Friday, 26 September 2014

குழந்தைக்குப் புரிந்தது!


அன்று விஜயதசமி. வித்தியாரம்பம். ஏடு தொடக்கும் நாள். கவினுக்கு ஏடு தொடக்குவதற்கு பெற்றார் பாலனும் வனஜாவும் விரும்பினார்கள். கவினும் அவனது அக்கா ஆரபியும் அதிகாலை எழுந்து, அம்மம்மாவின் துணையுடன் குளித்தார்கள். தேவாரம் பாடினார்கள். அவர்கள் இருவரும் அம்மம்மாவின் சொல் கேட்பார்கள். குறும்புகள் செய்யும்போது அம்மம்மா 'ஏய்!' என்று சத்தமிட்டவாறே தடியைத் தூக்கிக் கொண்டு கலைப்பாள். 

கவினுக்கு அந்த 'ஏய்!' மீது 'ஒரு' கோபம்.

Friday, 19 September 2014

காட்டுக்குள்ளே திருவிழா - Flashbacks

வாழ்க்கை பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்டது.

1988 /89 காலப்பகுதி - அப்பொழுது ‘லங்கா சீமென்ற்தொழிற்சாலையில் வேலைசெய்து கொண்டிருந்தேன். மதிய வேளைகளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம். சைக்கிள்தான் எனது வாகனம். அப்பொழுது ‘பிள்ளைபிடிகாரர்நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்த காலம். வீதிகள் எங்குமே எப்பொழுதுமே வெறிச்சோடிக் கிடந்தன.

சிலவேளைகளில் நண்பர் ஜனாவுடன் கூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கம். அவர் எனக்கு சீனியராக வேலை செய்துகொண்டிருந்தார். தோற்றத்திலும் சீனியர். அன்று அவரின் தெல்லிப்பழை வீட்டிற்குச் சென்று, எனது சைக்கிளை அங்கு வைத்துவிட்டு அவருடன் செல்வதாக ஏற்பாடு.

மோட்டார் சைக்கிள் கே.கே.எஸ் வீதியால் விரைந்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு சற்று முன்பாக வீதியோரத்தில் ஒரு வாகனம் நிறுத்தியிருந்ததைக் கண்டோம். மூடி அடைக்கப்பட்ட வாகனம். மோட்டார் சைக்கிள் அதனை அண்மித்தவுடன், எதுவித அசுமாத்தமும் இல்லாமல் இருந்த அந்த வாகனத்தில் இருந்து இருவர் குதித்தார்கள்.

Tuesday, 16 September 2014

கங்காருப் பாய்ச்சல் (-4)

இடைவெளி

எனது அண்ணன் இலங்கையில் இறந்து போன சமயம் இது நடந்தது. சிலர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துச் சென்றார்கள். சிலர் டெலிபோனில் கதைத்தார்கள். எனக்குத் தெரிந்த குடும்பம். ஊரவர். வரவில்லை. விசாரிக்கவும் இல்லை.

அவர்கள் பெரியதொரு வீடு கட்டி இருந்தார்கள். நாட்டில் நடந்த பிரச்சினைகளால் வீடு குடிபுகும் விழாவை பின்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். எப்பவடா பிரச்சனை தீரும் - விருந்து வைச்சுக் கொண்டாடலாம் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். நாட்டில் அவலங்கள் முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். எமக்கு ரெலிபோன் வந்தது.
இடைவெளி

Thursday, 11 September 2014

என்றும் பதினாறு!




நேரம் இரவு பத்து மணியைத் தாண்டி விட்டது. மழை தூறிக் கொண்டிருந்தது.

கார் அந்த பஸ் ஸ்ராண்டைத் தாண்டிய போது - யாரோ ஒரு பெண் வெளியே வந்து கை காட்டியது போல இருந்தது. 'ஸ்றீற் லாம்'பின் வெளிச்சத்தில் அவள் ஒரு பள்ளி மாணவி போலத் தெரிந்தாள்.

"ஏய் மோகன், பள்ளிக்கூடப் பிள்ளை போல கிடக்கு. பஸ் இனி இந்தப் பக்கம் வருமோ தெரியாது. என்னெண்டு கேட்டுக் கூட்டிக் கொண்டு போய் விடுவோமா?" காரின் வேகத்தைக் குறைத்தபடியே நண்பனைக் கேட்டேன். மோகன் சற்றுத் தயங்கிய படியே தலையை ஆட்டினான்.

காப்பு – குறுங்கதை




 மூன்று கிழமைகள் விடுமுறையைக் கழிப்பதற்காக, ஜனவரி மாதம் மலேசியா சென்றோம். விமானத்திலுருந்து இறங்கியதும் கோலாலம்பூரில் தங்கவேண்டிய ஹோட்டலிற்குச் சென்றோம். அங்கு குளித்துவிட்டு, முதலில் பத்துமலைக் கோவிலுக்குப் புறப்பட்டோம்.

