Sunday 4 December 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்
15. சேவகனும் நானே. எஜமானும் நானே.
  
     யூனியன் கல்லூரியது எழுச்சியின் சூத்திரம் - வருடாவருடம் தயாரித்து நடைமுறைப் படுத்திய வருட முகாமைத்துவ-நிருவாகச் செயற்திட்டத்திலேயே (யுnரெயட ஆயயெபநஅநவெ Pசழதநஉவ) –தங்கியிருந்தது. அதனை ஒரு முறை வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு.சிவநாதன் அவர்கள் எனது கதிரையில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். அவர் திடீரென,

     “என்ன தலையலங்காரம் பற்றிக்கூட (ர்யசைனழ)  எழுதியிருக்கிறது?” என்றார்.

          பின்னர் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி புவனேஸ்வரி சச்சிதானந்தன் அவர்கள் அந்த செயற்திட்டத்தைப் பார்க்க வந்திருந்தார். திரு.சிவநாதன் அவர்கள் அது பற்றி வியந்து கூறிப் பார்வையிடச் சொன்னதாகத் தெரிவித்தார்.

      வருடாந்த முகாமைத்துவச் செயற்திட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள், வருட ஆரம்பத்தின் முதல் நாள், பிரதான மண்டபத்தில் (யுளளநஅடிடல ர்யடட) வைத்து மாணவர்களுக்கு விளக்கப்படும். அந்த மண்டபம் தேவாலயத்துக்கு மேற்கே - நினைவாலயத்தின் மேற்கு எல்லையை அடுத்து - வளாக வீதிக்குத் தெற்கே அமைந்திருந்தது. சுமார் 1000 மாணவர்களைக் கொள்ளக்கூடியது. ஏறக்குறைய மூன்று பாடவேளை தேவைப்பட்டது. அந்த உபநியாசம் மாணவர்களை விழித்தே நடத்தப்பட்டது. எனினும் எதிர்மறையாக ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் செய்வதாகவே அமையப்பெற்றது. வருடம் முழுவதும் மாணவர்கள்-ஆசிரியர்களிடம் அதிபர் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் பற்றியதாகவே அந்த முதலாவது விளக்க உரை அமைந்திருந்தது. அது அவரவர் அவரவர் கடமையைச் சரியாகச் செய்ய உதவியது-உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகத்தை இடையூறின்றி இயல்பாக இயங்க வைப்பதே அதன் உள்ளார்ந்த நோக்கம்.

 கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள். அவற்றில் சில பகுதிகள் தன்கூற்றாகத் தரப்படுகின்றன.


          நேரசூசி – - வகுப்பு ஆரம்பித்தல்

     “ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள். 200 மாணவர்கள் ஆறாம் ஆண்டில் புதிதாகச் சேர்ந்துள்ளார்கள். யூனியன் கல்லூரியில் இணைந்துள்ள புதிய மாணவர்கள் வருகை கண்டு, நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். அவர்களை வருக, வருக என்று நாமெல்லாம் வாழ்த்தி வரவேற்கின்றோம்.”

“நான் பேசப் போவது பழைய மாணவர்களுக்குப் பழைய விடயம். அவர்களுக்கு அதனை நினைவு படுத்தவும், புதிய மாணவர்கள் அதனைத் தெரிந்து, யூனியன் மாதாவின் பாரம்பரியத்தைப் பேணி நடந்துகொள்ளவும் - இங்கு நான் முன்வைக்கப்போகும் செய்திகள் பேருதவியாக இருக்கும்.”   

        “முதலாவது - நேரசூசி பற்றியது.”

 “ஆசிரியர்களுக்குரிய நேரசூசிகள் ஏலவே வழங்கப்பட்டு விட்டன. வகுப்பு முதல்வர்கள் கூட்டம் முடிந்ததும், வகுப்பு நேரசூசிகளை அலுவலக உத்தியோகத்தர் திரு.குணரத்தினத்திடம் பெற்றுக் கொள்ளவும். இந்த கூட்டம் முடிந்ததும், தேநீர் இடை வேளை வரை ஓய்வு தரப்படும். அதன் பின்னர் மணியடிக்கப்படும். உடனடியாக நாலாவது பாட வகுப்புக்கள் ஆரம்பிக்கும். அதன் பின்னர் எந்தக் காரணம் கொண்டும், எவர் தலையும் வகுப்புகளுக்கு வெளியே தெரியக் கூடாது.  தவணைப் பரீட்சை ஆரம்பிக்கும் வரை ஒரு பாடந்தன்னும் விரயமாக்கப்படக் கூடாது.”

