Sunday, 28 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 3 - பாதாளவுலகம்
அமிர் லண்டனை அடைந்து, கில்லாடி வீட்டில் தங்கத் தொடங்கி மூன்றாவது நாள் மாலை நேரம். வானம் இருண்டு கொண்டு வந்தது. மெல்லிதாக குளிர் தேகத்தைச் சுரண்டியது. வீதிகளில் வாகன, சன நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

                சொலிசிற்றர் நாகப்பனின் கந்தோரிலிருந்து ஜீவிதாவின் காரில் வீடு திரும்பியபோது கில்லாடி வீட்டில் இருக்கிறீர்கள். வம்பை விலைக்கு வாங்கப்போகிறீர்கள்" என்று அவள்  இரண்டாம் முறை எச்சரித்ததையும், கில்லாடி வீட்டில் நடக்கும் மர்மச் சம்பவங்களையும் இணைத்துப் பார்த்த அமிரைப் பயம் சூழ்ந்து உலுப்பியது.

                நிலத்தை இருள் கௌவியிருந்தது. அமிர் கில்லாடி வீட்டு வரவேற்பறையில் பஞ்சு மெத்தைபோன்ற இளஞ்சிவப்பு செற்றியில்இருந்தான். அச்சமயம், வெளியே குப்பை கொட்டும் பெரிய கரும் பச்சைப் பிளாஸ்டிக்வாளியில் கடந்த இரு நாட்களும் நடந்த அதே மாதிரி மூன்று தடவைகள் டொக் டொக்என்று தட்டும் சத்தம் கேட்டது.

                 கில்லாடி விரைந்து போய்க் கதவுக் கண்ணாடித் துவாரமூடாக வெளியே குப்பை வாளியில் டொக்குரல் கொடுத்தவனைப் பார்த்தான். பின்னர் செல்லருள் - நிலவாய்வுப் பாவனை வர முன்னர் குளிர் காலத்தில் வீட்டுக்கு வெப்பம் ஊட்டப் பாவிப்பதற்காக நிலக்கரி சேமித்து வைத்த நிலவறைக்குள் - இறங்கி ஏதோ ஒரு சிறு பொருளைக் கையில் எடுத்து வந்த பின்னா,; கதவைத் திறந்து வெளியே குப்பை வாளி ஓரம் நின்றவனிடம் கொடுத்துவிட்டுத் திரும்பி வரும் பொழுது காசுத் தாள்களை எண்ணிக்கொண்டு வருவதை அமிர் கண்டும் காணாதவன் போல ரி.வி. யைப் பார்த்தான்.

                நள்ளிரவு வரை இப்படிப் பலர் வருவதையும் போவதையும்  அவதானித்த அமிரின் காதுகளில் ஜீவிதாவின் எச்சரிக்கைகள் மீண்டும் மீண்டும் ஒலித்து அவனுக்கு அச்சமூட்டின.

போதைப் பொருளாக இருக்குமோஎன்று சந்தேகித்தவனுக்கு கில்லாடிக்குத் தொழில் இல்லை. இரண்டு வீடு இரண்டு கார் வைத்திருக்கிறான்என்ற ஜீவிதாவின் சொற்கள் மீண்டும் அவனது காதுகளுள் புகுந்து கேள்விகளை எழுப்பின.

                அப்பணத்தின் அடையாளம் அமிர் வீற்றிருந்த கில்லாடியின் வரவேற்பு அறையிலும் தெரிந்தது. கீழே நிலத்தை மூடியிருந்த மிக விலை உயர்ந்த இளஞ் சிவப்புக் கம்பளங்கள் கண்களுக்கு விருந்தளித்தன. சுவர்கள் வாழைக் குருத்தன்ன வண்ண நிறச் சுவர்க் கடதாசியால் கவர்ச்சியாக அழகூட்டப் பட்டிருந்தன. ஓரு பெரிய பளபளப்பான ரி.வி. ஒய்யாரமான இருக்கையில் அமர்ந்திருக்க, அதன் இரு ஓரமும் நூற்றுக் கணக்கான வீடியோ கஸற், சி.டி..  என்பன  நிரை நிரையாக மனதைக் கவரத்தக்கதாக ஒழுங்காக மின்னும் தாங்கிகளில் காட்சி கொடுத்தன. அவற்றின் வெளியோரமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி கெய்யப்பட்ட ஆளளவு உயர வெங்கலக் குத்து விளக்குகள் பளீரென ஒளிர்த்தன.

