Saturday, 29 February 2020
Friday, 28 February 2020
மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்
பகுதி (3)
ச க் தி
வழிபாடு
சக்தி” என்றால்
(ஆங்கிலத்தில்) Energy
Potential energy - அடங்கியிருக்கும் சக்தி
Kinetic energy - வெளிப்பட்ட
சக்தி
சக்தியில்லாமல்
உலகமோ, உலகிலுள்ள எந்த சீவராசிகளோ, பஞ்சபூதங்களோ
எதுவும் இயங்கமாட்டா. ஒலி,
ஒளி, வெப்பம், குளிர், மின்சாரம், மின்னணு,
காந்தம், இணையம்,
சுழற்சி, இறுக்கநிலை இவைகளெல்லாம்
சக்தியின் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளேயாம்.
சிவபெருமான்கூட
தனது சக்தியின் மூலமாகத்தான் படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல்,
அழித்தல் என்னும் ஐந்தொழிலையும் செய்கின்றார்
என்கிறது சமயம்.
Thursday, 27 February 2020
மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்
பகுதி (2)
இஸ்டதெய்வ வழிபாடு
இவ்வுலகில்
மானிடனாகப் பிறந்த எவரும் தமது
வாழ்க்கையில் துன்பம், கஸ்டம், துக்கம் முதலியவற்றை
அனுபவிக்க விரும்புவதில்லை. மனிதர்கள் தமது வாழ்நாள் முழுவதும்
சுமுகமான, இன்பமான வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள்.
அத்தோடு,
மறுபிறவியில் நம்பிக்கை ஊன்றியிருக்கும் இந்துமதம் போன்ற சமயங்களைச்
சார்ந்தவர்கள் தங்களுக்கு இப்பிறப்பில்மட்டுமல்ல, வரும் மறுபிறவிகளிலும்கூட நோய்நொடியற்ற
சுபீட்சமான வாழ்வு கிடைக்கவேண்டுமென்பதற்காகவே இப்பிறப்பில்
தீவினைகள், பாபச்செயல்கள் முதலியவற்றைத் தவிர்க்கின்றார்கள்.
Wednesday, 26 February 2020
மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்
(பகுதி 1)
மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது
ஆதிகாலத்து
மனிதனுக்கு அன்றாட தேவைகள் மிகவும்
குறைவாகவே இருந்தன. அவற்றுள் முக்கியமானவை உணவு தேடி உண்பதும்,
ஆண்பெண் உறவுமாகும். இவைகளோடு அவனது வாழ்நாட்கள் கழிந்தன.
அன்றாடத்
தேவைகளை வெற்றிகரமாகக் கையாளுகிறோம் என்று அவன் திருப்தியடைந்திருந்தான்.
வேறு தேவைகள் ஏற்படாதவரையும் அவன்
வேறெதையும்பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால்,
காலப்போக்கில், தனது அன்றாட தேவைகள்
உணவோடும் உறவோடும் நின்றுவிடவில்லை என்பதையும், மேலும் பல தேவைகளும்
ஆசைகளும் மனிதகுலத்துக்கு உண்டு என்பதையும் அனுபவரீதியாக
உணரத்தொடங்கினான். அதனால், படிப்படியாக அவனுடைய
தேவைகளும்
ஆசைகளும் விரிவடைந்த அவனுடைய முயற்சிகளும் பலதரப்பட்டவையாகப் பரிணமித்தன.
Tuesday, 25 February 2020
நான் பிள்ளைத்தாச்சி - சிசு.நாகேந்திரன்
நான் தலைப்பிள்ளைத்தாச்சி.
நான் திருமணமாகினவள். ஆதலால்
நான் பிள்ளைத்தாச்சி எண்டு சொல்லுறதிலை வெக்கமில்லை. ஆனால்
எனக்குக் கலியாணமாகி (ஆறு) வருசம். இப்பதான் பிள்ளைப்பாக்கியம் கிடைச்சிருக்குது. அதுவும்
பிள்ளைவேண்டி நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை.