w
              
     சில பாடசாலைகளில் முதல் நாள் - வகுப்பு ஒழுங்கு என்று கழிந்துவிடும். வேறுசில பாடசாலைகளில் நேரசூசி தயாரிப்பு என்று ஒரு கிழமைவரை செல்வதும் உண்டு. ஆனால் யூனியன் கல்லூரியில் முதல் தினமே நாலாவது பாடவேளை பாடம் ஆரம்பிக்கும். அதன் பின்னர் எந்தப் பாடமும் வீணடிக்கப்பட மாட்டாது. வருட முதல் நாள் காலையில் ஆசிரியர்கள் வந்து கொண்டிருக்க - அலுவலக உத்தியோகத்தர் திரு.செ.குணரத்தினம் நேரசூசியை வழங்கிக்கொண்டு இருப்பார். பாடசாலை ஆரம்பிப்பதற்கான சகல வேலைகளும், அதன் முந்திய வாரம் செய்து முடிக்கப்பட்டிருக்கும். திருவாளர் இ.விசுவநாதன் நேரசூசியை முடித்திருப்பார். திரு.கதிரன் வகுப்புகளை ஒழுங்கு செய்திருப்பார். திரு.பாக்கியநாதன் வளாகத்தைச் சுத்தம் செய்திருப்பார். பகுதிப் பொறுப்பாளர்கள் வகுப்பு மாணவர்கள் பெயரை இடாப்பில் எழுதி முடித்திருப்பார்கள். எனவே வகுப்புகள் முதல் நாளே களை கட்டிவிடும்.

     எனக்கு விட்டுப் பிடிப்பதில் நம்பிக்கை இல்லை. நாளைக்குப் பாடம் தொடங்கலாம் என்றால் - நாளை யின்றைக்கும் என்று சொல்லவும் மனம் தயங்காது. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களின் நேரத்தை விரையமாக்கும் உரிமை எனக்கில்லை. எனது கடமையைத் துஷ்பிரயோகம் n;சய்யும் உரிமை எனக்கு இல்லை. நான் மாணவ சமுதாயத்தின் சேவகன். ஆனால் கல்லூரியின் எஜமான். மாணவருக்கு எது உகந்ததோ தேவையோ பொருத்தமானதோ அதையே செய்தேன். அதற்காகவே எனது சிந்தனையை உழைப்பை நேரத்தை அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். எனவேதான் முதற் தினமே பாடங்கள் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற இறுக்கமான நடை முறை மேற் கொள்ளப்பட்டது.

 w
                 
     “மணியடித்து 3 நிமிடங்களுள் வகுப்புகளில் பாடங்கள் ஆரம்பிக்கும். அதன் பின்னர் வகுப்புகளுக்கு வெளியே யாரும் நடமாடக் கூடாது. பாட ஆசிரியர் வராவிட்டால் வகுப்பு முதல்வர் போய் அவருக்கு நினைவூட்ட வேண்டும். அல்லாத பட்சத்தில் உடனடியாக எனக்கு அறிவிக்க வேண்டும். அதே போலப் பாடம் முடிந்து மணி அடிக்கும் வரை மாணவரோ ஆசிரியரோ வகுப்பைவிட்டு வெளியேறக்கூடாது.”

     அது மீறப்பட்டால்?

      வகுப்பை விட்டு வெளியேறிய ஆசிரியர் கதை.
      
     கணித பாடத்துக்கு ஒரு புது ஆசிரியர் வந்திருந்தார். பெரிய வயதென்றில்லை. சுமார் 33 இருக்கும். கொஞ்சம் கீச்சல் குரலில் கதைப்பார். சிறந்த கணித ஆசிரியர். அவருக்கு முதல் நாள். அவர் வகுப்புப் பாடம் முடிந்து மணியடிக்க முன்பே, –மேன்மாடியில் உள்ள வகுப்பை விட்டு வெளியேறி, வாளாக வீதியிலே நடந்து கொண்டிருந்தார். வளாகத்தில் எங்குமே வேறு தலைக்கறுப்புத் தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்த நான் தலையை நிமிர்த்திய பொழுது, அவர் எதிரே உள்ள வீதியில் தேவாலயத்தைக் கடந்து ஓய்யார நடையில் வந்து கொண்டிருந்தார். என்னிடம் வருவதாக ஒரு மின்னல் சந்தேகம். வந்தவர் எனது அலுவலக வலப் பக்கத்தால் ஓய்வறைக்கு ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தார்.