மலேசியாவிலும் பிக்பொக்கற்காரர்கள் முடிச்சுமாறிகள் இருக்கின்றார்கள் என்றும் கவனமாக இருக்கும்படியும் ஏற்கனவே நண்பர்கள் சொல்லியிருந்ததால், எங்கு சென்றாலும் ஆடம்பரங்களைத் தவிர்த்து சிம்பிளாக உடையணிந்து நகைகள் அணியாமல் செல்வது என்று தீர்மானித்திருந்தோம்.

பத்துமலைக் கோவில் கோலாலம்பூரிலிருந்து 13கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. கோவில் அமைந்திருக்கும் இந்தச் சுண்ணாம்புக்குகை 40கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

Sunday, 7 September 2014

வெற்றிமணி

இலங்கையில் வெளிவந்த முதலாவது சிறுவர் மாத இதழ் "வெற்றிமணி"

அன்று
வெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய்
நற்றமிழாம் எங்கள் மொழி  நலமுற ஒலித்திடுவாய் - என்ற வாழ்த்து ஒலியுடன் வெளிவந்த, இலங்கையின் முதலாவது சிறுவர் மாத இதழான "வெற்றிமணி"க்கு இன்று 64 வருடங்கள். 

1950 இல் நாவலப்பிட்டியில் ஆசிரியராகப் பணிபுரிந்த அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களால் இந்த வெற்றிமணி ஆரம்பிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டளவில் அமரர் முத்தையா அவர்களால் 'ஆத்மஜோதி' என்ற ஆன்மீக சஞ்சிகை நாவலப்பிட்டியில் இருந்து வந்தது. அமரர் முத்தையா ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதற்கு அயலூரான குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமரர் மு.க.சுப்பிரமணியம். இவர்களது நட்பினாலும், சிறுவர்களுக்கென ஒரு சஞ்சிகை வரவேண்டும் என்ற ஒரு உந்துசக்தியினாலும் வெற்றிமணி வெளியானது.

Thursday, 4 September 2014

மனித உரிமைவாதி கதிர்.பாலசுந்தரம்



ஈழத்தில் அச்சு எழுத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப்பத்திரிகை ‘உதயதாரகை’. 1841 இல் இருந்து 130 ஆண்டுகளாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்திலிருந்து தொடர்ந்து வெளிவந்த இது தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த ஒரு இருமொழிப்பத்திரிகை. யூனியன்கல்லூரி, 1816 ஆம் ஆண்டளவில் வட அமெரிக்காவிலிருந்து மதம் பரப்ப வந்த திருச்சபையினர் வடபகுதியில் ஆரம்பித்த முதல் ஆங்கிலப்பாடசாலை ஆகும்.
 

இந்தப்பாடசாலையின் அமெரிக்க வெள்ளை முதல்வர்களை அடுத்து வந்த முதல் சுதேச அதிபர் ஐ.பி.துரைரத்தினம். நான்காவது அதிபர் கதிர்.பாலசுந்தரம்.

Tuesday, 2 September 2014

Party - short story

       
                                              Written by - K.S. Suthakar
                                             Translation by – Shiyamala Navratnam (Canada)
           
“Oh, Shaanthan! When did you come to Australia?”
            “Who is it, Kumaran? It is now one and a half years since we came here. How is everything with you? It must be about ten to thirteen years since you left the country, isn’t it?”
            “It is ok Shaanthan. Now we are in Dilake and you?”
            “We are at Altona.”
            “Then it is close by. What, you seemed to have stopped with one child.”
            “Yes. One is enough. I was told that everything was cheap in this ‘Laverton market’. However when you come here you realize that it is only a bunch of old hardware at very awful prices. Boiled corn is priced at one for five dollars.”
            “You have to come to our place for dinner next Saturday.”
            “Kumaran, what is the hurry now for dinner? Hello Bawaani, how about next Saturday?”
            “There is no program.”
            “Then we can come Kumaran. But one thing. Do not cook too much, please.”
            “Here is my business card. My phone number and address is there.”
                                  *                                  *                                  *                      *
            “Who was that dear? He was addressing you Shaanthan, very frequently? All those who work with you call you ‘sir’.”
            “All that was once upon a time Bawaani. Now a days even children call their teachers by their name. This was Kumaran, who comes from Naachchimar temple area to the cement factory for work. A ‘clerical’ job.”
            “Must we have meals at anybody and everybody’s place?”
            “What to do? If we need a couple of friends, we have to go.”
                                  *                                  *                                  *                      *