50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 1
தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு
அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.
பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு
வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.
வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனிற்கும் சண்டை.
”நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்?
எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே
உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.
சிரிப்பும், வேதனையும் ஒன்றாக! காலத்தின் கோலம்.
ReplyDeleteநன்று
ReplyDeleteஅப்பா தானே வயது போய்விட்ட அவற்றை பேச்சு
ReplyDeleteஅப்பாதானே வயது போன அவற்றை பேச்சு
ReplyDelete