச் சந்திக்க
முடிவு செய்தோம். எனது குழுவில் முரளிதரன், குகநேசன் இன்னும் சிலர் இருந்தார்கள்.



