Tuesday, 28 March 2017

கார்காலம் - நாவல்அதிகாரம் 07 -  புரியாத புதிர்

ஆலினைப் பற்றிய தகவல்கள் எல்லாம் தொழிற்சாலை முழுவதும் வெளியான பின்னர், மிக்கெய்ல் என்னும் சுவீடன் நாட்டவன் ஒருவன் அவளுடன் மிக நெருக்கமாகப் பழகத்தொடங்கினான். அவனது மனைவி ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி என்பதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை இந்திய நாட்டுக்காரர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களை திருமணம் புரிந்துள்ளார்கள். அதுவும் கூடுதலாக ஆண்கள்தான் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் வியட்நாமியர்களையோ சீனர்களையோ கலப்புத்திருமணம் செய்வது ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே இருக்கிறது.

மிக்கெய்லும் ஆலினும் கதைக்கும் போதும், ஒன்று சேர்ந்து நடக்கும்போதும் வேடிக்கையாக இருக்கும். மிக்கெய்ல் ஆலினைவிட  இரண்டரை மடங்கு உயரமும் பருமனும் கொண்டவன். பொதுவாக அவன் அவளுடன் கதைப்பதெல்லாம் கிறிஸ்தவ மதம் பற்றித்தான். அவளுக்கு அதில் நாட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருதடவை 'ரென் கொமன்மென்ற்ஸ்' என்று எழுதிய பேனை ஒன்றை மிக்கெய்ல் அவளிற்கு பரிசாகக் கொடுத்தான். அவளுக்கு மிக்கெய்லினது செய்கைகளும் மதம் பற்றிய போதனைகளும் சலிப்பைக் கொடுத்தன. இருந்தும் காட்டிக் கொள்ளாதவளாக நடந்து கொண்டாள்.

ஆலினைப் பற்றி பல விசயங்கள் வேலைத் தலத்தில் கசியத் தொடங்கின. நந்தனால் அவற்றை சீரணிக்க முடியவில்லை. அவளின் இந்த நடத்தைகள், அவள்மீது இருந்து வந்த மதிப்பைக் குலையச் செய்தன.

தொழிற்சாலையில் இரவு பத்து மணியளவில் சாப்பாட்டு இடைவேளை விடுவார்கள். முப்பது நிமிடங்கள் கொண்ட அந்த நேரங்களில் கார் நிறுத்துமிடத்திற்குப் போய் வரத் தொடங்கினாள் ஆலின். தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கென நான்கு கார்த்தரிப்பிடங்கள் உள்ளன. அவை தொழிற்சாலைக்குப் புறம்பாக இருந்தன. அங்கே செல்வதற்கு 'கீ கார்டைப்' பாவிக்க வேண்டும். அவள் அங்கே போய் என்ன செய்கின்றாள்?

அதை அறிந்த போது நந்தனுக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது.

அமைதியாக எந்தவித பிரச்சனைகளுக்கும் இடம் கொடாமல் வேலை செய்து வந்த ஆலினின் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. நந்தன் அங்கு இரண்டு வேடங்கள் போடவேண்டியதாயிற்று. எல்லோருடன் நிற்கும்போது ஒருமாதிரியும், தனித்து நிற்கும்போது இன்னொரு மாதிரியும் அவளுடன் பழகத் தொடங்கினான். அவளின் கடந்தகாலம் பற்றி அறியும் ஆவல், அவளுக்கு புத்திமதி சொல்லவேண்டும் என்ற நினைப்பு. அவை இரண்டுமே இப்போது அவனுக்கு முதன்மையாக இருந்தன. ஒரு பெண்ணின் நினைவுகளைக் கிழறி, அவள் உள்மன ஆழத்திலே பொதிந்திருக்கும் உண்மையைத் தேட நந்தனின் மனம் துடியாய்த் துடித்தது. சிலவேளைகளில் தேவையில்லாமல் அவளின் விவகாரங்களில் எல்லாம் தலையிட்டான். அவளும் அதையிட்டு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆலின் போதைப்பொருள் பாவிப்பதாகக் கதைத்துக் கொண்டார்கள். அதனால்தான் அவள் இரவு வேளைகளில் 'கார் பார்க்' சென்று வருகின்றாள் எனக் கதை பரவியது. நந்தன் இதையெல்லாம் ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுவான். ஆனால் அவள் சிகரெட் குடிப்பதை சிலவேளைகளில் கண்டிருக்கின்றான். வேலை செய்யுமிடங்களில் ஆண்களைவிட பெண்கள்தானே புகைப்பழக்கதில் அதிகம் உள்ளார்கள்.

ஒருநாள் இரவு சாப்பாட்டு இடைவேளையின் பின்னர், பிறைமர்குறூப் லீடரின் பிரத்தியேக அறைக்கு முன்னால் வேலையை இடைநடுவில் விட்டுவிட்டு வந்து நின்றாள் ஆலின். மூடியிருந்த அந்த அறையின் கதவைத் தட்டினாள். உள்ளேயிருந்த மக்காறியோ ஆலினைப் பார்த்து விட்டு பேசாமல் இருந்தான். அவள் கதவைத் தட்டி, கண்ணாடி ஜன்னலினூடாக தனது இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டிக் காட்டினாள். பின்னர் ஓவரோலைக் கழற்றி, மேல் சட்டையை உயர்த்தி தனது தொப்புளைக் காட்டினாள். தொப்புளில் வளையம் ஒன்று தொங்கியிருந்தது. மக்காறியோ தனது பாசையில் ஏதோ திட்டிவிட்டு கதவை உள்புறமாகப் பூட்டிக் கொண்டான். ஆலின் கெட்ட வார்த்தைகளினால் அவனைப் பேசிக் கொண்டே தனது வேலை செய்யுமிடத்திற்குத் திரும்பினாள். சக தொழிலாளர்கள் இந்தக் காட்சியை விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