                மேலே மனதைக் கிள்ளும் பிரமாண்டமான மின்சார விளக்குக் கண்ணாடிக் குமிழ்க் குலைகள் அவனைப் பார்த்து எப்படித் தம்பி அமிர் லண்டன்?’ என்று கேட்பது போல அவனுக்குப் பட்டது. அதைவிட அங்கிருந்த மொடல்போன்ற கவர்ச்சி மழை சொரிந்த ஐந்தடிவுயர அடிக்கடி உயிர்த்தெழும் குங்குமப் பொம்மையின் மின்சார விழிகளின் கண் சிமிட்டல் அவனை எங்கோ அழைத்தன. அதன் ஓரமாக ஒரு மீன் தொட்டி. ஒரு மூலையில் நீர் இரைந்து நுரை தள்ளிக் கொண்டிருந்தது. வண்ண வண்ண மீன்கள் மனதைப் பறித்தன. கனவுலகில் இனிமை காண்பது போன்ற பிரமை அவனுக்கு. மேலும் அவன் வீற்றிருந்த இளஞ் சிவப்பு பஞ்சணை மெத்தைச் சோபாக்களிலிருந்து தாழம்பூ வாசனையைவிட ஓர் உன்னதமான சுகந்த வாசனை  மிதந்து வந்து அவனை அரவணைத்தது.

                அந்த வரவேற்பறைக் காட்சி கற்பூரம் கொழுத்துமிடமெல்லாம் கடவுள் இருக்க வேண்டயதில்லை, அதே போல நறுமணம் கமழும் இடமெல்லாம் நாணயத்தர்கள் இருக்க வேண்டுவ தில்லைஎன்று அமிருக்கு உபதேசம் செய்தது.

                அப்பொழுது வெளிக்கதவு அழைப்பு-மணி மூன்று முறைகள் விட்டு விட்டு இராகம் இசைத்தது. உடன் கில்லாடி விரைந்து சென்று கதவு திறக்கும் சத்தம் அமிருக்குக் கேட்டது. கில்லாடியின் பின்னே இருவர் வந்தனர். அமிரை முதல் இரு நாட்களும் அகதிகள் உதவிப் பணம், மற்றும் வீட்டு வாடகைப் பணம் வழங்கும் கந்தோர்களுக்கு அழைத்துச் சென்ற ஒற்றைக் கண் கோட்டான் சூட்டியும், ஊத்தைவாளி குகனுந்தான்  அவர்கள். ஊத்தைவாளி குகனின் பென்னாம் பெரிய பானைத் தலையும், அடிக்கடி விரிந்து சுருங்கிய சின்னோட்டி மூக்கும், ஆழத்தில் எங்கோ தெரிந்த சிறிய வட்டக் கூரிய கண்களும் அமிரை அச்சுறுத்தின. கோட்டான் சூட்டியின் நீண்ட போனி ரெயிலையும்இடது ஒற்றைக் கண்ணை மட்டும் மூடிய நீள்வட்ட கறுப்புக் கண்ணாடிக் கவசத்தையும் அருவருப்போடு பார்த்தான். எல்லோருக்கும் முப்பது வயதுக்கு மேலிருக்கும் போல’. அவன் மனம் சொன்னது. அவர்களும் முன்னை நாள் யாழ்ப்பாண விடுதலைப் போராளிகள் என்பது அமிருக்கு இன்னும் தெரியாது.