“இதென்ன சந்தையா?”

சத்தம் போட்டேன். அலுவலக ஊழியரைப் போய், அந்த ஆசிரியரை அழைத்து வரும்படி உரத்துக் கூறினேன். அவரது காதிலும் அந்தச் சத்தம் கணீரென விழுந்தது. அவருக்குத் தான் வகுப்பறையைவிட்டு, மணியடிக்க முன்பே வெளியேறியது பெரிய விடயமாகத் தெரிவில்லை. சத்தம் போட்டதுதான் அருக்குப் பெரிதாக, புதுமையாகத் தெரிந்தது.

     அவர் அறைக்குள் வந்து நின்று சொன்னார்.
     “நீங்கள் அப்படிச் சத்தம் போட்டிருக்கத் தேவையில்லை. ‘பீயோனை’ விட்டு அழைத்திருந்தால். நான் வந்திருப்பேன்.”
     “உங்களைப் போலச் சகல ஆசிரியர்களும் நேரகாலத்தோடு வெளியேறினால், எத்தனை பீயோன் எனக்குத் தேவை?”
     அவர் ஒன்றும் பேசவில்லை.
     “உங்கள் பழைய பாடசாலையில் அப்படியோ? அதை இங்கே வைத்துக்கொள்ள வேண்டாம்.”

அதன் மேலும் அவரைக் கண்டித்து ஏதும் சொல்லவில்லை. அனுப்பிவிட்டேன். அன்றைக்கு அவரைப் பாராமுகமாக – ‘புது ஆள். பாவம்’ என்று விட்டிருந்தால், அடுத்த நாள் இன்னொருவர் அப்படியே செய்வார். நான் ‘பீயோனை’ அனுப்பவேண்டும். எனக்கும் ‘பீயோனுக்கும்’ அதுவே வேலையாகி, அது தொடர் சங்கதியாகிவிடும். “மணி அடித்த பின்னரே வெளியேறவேண்டும் என்ற கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் தளர்த்தமாட்டேன்” என்ற செய்தியை ஆசிரியர்கள் யாவருக்கும் ஞாபகப்படுத்தவே அப்படி ஒரு சின்னக் காட்சி. இடையிடையே அது தேவை. முளையிலேயே கிள்ளி எறிவதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருந்தது.

w

             வகுப்பிற்குப் பிந்திய ஆசிரியையின் கதை.

              ஒரு நாள் காலை. முதற் பாட வேளை. ஓர் ஆசிரியை மூன்று நிமிடமாகியும் வகுப்பிற்குச் செல்லவில்லை. நாலாவது நிமிடம் வகுப்பு மாணவமுதல்வி வந்து முறையிட்டார். குறித்த ஆசிரியை பெண்கள் ஓய்வறையில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அலுவலகத்தின் உயர்ந்த குந்தால் இறங்கி நாலு கவடு வைத்தால் ஓய்வறை. அலுவலகத்தை விட்டு விறாந்தைக்கு வந்ததும், வேறு ஒரு ஆசிரியை தென்பட்டார். அவரின் பெயர் மகர எழுத்தில் ஆரம்பிக்கிறது. சைவப் பழம். அவருக்கு ஓய்வு நேரம். விசயம் விளங்கிவிட்டது. அவர் பேசினார்.

“பெண்கள் ஓய்வறையில் இருக்கிறார்” என்று கூறியவர் மிக அருகே வந்து காதோடு காதாகக் காரணத்தைச் சொன்னார். அவர் என்னைப் புரிந்த ஒரு சிலரில் ஒருவர். அந்த ஆசிரியைக்குத் தேக ஆரோக்கியக் குறையல்ல.