என்ரை புருசன் ஒஸ்ரேலியாவிலை (8) வருசமாயிருந்தவர். என்னைக்
கலியாணங்கட்டி கொண்டு வரேக்கையே சொன்னவர்,
“வெளிநாடுகளிலை மனிசன்ரை வாழ்க்கை யந்திர வாழ்க்கை. நாள் முழுவதும் பிசியாயிருக்கவேணும்
எண்டது ஒரு கட்டாயம். விடிய எழும்பி வேலைக்கு
ஓடுறது. வேலை
முடிஞ்சு வீட்டைவாற வழியிலை கடைத் தெருவிலை
சொப்பிங் செய்து கொண்டு வரவேணும். வந்த
களைப்போடை தேத்தண்ணி போட்டுக் குடிச்சுப்போட்டு உடனை சமையல் துவங்கவேணும். இடைக்கிடை
Take away எடுக்கலாம் தான். நாக்குக்கு ருசியாயிருக்கும், ஆனால்
அடிக்கடி அது வாங்கக் கட்டுபடியாகாது. சுகாத்தியத்துக்கும்
நல்லதல்ல. சனி
ஞாயிறுகளிலும் வேலைதான். வேலையெண்டால்,
பெரிய சமையல் செய்யிறது அப்பதான். அதோடை
உடுப்புகள் தோய்ச்சுக் காயவிடுகிறது, வீடு வாசல் சுத்தப்
படுத்துகிறது, சிநேகிதரைக் காணப்போறது, கூட்டங்களுக்குப் போறது, படம் பாக்கிறது
- இப்பிடி பல சோலியளும் சனி
ஞாயிறிலைதான் நடக்கும். அப்ப, தினமும் இடைவிடாத
வேலைதான்.
Sunday, 23 February 2020
மனிதன் - அணுவா அல்லது அண்டமா? - சிசு நாகேந்திரன்
நாம் நிறைவேற்றமுடியாத ஆசைகள்,
எண்ணங்கள், கற்பனைகள்தாம் பின்னர் கனவில் தோன்றும்
என்று சொல்வார்கள். அவர்கள்
கூறுவதில் உண்மை இல்லாமலில்லை.
கனவோ கற்பனையோ என்று கூற முடியாத
அளவுக்கு எனக்கு ஒரு அனுபவம்
உண்டாயிற்று.
வெளி முற்றத்தில் மல்லாக்கப்
படுத்திருக்கிறேன். நித்திரை
கொள்ளவில்லை. மூளை
வேகமாக வேலைசெய்தது. கற்பனை
கரை புரண்டு ஓடிற்று. என்னுடைய உடலை அப்படியே கிடக்க
விட்டு விட்டு, நான் (சூக்குமதேகம்
- உயிர்) மேல்நோக்கிக் கிளம்பிவிட்டேன். மிக
வேகமாக, சத்தத்திலும்பார்க்க வேகமாக, மேல்நோக்கிப் போய்க்கொண்
டிருக்கிறேன்.
Friday, 21 February 2020
வாழ்க்கை என்பது என்ன? கனவா அல்லது நாடகமா? - சிசு நாகேந்திரன்
உலகமே ஒரு நாடகமேடை. அதில்
நாமெல்லோரும் நடிகர்கள். பூமி என்னும் மேடையில்
ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடம் தரித்துக்கொண்டு தங்கள்
தங்கள் பாத்திரங்களைச் செவ்வனே நடித்துவிட்டுப் போகிறார்கள்.
இந்த நாடகத்துக்கு ஒத்திகையில்லை. நடிகர்களின்
ஒப்பனையை இயற்கையே செய்து விடுகிறது. முன்னறிவிப்பின்றித்
தோன்றி, தத்தம் பாத்திரங்களைத் திறம்பட
நடித்துவிட்டு நடிகர்கள் மறைந்துவிடுகிறார்கள். உலக நாடகமேடையில் எல்லோருமே
நடிகர்கள். பார்வையாளர்களும்
அவர்களே! வேறாக
பார்வையாளர்கள் என்றில்லை.
Tuesday, 18 February 2020
வாழ்க்கைப் பாலம் - சிசு நாகேந்திரன்
ஒரு நீண்ட பாலம். அது மிகவும் அகலமானது. அந்தப்பாலத்தின்கீழ் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. பாலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறியமுடியாதபடி இரண்டு எல்லைகளையும் கருமுகில் மறைத்துக்கொண்டிருக்கிறது.