                அந்த மூவரும் அவன் இருந்த வரவேற்பறைக்குள் சென்றதும் சோபாக்களில் உட்காராமல் ஆளை ஆள் பார்த்துக்கொண்டு பேசாமல் நின்றனர்;.
எங்கே அவன்?" கோட்டான் சூட்டியின் காதோடு வாயை வைத்து அமிருக்குக்கேட்காமல் கில்லாடி கேட்டான்.
தோட்டத்துக்குள் போய்க்; கதைப்போம்."
சரி. விரைவா வா."

                வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்துக்குப் புறப்பட்டதைக் கவனித்த அமிர், கோட்டான் சூட்டியும், ஊத்தைவாளி குகனும் கில்லாடியிலும் ஆறங்குலமளவில் உயரமாக இருப்பதை அவதானிக்கத் தவறவில்லை. போகும் பொழுது கோட்டான் சூட்டி தனது குலைந்த கூந்தலின் றப்பர் வளையத்தைக் கழற்றி மீண்டும் போனி ரெயிலைஇறுக்கியபடி, ஒற்றைக் கண்ணால் அமிரை நோட்டம் பார்த்தவண்ணம் அறையைவிட்டு வெளியேறுவதை அமிர் கவனிக்கவில்லை.
                “மடையன் எங்கள் சமிக்கையைக் கவனிக்கவில்லை." அடுக்களையூடாகத் தோட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்த விரிந்து சுருங்கிய சின்னோட்டி மூக்கு கில்லாடிக்கு சொன்னது.

                ஒன்றன் மேல் ஒன்றமைந்த புகையிரதப் பெட்டிகளைப் போல அடுத்து அடுத்துக் காணப்படும் லண்டன் வீடுகளின் பின் புறத்தே கிட்டத்தட்ட முக்கால் பரப்பு விஸ்த்தீரணமுடைய  தோட்டங்களைப் பார்க்கலாம்.

       யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசித்தகாலை செம்பாட்டுத் தோட்ட நிலத்தில் கால் பட்டால் தாம் தமது சமூக உயர் தரத்திலிருந்து இறங்கிவிடுவோம் என்று வெட்கப்பட்டவர்கள், தோட்டச் செய்கை பற்றி ஏதும் தெரியாத வெண்ணிற ஆடை உத்தியோகத்தர்கள், கடற் தொழில் செய்தவர்கள், ஆசிரியர்கள், வாணிபம் பார்த்தவர்கள், பேருந்துவண்டி ஓட்டுநர்கள் - யாழ்ப்பாணத்தில் இப்படிப் பலரக தொழில் செய்த மக்களும் - லண்டன் கோடிப்புறத் தோட்டங்களிலே கோடையில் தக்காளி, அவரை, பீற்றூட், கறற், கீரை, வெண்காயம், உருளைக்கிழங்கு மரக்கறிப் பயிர்கள் செய்து நல்ல அறுவடை செய்கிறார்கள். கில்லாடி வீடுமட்டும் விதிவிலக்கல்ல. கில்லாடிக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.

      கில்லாடியின் மனைவி நதியா ஒரு புதிர். அப்பனும் மகளும் என்றே அமிர் அவர்களை முதல் முறை பார்த்தபொழுது தப்பாக எண்ணினான். வயது வித்தியாசம் மட்டுமல்ல, அவர்கள் சோடிப் பொருத்தம்கூட அடிமண்டையில் பேன் தேடும் மூஞ்சி நீண்ட மொட்டந் தலைக் கருங்குரங்கிற்கு றோசா மலர்மாலை அணிவித்தது போலவிருந்ததே, அவன் அப்படிக் கருதச் செய்தது. நதியா நீல ஜீன்சும் சிவப்பு பிளவுசும் அணிந்திருந்தாள். சின்ன சுந்தர வட்ட முகம். முடியை போனி ரெயிலாகக்கட்டி இருந்தாள். அது துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. அந்த வெள்ளைக் குருத்தின் முகத்தில் அப்பி இருந்த விசனம் அமிருக்கு அப்போது சரியாகப் பிடிபடவில்லை.