         “வகுப்பிற்குப் போகவேண்டாம் என்று சொல்லுங்கள். விரும்பினால் வீட்டுக்குப் போகச் சொல்லுங்கள். லீவு போடத்தேவையில்லை. கார் தேவையென்றால் அனுப்புகிறேன்.” என்று கூறிவிட்டு, அலுவலக உத்தியோகத்தரை அழைத்துக் குறித்த ஆசிரியையின் வகுப்பு மாணவிகளைப் பிரதான மண்டபத்துக்கு அனுப்புவித்தேன்.

நாமெல்லாம் மனிதர்கள். இரும்பாலான சட்டங்கள் அல்ல. மணியடித்து 3 நிமிடங்களுள் வகுப்பிற்குச் சென்றுவிடவேண்டும் என்ற கண்டிப்பான வழமையைத் தளர்த்தவும் தூக்கி வீசவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அந்தவகையான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் பெரிதும் மனித நேயத்தோடு நடத்தப்படவேண்டும், நடத்தப்பட்டார்கள். 


 w
                                 
     பாட ஆசிரியர் வராவிட்டால்? அது பற்றிய உரை

     “பாட ஆசிரியர் விடுதலையில் நின்றால், மாணவ முதல்வர், வகுப்பு மாணவர்களை வரிசையாக நடத்திச் செல்ல வேண்டும். க.பொ.த. சாதாரண தரம் வரையான மாணவர்கள், பிரதான மண்டபத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு அமைதியாக இருக்க வேண்டும். அமைதிக்குப் பொறுப்பாக வகுப்பு மாணவ முதல்வர் இருப்பார். அவர் தனது வகுப்பு மாணவரின் எதிரில் நிற்பார். அவருக்குத் துணையாக உதவி வகுப்பு முதல்வர் இருப்பார். வகுப்பு மாணவ முதல்வருக்கு அடங்காத மாணவர்களைப் பற்றிப் பிரதி அதிபருக்கு முறையிட வேண்டும். அவர் இல்லாத பட்சத்தில் எனக்கு முறையிடவும்.”

     “பாட ஆசிரியர் கல்லூரிக்குச் சமூகமளிக்கா விட்டால், உயர்தர மாணவர்கள் நூல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். நூல் நிலையத்தில் இடமில்லாவிட்டால் பிரதான மண்டபத்துக்குச் செல்ல வேண்டும். எப்பொழுதும் வகுப்பு நேரத்தில் வகுப்புகளுக்கு வெளியே வரிசையில் செல்ல வேண்டும்.”

“எந்தக் காரணம் கொண்டும் தேநீர் இடை வேளை தவிர்ந்த நேரத்தில், யாரும் ‘கன்ரீனுக்குச்’ செல்லக் கூடாது.”

         நூல்நிலைய ஒழுங்கு

        “நூல்நிலையத்துக்குப் பொறுப்பாகத் திருமதி பத்மநாதன் உள்ளார். அவருக்குத் துணையாக செல்வி விஜயலக்சுமி சுப்பிரமணியம் இருக்கிறார். நூல் நிலையத்தில் அமைதியாக இருக்க வேண்டும். கதிரையைவிட்டு எழுந்து திரியக் கூடாது. ஒருவரோடு ஒருவர் கதைக்கக்கூடாது. அமைதி பேணப்படவேண்டும். புத்தகங்களில் கீறக்கூடாது. பக்கங்களைக் கிழிக்கக்கூடாது. வாசித்து முடிந்ததும் புத்தகங்களை அதே மேசையில் வைத்துச் செல்லவும். புத்தகம் இரவல் பெறும் ஒழுங்குகள் உள்ளன. நூல் நிலையம் செல்பவர்கள் பொறுப்பாளர்களின் கட்டளைகளுக்கு அமைவாக நடக்க வேண்டும். அவர் அடங்காதவர்களைப் பற்றிப் பிரதி அதிபருக்கு முறையிடுவார்.”

           நேரஞ் சென்று வருபவர்கள்
    
     “கல்லூரிக்கு நேரஞ் சென்று வருவதைத் தவிர்க்கவேண்டும். தொடர்ந்து பிந்தி வருபவர்கள் துப்பரவு செய்யும் பணி செய்ய நேரிடும். நேரஞ்சென்று வரும் ஆண்கள் அலுவலகத்தின் முன்னே, வீதியின் வட புறத்தில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்க வேண்டும். பெண்கள் வீதிக்குத் தெற்குப் பக்கம், வந்த ஒழுங்கில் நிற்க வேண்டும். பிரதி அதிபர் இதற்குப் பொறுப்பாக இருப்பார்.”

