வெளியே குளிருடன்
கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில்
நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல்
வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது.
"இந்தப் பிள்ளை
சொல்வழி கேளாது. எல்லா 'லைற்'றையும் எரியவிட்டு வீட்டைத் திருவிழாவாக்கி
வைச்சிருக்கு. ரிஷி எங்கே நிக்கிறாய்?"
ஹோலிற்குள்
ரெலிவிஷனில் மூழ்கி இருந்த பாஸ்கரன், மாலினியின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். பாஸ்கரனிற்குப்
பின்புறமாகப் பதுங்கி இருந்தான் ரிஷி.
"ரிஷி இஞ்சை வா.
உனக்கு ஆபிரகாம் லிங்கனைத் தெரியுமா?"