      நதியாவின் ஓய்வுநேரம் எல்லாம், உறுமும் றப்பர்ப் புலிக் குட்டிப் பொம்மையோடு கோடிப் புறத் தோட்டத்திலேயே சிந்திச் சிதைவதுகூட, அந்த வீட்டிலே ஒரு மர்மம் தேங்கிய கேள்விக்குறி;யாக இருப்பது அமிருக்கு இன்னும் தெரியாது.

                அந்தத் தோட்டத்துள் அவசர அவசரமாகச் சென்ற கில்லாடியும் சகபாடிகளும் குசுகுசுக்கத் தொடங்கினர். அணில் மீது பாயப் பதுங்கும் நாயைப் போல சுவரோடு ஒட்டினாற் போல அசையாது நின்ற கில்லாடியின் சம்சாரம் நதியா, அவர்கள் பேசுவதை வெகு அவதானமாக உற்றுக்கேட்டாள்.

எங்கே அவன்?" கில்லாடி அவசர அவசரமாய் வினாவினான்.
பொலிஸ் பிடிச்சிட்டுது" கோட்டான் சூட்டி தயங்கித் தயங்கிச் சொன்னான்.
அட கடவுளே! என்ன நேரம்?" கில்லாடி அவசரப்படுத்தினான்.
இரண்டரை மணியளவிலே" என்று கூறிய குகனின் சின்னோட்டி மூக்கு விரிந்து சுருங்கியது.
ஏன் உடனே வரயில்லை. என்ன மடை வேலை செய்தீர்கள். இப்ப நேரம் இரவு 8.30. இவ்வளவும் என்னடா செய்த  நீPங்கள்?"
பதில் இல்லை. அவர்கள் நிலத்தைப் பார்த்தனர்.
நாய்ப் பயல்களே. நீங்கள் கவனமாக இருந்திருந்தால் பொலிஸ் அவனைப் பிடித்திருக்காது. முட்டாள் சனியன்கள்."

                அவ்வேளை தனது சின்னக் கால்களை மெதுவாக எடுத்து வைத்து வரவேற்பு அறைக்குச் சென்ற நதியா,
சால்வை மூத்தான் ஹெரோயின் பொட்டலம் விற்ற வேளை பொலிசில் பிடிபட்டிட்டான்.என்று அமிருக்குக் காதோடு காதாகக் கூறிவிட்டு, ரி.வி.யை நோக்கிப் போனாள். சால்வை மூத்தான் ஒரு முன்னைநாள் கறுப்பு நரி - இயக்கத்துக்கு கரி பூசிவிட்டு - ஒழித்து வந்து லண்டனில் வாழ்கிறான்என்று அமிருக்கு கூறவிரும்பினாள். கூற நேரகாலம் அவளுக்குச் சரிவரவில்லை. மௌனமாக ரி.வியை இயக்க தலையை தாழ்த்தி கறுப்புப் பொத்தானை அழுத்த அவளது போனி ரெயில்குதித்து அமிரைப் பார்த்தது.

                சால்வை மூத்தான் என்று நதியா கூறியதும் அமிரின் மனத்திரையில், தொங்கிட்டான் ஆடும் காதுக்கு மேலே ஓரங்குலம் உயரம் வரையுள்ள, மண்டையைச் சுற்றிய மயிர் மழிக்கப்பட்ட, உச்சந் தலையில் மட்டும் அரை அங்குல உயர மயிர் குத்தி நிற்கும் ஒரு முப்பத்திரண்டு வயது உருவம் தோன்றி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தது. அமிர் மூக்கைச் சுழித்தான்.