பாலத்தினூடாக சனங்கள் நிறையப்பேர் போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் நடந்துகொண்டும், சிலர் ஓடிக்கொண்டும், துள்ளி விளையாடிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் போவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், வெவ்வேறு சமுதாயத்தினர், வேறுவேறு இனத்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் அப்பாலத்தின் மேல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
Tuesday, 11 February 2020
ஒட்டமோ ஓட்டம்
அந்தத் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு வாசல்களும், இரண்டு வீதிகளைத் தொட்டு
நின்றன. பிரதான வாசலின் முன்னால் வந்து நின்ற பேரூந்தில் இருந்து – சாயினியும்,
அவளது மூத்த அண்ணன் கிருபனும், அம்மாவும் அப்பாவும் இறங்கிக் கொண்டனர்.
சாயினி - கறுப்பு என்றாலும் திரும்பிப் பார்க்க வைக்கும்
அழகு. பளீரிட்டு மார்புவரை கீழ் இறங்கி நிற்கும் `பொனி ரெயில்’. நெற்றியிலே மரூன்
கலரில் துலங்கும் ஒரு அரசமிலை ஸ்ரிக்கர் பொட்டு. இரண்டு பெரிய வட்டங்கள் கொண்ட
மூக்குக்கண்ணாடி. பள்ளிக்கு உரித்தான எடுப்பான ஆடை.
சாயினிக்கு இன்று கடைசிப் பரீட்சை. அவள் மனதில் பதட்டம்.
பரீட்சை எழுதுவதில் அவளுக்கு என்றுமே பதட்டம் இருந்ததில்லை. இன்று அவளது
வாழ்க்கைக்கும் ஒரு பரீட்சை.
Friday, 7 February 2020
கங்காருப் பாய்ச்சல்கள் (29) - சிண்டு முடிகின்றார்கள்
அவுஸ்திரேலியாவில் அதிகம் சிண்டு முடிகின்றவர்கள் யார் என்று பார்த்தால் – தம் வாழ்நாளில் ஒருபோதுமே உழைத்துச் சாப்பிடாதவர்கள் தான். அவர்களால் காரும் ஓட முடியாது. எப்போதுமே கணவனிடம் (அல்லது மனைவி / பிள்ளைகள்) தங்கி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது என்பதல்ல இதன் அர்த்தம். அவர்கள் குள்ளநரிக் கூட்டங்கள்.
Sunday, 2 February 2020
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்
“டொக்ரர்…. இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்குப் போய், செக்
பண்ணிப் பார்த்தால் என்ன?” எதிரே இருந்த குடும்ப வைத்தியர் கருணாகரனிடம்
கேட்டுவிட்டு, தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் கமலா. கொஞ்ச நாட்களாக அவள் மனம்
பதை பதைக்கின்றது. சரியாக உறக்கம் கொண்டு நாளாகிவிட்டன. திடீர் திடீரென உறக்கம்
கலைந்து, எதையோ பறிகொடுத்தது போல யோசனைகள். வாழ்வின் சமநிலை குலைந்து மனம்
அந்தரித்தபடி இருக்கின்றது.
அவுஸ்திரேலியாவிற்கு வந்த நாள் தொடக்கம், வைத்தியர்
கருணாகரன் தான் இவர்களின் குடும்ப வைத்தியர். அவளுக்குப் பக்கத்தில் பன்னிரண்டு
வயதில் மகளும், எட்டு வயதில் மகனும் இருந்தார்கள். இருவரும் தமது கைகளை
முழங்காலுக்கு மேல் படரவிட்டபடி நிறுதிட்டமாக அமர்ந்திருந்தார்கள்.
வைத்தியர் கருணாகரன் நெடிதுயர்ந்த தோற்றம் கொண்டவர். மருத்துவத்துறையில்
நீண்ட அனுபவம் வாய்ந்தவர். சற்றே வயிறு துருத்திக் கொண்டிருந்தாலும்
கம்பீரத்திற்குக் குறைவில்லை. குழந்தைகள் இருவரும் தமது கழுத்தை உயர்த்தி
வலிக்கும் வண்ணம், வைத்தியர் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். வைத்தியர், கமலாவின்
கேள்விக்கு பதில் தராமல், புத்தகமொன்றை எடுத்து பிரித்துப் பார்த்துக்
கொண்டிருந்தார்.
“ரவுன்லை நீங்கள் போனதுதான் நல்ல ஹொஸ்பிற்றல். அவர்கள்
என்ன சொல்கின்றார்கள்? திரும்பவும் எனக்குச் சொல்லுங்கள்!” புத்தகத்தினின்றும்
கண்ணை விலத்தாமல் கேட்டார் கருணாகரன்.
Subscribe to:
Posts (Atom)