மக்காறியோ ஒரு முறுக்கேறிய தடியன். முப்பத்தைந்து வயதுடைய இள ரத்தம் அவன். ஆலின் சிலவேளைகளில் அவனின் அறைக்குள்ளிருந்து குசுகுசுத்துக் கதைத்துச் சிரிப்பாள். விரும்பிய நேரமெல்லாம் அவனின் ரெலிபோனை எடுத்து யார் யாருடனோ கதைப்பாள். ஆலின் இப்பொழுது புரிந்து கொள்ள முடியாத ஒருத்தியாக உருமாறிக் கொண்டிருந்தாள்.

வரும்போது ஒரு தங்கப்பதுமையாக இருந்த அந்தச் சின்னஞ்சிறு பெண், எட்டு மாதங்களிற்குள் இவ்வளவு மாற்றத்தைத் தருவாள் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இளம் கன்று பயம் அறியாது என்பதைப் போல சிகரெட்டும் கையுமாகத் திரிந்தாள். 'பால்' பேதமற்று எல்லோருடனும் சகஜமாகப் பழகத் தொடங்கினாள். சக தொழிலாளர்களுடன் கூடி நின்று விளம்பரங்களுக்கு போஸ் குடுப்பது போல நிற்பாள். ஒகாரா சிலவேளைகளில் தனது நண்பனைத் தேடி பிறைமருக்குச் செல்வான். அவனுக்கு ஆலினுடன் கதைப்பதென்றால் ஒரே குஷி. அவ்வேளைகளில்,  கொன்வேயரில் இழுபட்டுச் செல்லும் காரின் ஒவ்வொருபக்கக் கதவிலும் - ஒகாராவும் அவளுமாகத் தொங்கிக் கொண்டு போஸ் கொடுப்பார்கள்.

அவன் அவளை மணங் என்று கத்துவதும் பதிலுக்கு அவள் மனோ என்று எதிர்க்குரல் இடுவதும் அங்கு சகசமாகிவிட்டது.

அதுவே அவளது உச்சக்கட்ட களிப்படைந்த பருவமாக இருக்கும்.

தொழிற்சாலையில் ஒரே அலை வரிசையில் எவ்.எம் றேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும். அதன் சத்தத்தை மாத்திரம் கூட்டிக் குறைக்கலாம்.

வானொலியில் அவளுக்கு விருப்பமான பாடல்கள் வரும்போது, வொல்யூமைக் கூட்டிவிட்டு ஆடத் தொடங்கினாள். பலரும் விரும்பும் Titanic’ பாடலான ‘My Heart Will Go On’ பாடும்போதுகூட மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதிக்கும் ஆலின், Kelly Clarkson இன் ‘Because Of You’ என்ற பாடல் வானொலியில் வரும்போது அமைதியாகிவிடுவாள். கண்களில் இருந்து சிலவேளைகளில் கண்ணீரும் வந்துவிடும்.


சிலநாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வேலைக்கு வராமலும் நின்று விடுவாள்.

அவளின் வருகையில் திருப்தியுறாத நிர்வாகம் அவளிற்கு தலையிடி கொடுக்கத் தொடங்கியது. அந்த நேரங்களிலெல்லாம் அவளது குறூப் லீடர் மக்காறியோ தலையிட்டு அவளைக் காப்பாற்றி விடுவான். அவளது இனத்தவன் அவளைக் காப்பாற்றுகின்றான் என்பார்கள். ஆனால் விசயமோ வேறு விதமாகப் போய்க் கொண்டிருந்தது.


இரண்டு மூன்று வாரங்களாக அவள் வேலைக்கு வரவில்லை. அவளுக்கும் 'வரவில்லை' என்றார்கள்.

 "Because Of You"

I will not make the same mistakes that you did
I will not let myself
Cause my heart so much misery
I will not break the way you did,
You fell so hard
I've learned the hard way
To never let it get that far

Because of you
I never stray too far from the sidewalk
Because of you
I learned to play on the safe side so I don't get hurt
Because of you
I find it hard to trust not only me, but everyone around me
Because of you
I am afraid

I lose my way
And it's not too long before you point it out
I cannot cry
Because I know that's weakness in your eyes
I'm forced to fake
A smile, a laugh every day of my life
My heart can't possibly break
When it wasn't even whole to start with

Because of you
I never stray too far from the sidewalk
Because of you
I learned to play on the safe side so I don't get hurt
Because of you
I find it hard to trust not only me, but everyone around me
Because of you
I am afraid

I watched you die
I heard you cry every night in your sleep
I was so young
You should have known better than to lean on me
You never thought of anyone else
You just saw your pain
And now I cry in the middle of the night
For the same damn thing

Because of you
I never stray too far from the sidewalk
Because of you
I learned to play on the safe side so I don't get hurt
Because of you
I try my hardest just to forget everything
Because of you
I don't know how to let anyone else in
Because of you
I'm ashamed of my life because it's empty
Because of you
I am afraid

Because of you

Because of you

இன்னும் வரும்...

No comments:

Post a Comment