                ரி.வி.யை இயக்கிவிட்டு திரும்பிய நதியா, போர்க் களத்தில் போராளி எதிரி கண்ணில் படாமல், சந்தடி இல்லாமல் நகர்வது போல, தன் சின்னக் கால்களை நிதானமாக நகர்த்திச் சமயலறைக்கு ஓடைவழியே செல்லப் புறப்பட்டாள். ஒரு முறை திரும்பி அமிரின் புதுமலர் போன்ற முகத்தைப் பார்த்தாள். புதிய ஒரு பரவசம் அவளை அரவணைத்தது. எங்கே அழைத்துச் செல்லும் அந்தப் பரவசம்? அவளுக்கு அப்போது அது தெரியாது.

                அவள் வழமை போலப் போனி ரெயிலாகஉயர்த்தி உச்சியை அண்டிக் கட்டியிருந்த அவளது அடர்த்தியான நேரிய கருங் கேசம், அவள் திரும்பும்போதும் நடக்கும்போதம்; துள்ளி நெளிந்து வளைந்து குழைந்து சிங்கார மொழியில் பேசுவது கண்டு அமிரின் உள்ளம் பூரித்தது. அவள் நெற்றியைச் சார்ந்த கேசத்தை வில்வளைவில் ஒன்றரை அங்குல உயரமாகக் கத்தரித்து அவை நெற்றியில் தவழ்ந்த காட்சி அவனின் மனத்தைத் தழுவிவருடியது. அவளின் ஓசையற்ற அசைவும், இளமையின் ராகமும் அவனுக்கு இதமாகவிருந்தன. ஆனாலும் அவள் வதனம் சொல்லும் சரிதை அவனுக்கு எப்பனும் விளங்க மறுத்தது.

                சால்வை மூத்தானும் கில்லாடி வீட்டில் சில மாதங்களாக ஒரு தனி அறையில் வசிப்பவன்தான். ஏன் சால்வை மூத்தான் பெண்சாதி பிள்ளைகளோடு இல்போட்டில் - அருகே உள்ள வேறொரு நகரத்தில் - வசிக்காமல் கில்லாடி வீட்டில் வசிக்கிறான் என்ற ரகசியம் அமிருக்குத் தெரியாது. 

                பொலிஸ் வழமை போல வரும். சால்வை மூத்தானின் அறையைத் தேடும் என்பது கில்லாடிக்கு நன்கு தெரியும். பிரிட்டிஷ் பொலிஸ்க்காரன் காரணம் இல்லாமல் மற்றவர்களின் அறைகளுக்குள் புகுந்து தொந்தரவு கொடுக்கமாட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயந்தான். கில்லாடி, கோட்டான் சூட்டி, ஊத்தைவாளி குகன் மூவரும் சால்வை மூத்தானின் அறைக்குள் வேறு ஏதாவது தவறான பொருட்கள் இருக்கின்றனவா என்று அதனைச் சல்லடைபோட்டுக் கொண்டிருந்தனர்.

                “அமிர் அண்ணை, டொக் டொக் சத்தம் கேட்குது. அவை மூத்தானின் அறையிலிருந்து படியாலே இறங்கி வருகினம். என்னைக் காட்டிக் கொடுக்காதையுங்கோ. நான் வாறன்" என்று  கூறியபடி நதியா அவ்விடத்தை விட்டு நழுவித் தனது அறைக்கு, படி வழியே ஏறி மேலே மாடிக்குப் போனாள்.

நாங்கள் போயிட்டு வாறம்." கோட்டான் கில்லாடிக்குச் சொன்னது.
சரி."
மூத்தான் வந்ததும் போன் பண்ணுங்கோ" என்று விரிந்து சுருங்கிய சின்னோட்டி மூக்கு மூசியது.
காலமை நேரத்தோடை வாருங்கோ." கில்லாடி அனுங்கினான். அவன் குரலில் அச்ச வாடை வீசியது.
ஏதன் விசேம் என்றால் போனில்கூறுங்கோ" என்று சொல்லியபடி கோட்டான் சூட்டியும், ஊத்தைவாளி குகனும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். விசேடம்என்று அவர்கள்  குறிப்பிட்டது பொலிஸ் வந்து யாருக்காவது - அதாவது கில்லாடிக்கு - ஏதாவது சிக்கல் நிகழ்ந்தால் என்பதைத்தான்.