     “பாடசாலைக்கு வராதவர்கள் பெற்றோரின் கடிதம் கொண்டு வரவேண்டும். வகுப்பாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கிழமைக்குத் தொடர்ந்து வராதவர்கள், ஏலவே அனுமதி பெறாத பட்சத்தில் பெற்றார் அல்லது மூத்த உறவினருடன் வரவேண்டும்.”          

     தொடர்ந்து பின்வரும் விடயங்கள் பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்படும்:

மாணவ முதல்வர்கள் பட்டியல்
வாசிக்கப்படும்.            அர்கள் கடமைகள் சொல்லப்படும்.
மாத,தவணை,பொதுத் தேர்வுகள்  காலம் மற்றும் விபரங்கள்
பொறுப்பாசிரியர்கள் பெயர்கள்   அவர்கள் கடமைகள் 

சீருடை                       தலையலங்காரம்   
நீர்ப் பாவனை            மலசலகூடப் பாவனை                   
விiயாட்டுப் போட்டி       பரிசளிப்பு விழா
இராப்போசன விருந்து          திருவிழா
நவராத்திரி விழா              கறோல் சேவிஸ்
பைசிக்கில் ‘பாக்கிங்’       வளாக வீதியில் உருட்டுதல்
‘கன்ரீன்’ பாவனை         வசதிக்கட்டணம்

     சொற்பொழிவு இரண்டு பாட வேளையிலும் சிறிது கூடிய நேரம் எடுக்கும். அது முடிந்ததும் மாணவர்கள் நிரையாக வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர். அவர்கள் ஓய்வெடுப்பர். நாலாவது பாட நேரம் வந்ததும் மணி அடிக்கப்படும். உடனடியாக வகுப்புக்கள் ஆரம்பமாகும்.

          
              கடமை பங்கிடல்

வருடாந்த முகாமைத்துவ செயற்திட்டம் புத்தக வடிவில் அலுவலகத்தில் சகலரது பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் நிர்வாக-முகாமைத்துவம் முழுவதும், சகல ஆசிரியர்களுக்கும் பங்கிட்டு அழிக்கப்பட்டன. என்னிடம் அலுவலகத்தில் கையெழுத்திடும் வேலை, பாடசாலை அனுமதி, பெற்றாரைச் சந்தித்தல், கல்வித் திணைக்களத் தொடர்புகள், பொறுப்பாளர்களை மேற்பார்வையிடுதல் ஆகிய கடமைகளை மட்டும் வைத்துக் கொண்டேன். மூன்று நாலு தடவைகள் சுற்று வருவேன்.

     பிரதி அதிபர், பகுதிப் பொறுப்பாளர்கள், பெண்கள் ஒழுக்கப் பொறுப்பாளர், நீர் விநியோகம், சுத்தம், விளையாட்டு, சமய முயற்சிகள் - இவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்கு - செயற் திட்டத்தில் அவரவருக்கு உரிய செயற்திட்டப் பக்கங்களின் தட்டச்சுப் பிரதிகள் வழங்கப்பட்டன.

     வருட முதல் நாளின் மங்களப் பொலிவு வளாகத்தில் இசைபாடும். மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளோடு மாணவர்கள் குதூகலமாகக் காணப்படுவர். புதிய சூழலில் புதிய மாணவர்கள் கல்லூரியின் பாரம்பரியங்களில் திக்குமுக்காடுவர். மணியோசை கேட்டு ஆசிரியர்கள் புதிய உற்சாகம் பொங்க வகுப்புகளை நாடிச் செல்வர். இனிமையான புதுவருட வாழ்த்துக்கள் பரிமாறப்படும். ஆரவாரம் அற்றுப்போக வளாகத்தை நிசப்தம் ஆட்கொள்ளும். தனது புதுவருடக் கடமையை யூனியன் மாதா ஆரம்பித்துவிடாள் என்பதே அந்தக் குறியீட்டின் செய்தி.



      “ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும் இல்லார்க்கு
   ஆயிரம் திருநாமம் பாடிநாம் தௌ;ளேணங் கொட்டோமோ.”
                                      மாணிக்கவாசகர்   

இன்னும் வரும்... 

No comments:

Post a Comment