அறிமுகம்
தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து
கொண்டிருந்தாள் அவள்.
ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே
வந்தார். அவர் நெடு நேரமாகப் அவளைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தார்.
அவரது முறை வந்தது.
தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக்
கொண்டிருக்கும் போது அவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து
தலைதெறிக்க ஒட்டம் பிடித்தார்.
வீட்டிற்குள்ளிருந்து கணவனும் பிள்ளைகளும் பதகளிப்பட்டு
ஓடி வந்தார்கள். அவர்களும் அழகு நிலையத்தில் இருந்தவர்களுமாகப் அவளைத் தூக்கி
அருகே இருந்த செற்றிக்குள் படுக்க வைத்தார்கள். முகத்திற்கு தண்ணீர்
தெளித்தார்கள்.
மயக்கம் தெளிந்ததும், பரபரப்பாக சுற்றுமுற்றும்
பார்த்தாள் அவள்.
...தொடரும்...
No comments:
Post a Comment