                கில்லாடி வரவேற்பறைக்கு உள்ளே சென்று ஒரு சோபாவில் அமைதியாக இருந்தபடி அமிரைப் பார்த்தான். அமிர் எதுவும் தெரியாதது போல தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்தி கேட்டுக்கொண்டிருந்தான்.

தம்பி அமிர் ஒரு ஆங்கிலப் படக் கசற்இருக்குது. பார்க்கப் போகிறியோ?" கில்லாடி கேட்டான்.
ஓம். என்ன படம் அண்ணை?"
கில்லாடி படக் கசற்றைக்கொடுத்தான். அமிர் வாங்கிப் பார்த்தான். அது ஒரு திரைப்படக் கசற்.’ ‘யு ஆடைட ழn வாந குடழளள டில புநழசபந நுடழைவஅமிர் வாசித்தான். அவனின் முகம் மலர்ந்தது.
கில்லாடி அண்ணை. உங்களுக்கும் உடயளளiஉ பிடிக்குமோ?"
தம்பி உந்த கிளாசிக்கோ விளாசிக்கோ எனக்கு விளங்காது. நான் ஒரு கசட்பன்னிரண்டு பவுனுக்கு விற்கிறனான். உது களவாக அடிச்ச கொப்பி’."
கில்லாடி அண்ணை இது ஒரு பழைய அற்புதமான நாவல். அதிலே வருகிற மெகி என்ற குமர் ஒரு அற்புதமான பாத்திரம்." கில்லாடிக்குப் புரியுமா? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

                படம் சின்னத் திரையில் ஓடத் தொடங்கியது. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அமிர் திரும்பிக் கில்லாடியைப் பார்த்தான்.

                'கில்லாடி தனது மொட்டந் தலையைத் தடவியபடி இருக்கிறார். பிடரியில் மட்டும் கத்தை கத்தையாகக் கிடக்கிற முடியின் கீழ்ப்பாகத்தில் விரல்களை நுழைத்து  கிளப்பித் தலை முடியைச் சிலுப்பிக்கொண்டு இருக்கிறார். அவர் ஏதோ ஒன்றை எனக்குச் சொல்லலாமா விடலாமா என்று யோசிப்பதுபோல எனக்குப்படுகிறதுஎன்று அமிர் தனக்குள் மனதை ஊசலாடவிட்டபடி யு ஆடைட ழn வாந குடழளள' படத்தை அரைகுறையாகப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்தான்.

                அப்பொழுது நதியா வரவேற்பறைக்குள் வந்து மூன்று பேர் இருக்கக்கூடிய அந்த இளஞ் சிவப்புச் சோபாவில் கணவன் கில்லாடிக்கு நெருக்கமாக அமராமல் எட்ட மறு மூலையில் அமர்ந்ததுகூட அமிருக்கு வியப்பாக இருந்தது. அவள் கடைக் கண்ணால் கணவன் கில்லாடியைப் பார்த்துவிட்டு சின்னத் திரையில் ஓடும் திரைப்படத்தைப் பார்த்தாள்.

                அத்திரைப்படத்தில் வெள்ளைகாரப் பையன் ஒருவனும், வெள்ளைக் குமர் ஒன்றும் சீறிப்பாய்கின்ற ஆற்று வெள்ளத்தில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி மூழ்குவதைக் கண்டாள். அது அவளின் மனதைக் குடைந்தது. அவளுக்கு அது ரொம்மும் அவனது தங்கை மெகி என்பதும் தெரியாது. அவர்கள் காதலர்கள், அவர்கள் நீரில் பாய்ந்து தற்கொலை செய்வதாகத் தவறாக எண்ணி 'உப்படி நான் ஒரு காலமும் தற்கொலை செய்யமாட்டேன். நான் அப்பவே - இணுவிலில் இருந்த சமயம் கறுப்பு நரி இயக்கத்துக்கு ஒடிப் போயிருந்தால், புனித விடுதலைப் போராட்டத்துக்கு கேடு செய்த உந்த மனுசனுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கத் தேவையில்லை. ஆழ்வானின் கலைவாணி இயக்கத்துக்கு ஓடினது போல நானும் ஓடியிருக்க வேண்டும்.' என்று மனதுள் முணுமுணுத்தபடி திரும்பிக் கில்லாடியைப் பார்த்தாள்.

                கணவன் கில்லாடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை நதியா அவதானித்தாள். மூத்தான் அதுவரை பொலிசிலிருந்து திரும்பாதது கில்லாடிக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. அவன் மனம்  அந்தரித்தது. கில்லாடி திரும்பி மனைவியைப் பார்த்தான். அவள் அமிரின் மூக்கைப் பார்த்துச் சொக்கிப் போயிருப்பதைக் கண்டும் அதைப் பொருட்படுத்தாமல்,

போய் அறையைப் பூட்டிப்போட்டு இரும். சால்வை மூத்தான் மடையன். லைசன்ஸ’; இல்லாமல் கார் ஓட்டிப் பிடிபட்டிட்டான் போலத் தெரிகிறது. பொலிஸ் தேடி வந்தாலும் வருவான்" என்றான்.
சரி. நீங்களும் வாருங்கள். அதுக்கேன் பொலிஸ் வரப்போகிறான்?" என்று கூறியபடி சோபாவிலிருந்து நதியா எழுந்தாள்.

                கில்லாடி பொய் சொல்கிறான் என்பது அமிருக்கும் புரிந்தது.

                நதியா வரவேற்பு அறையை விட்டு நீங்க முன்பே கதவில் யாரோ படார் படார் என்று ஓங்கிக் குத்தும் சத்தம் கேட்டது.

போக வேண்டாம். பொலிஸ் வந்திட்டான். இங்கேயே இரும்" என்று கில்லாடி கை அசைத்து மனைவிக்குக் கூறிவிட்டுப் போய்க் கதவைத் திறந்தான். நீல ரவுசரும் வெள்ளை சேட்டும் இருண்ட நீல கழுத்துப்பட்டியும் அணிந்த இரண்டு பிரிட்டிஸ் பொலிசார் வாசலில் நின்றார்கள். இருவரும் வெள்ளையர்கள்.
உமது குடும்பப் பெயர்?"
கில்லாடி பொலிஸ்காரனை உற்றுப்பார்த்தான்.
அவன் மீண்டும் கேட்டான். யூ கில்லாடி?"
யா" என்றபடி மனதுள் மூத்தான் தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான்போல என்று கறுவினான்.
மூத்தான் லிவ் ஹியர்?" மற்றப் பொலிஸ்காரன் கில்லாடியை வினாவினான்.
கில்லாடி தலையை உயர்த்தி மேலே அவனைப் பார்த்து கூ மூத்தான்?" என்றான்.
சால்வை மூத்தான். அவன் இங்கே இருப்பதாகச் சொன்னான்" என்று பொலிஸ்காரன் ஆங்கிலத்தில் சொன்னான்.
யேஸ்;" என்று கில்லாடி கூறுவது அமிருக்குக் கேட்டது.
அமிர் எட்டிப் பார்க்க எழுந்தான். நதியா கைப் பாசையாலும் கண் பாசையாலும்; பேசாமல் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி அமிருக்குச் சமிக்கை காட்டினாள்.

                கில்லாடி இரு பொலிசாரையும் அழைத்துக்கொண்டு மேலே சால்வை மூத்தானின் அறைக்குப் போவதை அமிரும் நதியாவும் அவதானித்தனர்.

                கில்லாடி சால்வை மூத்தானின் அறைக்குள் எப்பவும் போகாதவன் போல அவனுடைய அறை வாசலில் நின்று பொலிசார் என்ன பண்ணுகிறார்கள் என்பதை அவதானமாகப் பார்த்துக்கொண்டு நின்றான்.

                ஒவ்வொரு பொருளையும் புரட்டுவதும் பார்ப்பதும் வைப்பதும், ‘பைல்களைப்புரட்டி வாசிப்பதுமாக இருந்தார்கள். ஒருவன் சால்வை மூத்தானின் குடிவரவு இலாகா வழங்கிய தற்காலிக வீசாப்பத்திரத்தைப் பார்த்து ஏதோ தனது நாட்குறிப்பு ஏட்டில் குறித்துக் கொண்டான்.

                பின்னர் ஒரு பொலிஸ்காரன் இடுப்புத் தோல் பைக்குளிருந்து ஒரு கத்தியை எடுத்து மற்றவனுக்கு ஏதோ கூறிவிட்டுக் கட்டிலின் கீழ்ப் பகுதியிலிருந்த ஓர் இடத்தில் கம்பளத்தைக் கீறி உயர்த்திப் பார்த்தான். அது ஒரு கடவுச் சீட்டு. அதை அவன் எடுத்துக் கொண்டான்.

                கில்லாடிக்குத் திக் என்றுது. ஏன் என்றால் அவன் கள்ளக் கடவுச் சீட்டுத் தொழிலும் செய்கிறவன்.

                திரும்பிப் போகும்பொழுது பொலிசார் நன்றி கூறிவிட்டுப் போனார்கள்.

                நேரம் விரைவாக ஓடியது. நள்ளிரவாகிவிட்டது. மூத்தான் பொலிசிலிருந்து திரும்பாதது கில்லாடிக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. அவன் உள்மனம் தன்பாட்டில் உளறியது.

                'மூத்தான் தான் தப்புவதற்காக எனது போதைப்;பொருள் தொழிலைப் பொலிசுக்குக் காட்டிக் கொடுத்து, அதனால் விடுதலைபெற்று இங்கு வராமல் இல்போட்டில் உள்ள தன் வீட்டுக்கு போயிருக்க வேண்டும். அவனுக்கு உது கைவந்த கலை. இல்லாவிட்டால் அவன் இதுவரையில் இங்கு வந்திருக்க வேண்டும். அதுதான் நடந்ததென்றால் இன்னுஞ் சொற்ப வேளையில் மீண்டும் பொலிஸ் வரும், முழுவீட்டையும் - நிலவறை உள்பட - சல்லடை போடும். நிலவறையில் உள்ள போதைப் பொருள் பொட்டலங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்என்ற பயம் கில்லாடியை வெருட்டத் தொடங்க, குட்டி போட்ட பூனை மாதிரி அவன் வரவேற்பறைக்குள் அங்கும் இங்கும் வெற்றுத் தலையைத் தடவியபடி கையில் மதுக் கோப்பை ஏந்தி அசைந்து மிரண்டு கொண்டிருந்தான். கில்லாடி மிரளுகிறான் என்பது அமிருக்கு விளங்கியது.


                “சால்வை மூத்தான் இப்ப வந்திடுவான். பன்னிரண்டு மணிக்கு மேலே பொலிசில் வைத்திருக்க மாட்டார்கள். மடையன் கவனமாக இருந்திருக்க வேண்டும்;’ என்று அடிக்கடி மனதுள் கூறிக்கொண்டிருந்த கில்லாடி, திடீரென என்ன நடந்திருக்கும் என்று பின் நோக்கித் தனது சிந்தனையைச் செலுத்தியபொழுது முதலிரவு கண்ட பயங்கரக் கனவே அவன் கண்களை அச்சுறுத்தின.

தொடரும்.

No comments:

Post a Comment